Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கேஸ் சிலிண்டர் புக்கிங்கில் 35 நாட்கள் இடைவெளி.. புதிய 5 ரூல்ஸ் தெரியுமா? மானியம் வரவில்லைனா உஷார்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சமையல் எரிவாயு சிலிண்டர் பயன்படுத்தும் 100% வாடிக்கையாளர்களுக்கும் தற்போது முக்கியமான கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.. .. குறிப்பாக தகுதி இல்லாத (உயர் வருமானம் போன்ற) பயனாளர்களுக்கு மட்டுமே மானியம் வழங்கப்படாது.. அதேபோல 2 இணைப்புகள் வைத்திருந்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படுவதற்கும் வாய்ப்பு உள்ளது.. இந்த 3 முக்கியமான மாற்றங்களை நீங்கள் உடனே தெரிந்து கொள்ளவில்லை என்றால், உங்கள் எரிவாயு இணைப்பு ரத்து செய்யப்படலாம்.. அதை பற்றி இங்கே சுருக்கமாக பார்க்கலாம்.

ஏற்கனவே நடைமுறையில் உள்ள விதிகள் மீண்டும் கடுமையாக அமல்படுத்தப்படுகின்றன.. அந்தவகையில், உங்கள் வங்கி கணக்கிற்கு வரவேண்டிய மானியம் ஏன் வரவில்லை என்பதற்கான காரணங்கள் தற்போது வெளியாகியுள்ளன.. பலருக்கு மானியம் கிடைக்காமல் போனதற்கு முக்கிய காரணமே, அவர்களுடைய ஆதார் அட்டை மற்றும் வங்கி கணக்கு விவரங்கள் சிலிண்டர் ஏஜென்சியுடன் சரியாக இணைக்கப்படாததுதான்..

lpg gas news 2026 lpg subsidy status check gas cylinder booking changes 2026

இதுமட்டுமல்லாமல், ஒரு வருஷத்திற்கு 10 லட்சம் ரூபாய்க்கு மேல் வருமானம் உள்ளவர்களுக்கு இனிமேல் மானியம் வழங்கப்படாது என்று அரசு அறிவித்துள்ளது.. எனவே, நீங்கள் உடனடியாக உங்கள் கேஒய்சி விவரங்களைச் சரி செய்யவில்லை என்றால் மானியம் கிடைப்பதில் சிக்கல் ஏற்படும்..

டபுள் கேஸ் கனெக்‌ஷன்

ஒரு வீட்டில் ஒருவரின் பெயரில் ஏற்கனவே சிலிண்டர் இணைப்பு இருக்கும்போது, அதே முகவரியில் இன்னொருவரின் பெயரில் புதிய இணைப்பு வைத்திருந்தால் இப்போது சிக்கல் ஏற்படும்.

ஒரே முகவரியில் தவறான அல்லது duplicate இணைப்புகள் இருந்தால் மட்டுமே நடவடிக்கை எடுக்கப்படும்.. இதற்கான சோதனைகள் நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது.. அப்படி கூடுதல் இணைப்புகள் வைத்திருந்தால் அதனை உடனடியாக நீங்களே ஒப்படைத்துவிட வேண்டும்..

சரிபார்ப்பில் டூப்ளிகேட் இணைப்புகள் இருந்தால், அதில் தேவையற்ற இணைப்புகள் மட்டும் ரத்து செய்யப்படலாம்.. உங்களுக்கு அதிக அளவில் அபராதம் விதிக்கப்படவும் வாய்ப்பு உள்ளது.. கேஸ் தட்டுப்பாட்டைத் தவிர்க்கவே இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது..

சிலிண்டர் புக்கிங் ரூல்ஸ்

சிலிண்டர் முன்பதிவு செய்வதில் இப்போது புதிய காலக் கட்டுப்பாடுகள் கொண்டு வரப்பட்டுள்ளன.. நீங்கள் நகரத்தில் வசிப்பவராக இருந்தால், சிலிண்டர் விநியோகம் மற்றும் முன்பதிவில், நிறுவனத்தின் நடைமுறைகளின் அடிப்படையில் இடைவெளி இருக்கலாம்.. இதனால் சிலிண்டர் தீர்ந்து போவதற்கு முன்பே மக்கள் திட்டமிட்டுப் பயன்படுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

இதுதவிர, சிலிண்டர் வாங்கும் போது உங்கள் செல்போனுக்கு வரும் ஓடிபி நம்பரை சொன்னால் மட்டுமே சிலிண்டர் வழங்கப்படும் முறையும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது..

மானியம் சரியா வருதா?

கச்சா எண்ணெய் விலை உயர்ந்து வருவதால் எரிவாயு தட்டுப்பாடு ஏற்படாமல் இருக்க குழாய் வழி எரிவாயு இணைப்புகளை அரசு ஊக்குவித்து வருகிறது.. பொதுமக்களும் எரிவாயுவைச் சிக்கனமாகப் பயன்படுத்த வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள்.

எரிவாயு கசிவு ஏற்படுகிறதா என்பதை அடிக்கடி பரிசோதனை செய்வது மிகவும் அவசியம்.. உங்கள் மானியம் சரியாக வந்து சேர வேண்டும் என்றால், இப்போதே வெப்சைட்டில் அதன் நிலையை சரிபார்க்கவும்.. ஆதார் இணைப்பில் ஏதாவது தவறு இருந்தால் அதையும் உடனே திருத்திக்கொள்ள வேண்டும்.. இந்த மாற்றங்கள் அனைத்தும் எரிவாயு விநியோகத்தைச் சீராக வைத்திருக்கவே கொண்டு வரப்பட்டுள்ளன..!!!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+