லுங்கி கட்டி வந்தவர்.. ரம்யா பாண்டியன் முன் செய்த ரகளை.. இறுதியில் நடந்த ட்விஸ்ட்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: நீங்கள் காதலர்களாக இருந்தால் உங்கள் காதலுக்கு அன்பை காட்டுங்கள் என்னை போல் சிங்கிளாக இருந்தால் இயற்கையோடு அதிக அன்பைகாட்டுங்கள் என நடிகை ரம்யா பாண்டியன் தெரிவித்துள்ளார்.

Recommended Video

    சென்னை: என்ன நடக்குது? லுங்கி ஆசாமி அட்டகாசம்… ஒரே வார்த்தை... தூள் பண்ணிய ரம்யா பாண்டியன்!

    காதலர் தின நாளில் 143 மரக்கன்று வைத்து குறும்காடு அமைக்கும் பணியில் அம்பத்தூர் தொழிற்பேட்டை உற்பத்தியாளர்கள் சங்கம், கோ க்ரீன் ரோட்டரி சங்கம் மற்றும் கம்மியூணி ட்ரீ அமைப்புடன் சேர்ந்து நடிகை ரம்யா பாண்டியன் அவர்கள் சிறப்பு விருந்தினராக வருகை தந்து கலந்து கொண்டார்.

    மேலும் அங்குள்ள உள்ளூர் பொதுமக்களுடன் சேர்ந்து மரக்கன்றுகள் நட்டு வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார். இளைஞர்களின் கனவு கன்னியாக வலம் வரும் ரம்யா பாண்டியனை காண பலர் ஆர்வம் காட்டினர்.

    பரிசு

    பரிசு

    இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட ரம்யா பாண்டியன் அவர்களை கௌரவிக்கும் விதமாக FALL IN LOVE WITH TREES என்னும் வாசகம் அடங்கிய ரம்யா பாண்டியன் அவர்கள் ஓவியத்தை இயற்கை ஆர்வலர்கள் அன்பளிப்பாக அளித்தனர்.

    பரபரப்பு

    பரபரப்பு

    நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகை ரம்யா பாண்டியனிடம் உள்ளூர்வாசி ஒருவர் என்னிடம் சொல்லாமல் என்ன நடக்கிறது முதலில் என்னிடம் கூறுங்கள் என ரகளையில் ஈடுபட்டார். இதனால் அங்கு சற்று நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    கலகலத்த ரம்யா பாண்டியன்

    கலகலத்த ரம்யா பாண்டியன்

    ஒருவழியாக அவரை சமாளித்த நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் அந்த நிகழ்ச்சிக்கு லுங்கியுடன் வந்தவரை சிறப்பு விருந்தினர் பட்டியலில் சேர்த்து வரிசையில் நிற்க வைத்ததும் அமைதியானார். அவர்களோடு சிரிப்புடன் பேசி ரம்யா பாண்டியன் கலகலத்தார்.

    சிங்கிள்ஸ்க்கு வேண்டுகோள்

    சிங்கிள்ஸ்க்கு வேண்டுகோள்

    இதனிடையே நடிகை ரம்யா பாண்டியன் நிகழ்ச்சியில் பேசும் போது, நீங்கள் காதலர்களாக இருந்தால் உங்கள் காதலுக்கு அன்பை காட்டுங்கள் என்னை போல் சிங்கிளாக இருந்தால் இயற்கையோடு அதிக அன்பைகாட்டுங்கள் என வேண்டுகோள் விடுத்தார்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+