பொங்கல் சிறப்பு ரயில்கள் ரத்து! சென்னை - கோவை ரூட் ரயில்கள்.. தெற்கு ரயில்வே அதிரடி முடிவு
சென்னை: வரும் 19 மற்றும் 21 ஆகிய தேதிகளில் தாம்பரம் முதல் கன்னியாகுமரி வரை இயக்கப்பட இருந்த சிறப்பு ரயில் மற்றும் சென்னை சென்ட்ரல் - கோவை இடையே இயக்கப்பட இருந்த சிறப்பு ரயில் உட்பட 5 சிறப்பு ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. பயணிகளிடையே போதிய வரவேற்பு இல்லாததால், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இயக்கப்பட இருந்த 5 சிறப்பு ரயில்களை ரத்து செய்வதாக ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.
நாட்டில் முக்கிய போக்குவரத்து சேவைகளில் மிக முக்கியமான ஒன்றாக இருப்பது ரயில்வே. நாடு முழுவதும் ரயில்களில் தினமும் லட்சக்கணக்கான மக்கள் பயணித்து வருகின்றனர். குறிப்பாக, பண்டிகை நாட்கள், விடுமுறை நாட்களில் பயணிகளின் கூட்டம் அலைமோதும். இதனால், பண்டிகை நாட்களில் ரயில்வே நிர்வாகம் சிறப்பு ரயில்களை இயக்கி வருகிறது. அந்த வகையில், ஜனவரி 15ஆம் தேதி நாளை பொங்கல் பண்டிகை கொண்டாடப்படும் நிலையில், சொந்த ஊர்களுக்கு மக்கள் சென்று வருகின்றனர்.

இதனை கருத்தில் கொண்டு, பயணிகளுக்காக சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என அறிவித்தது தெற்கு ரயில்வே. சென்னை, கோவை, மதுரை, திருச்சி, சேலம், நெல்லை உள்ளிட்ட முக்கிய இடங்களுக்கு தெற்கு ரயில்வே சிறப்பு ரயில்களை அறிவித்தது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, ஜனவரி 11ஆம் தேதி முதல் ஜனவரி 17ஆம் தேதி வரை சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. அதேபோல, வரும் 19 மற்றும் 21 ஆகிய தேதிகளில் தாம்பரம் முதல் கன்னியாகுமரி வரை சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
வரும் 19 மற்றும் 21 ஆகிய தேதிகளில் தாம்பரம் முதல் கன்னியாகுமரி வரை இயக்கப்பட இருந்த சிறப்பு ரயில் மற்றும் சென்னை சென்ட்ரல் - கோவை இடையே இயக்கப்பட இருந்த சிறப்பு ரயில் உட்பட 5 சிறப்பு ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. பயணிகளிடையே போதிய வரவேற்பு இல்லாததால், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இயக்கப்படவிருந்த 5 சிறப்பு ரயில்களை ரத்து செய்வதாக ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.
தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், தாம்பரத்தில் இருந்து கன்னியாகுமரிக்கு வரும் 19-ந்தேதி மாலை 3.30 மணிக்கு இயக்கப்பட இருந்த சிறப்பு ரயில் (வண்டி எண் 06011),
தாம்பரத்தில் இருந்து நாகர்கோவிலுக்கு 21-ந்தேதி மதியம் 12.30 மணிக்கு இயக்கப்பட இருந்த சிறப்பு ரயில் (06053),
சென்னை சென்டிரலில் இருந்து கோவைக்கு வரும் 19 ஆம்தேதி இரவு 11.25 மணிக்கு இயக்கப்பட இருந்த சிறப்பு ரயில் (06033),
போத்தனூரில் இருந்து சென்னை சென்ட்ரலுக்கு 21 ஆம் தேதி இரவு 12.35 மணிக்கு இயக்கப்பட இருந்த சிறப்பு ரயில் (06024),
சென்னை சென்ட்ரலில் இருந்து போத்தனூருக்கு 21 ஆம் தேதி மதியம் 1.50 மணிக்கு இயக்கப்பட இருந்த சிறப்பு ரயில் (06023) ஆகியவை முழுவதுமாக ரத்து செய்யப்படுகின்றன எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சிறப்பு ரயில்கள் அனைத்தும் தலா 1 முறை மட்டுமே இயக்கப்பட இருந்தன. ஆனால் இந்த ரயில்களில் முன்பதிவு செய்ய பயணிகள் ஆர்வம் காட்டவில்லை. எனவே தெற்கு ரயில்வே இந்த ரயில்களை ரத்து செய்துள்ளது.
-
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
பயிர் கடன் தள்ளுபடியில் விஜய் வைத்த செக்.. 100%, 50% தள்ளுபடிக்கு பின் இருக்கும் ஸ்மார்ட் கணக்கு! -
ஸ்டாலின் கொண்டு வந்த காலை உணவு திட்டம் தொடரும்.. மெனு மாற்றம்.. அமைச்சர் ராஜ்மோகன் உறுதி












Click it and Unblock the Notifications