சிலிண்டர் தட்டுப்பாடால் தவிக்கும் கேட்டரிங் சர்வீஸ்! கடைசி நேரத்தில் கையை பிசையும் திருமண வீட்டார்
சென்னை: சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக கேட்டரிங் சர்வீஸ் நிறுவனங்கள் கடும் சிரமத்தை சந்தித்து வருகின்றன. இதனால் திருமண விழாக்களில் கடைசி நேரத்தில் சமையல் ஏற்பாடுகள் பாதிக்கப்பட்டதால் திருமண வீட்டார் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.
வரும் 16ஆம் தேதி திருமணம் நடத்த முடிவு செய்யப்பட்ட நிலையில் கேஸ் சிலிண்டருக்கு ஏற்பாடு செய்யுமாறும் திருமண வீட்டாரை சமையல் கலைஞர்கள் நெருக்குவதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளன.

நாளுக்கு நாள் சிலிண்டர் தட்டுப்பாடு நிலவி வரும் நிலையில் திருமணங்கள் உள்ளிட்ட சுப விசேஷங்கள் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. பங்குனி மாதம் வரும் ஞாயிற்றுக்கிழமை பிறக்கவுள்ளதால் முகூர்த்த நாட்களில் சுப விசேஷங்கள் செய்ய மக்கள் முன்கூட்டியே மண்டபங்களை புக் செய்துள்ளார்கள்.
அதுபோல் சமையலுக்கு கேட்டரிங்கிலும் சொல்லியாகிவிட்டது. எனவே கவலையே இல்லாமல் திருமண ஏற்பாடுகளை செய்யலாம் என நினைத்த திருமண வீட்டாருக்கு இடி விழுந்துள்ளது.
அதாவது ஒரு நபருக்கு அடுத்த வாரம் திருமணம் வைத்துள்ள நிலையில் திடீரென எதிர்பாராதவிதமாக கேட்டரிங் நிறுவனத்திடம் இருந்து ஒரு கோரிக்கை வந்துள்ளதாம். அதில் சமையல் சிலிண்டருக்கு தட்டுப்பாடு நிலவுவதால் உங்கள் சைடில் இருந்தும் சிலிண்டர்களுக்கு ஏற்பாடு செய்யுங்கள் என்கிறார்கள்.
ஏற்கனவே திருமண ஏற்பாடுகளை அவசர அவசரமாக செய்து வரும் நிலையில் தற்போது கடைசி நேரத்தில் இது போல் ஒரு நெருக்கடியை சமையல் கலைஞர்கள் கொடுப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளன. ஆனி மாதம் வரை திருமணம் செய்ய முகூர்த்தம் குறிக்கப்பட்டு, மண்டபம், கேட்டரிங்கிற்கு அட்வான்ஸும் கொடுத்துள்ள நிலையில் சிலிண்டர் இல்லாத நிலையால் திருமண வீட்டார் விழிபிதுங்கி உள்ளனர்.
சிலிண்டர் தட்டுப்பாட்டால் எந்தெந்த துறைகளில் பாதிப்பு என்பதை தெரிந்து கொள்ளலாம்.
உணவகங்கள் , ஹோட்டல்கள் துறை
சென்னை, மதுரை, கோயம்புத்தூர் உள்ளிட்ட இடங்களில் பல உணவகங்கள் மெனுவை குறைத்தன (தோசை, பிரியாணி, ஃப்ரைடு ரைஸ் போன்றவை நிறுத்தம்; இட்லி, சாதம், குழம்பு மட்டும்).
சில உணவகங்கள் தற்காலிகமாக மூடின அல்லது ஹாலிடே அறிவித்தன (மார்ச் 11 அன்று பல இடங்களில் "LPG இல்லாததால் இன்று ஹாலிடே" என்ற நோட்டீஸ்).
பொதுமக்கள் அன்றாட உணவு
ஹோட்டல்கள், மெஸ், கேன்டீன்கள் மூடுவதால் அலுவலக ஊழியர்கள், மாணவர்கள், PG-யில் வசிப்பவர்கள், தினக்கூலி தொழிலாளர்கள், முதியோர் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர்.
அம்மா உணவகங்கள் போன்றவை தொடர்ந்து இயங்கினாலும், பொதுவான உணவு கிடைப்பது குறைந்துள்ளது.
பொருளாதாரம், சிறு தொழில்கள் பாதிப்பு
சிறு-குறு உணவகங்கள், தெரு உணவு கடைகள், கேட்டரிங் நிறுவனங்கள் வருமான இழப்பு, ஊழியர்களுக்கு ஊதியம் கொடுக்க முடியாத நிலை. ரயில்வே உணவு, மருத்துவமனை உணவு சேவை பாதிப்பு.
மற்ற துறைகள்
சில தொழிற்சாலைகள் (உணவு பதப்படுத்துதல்) உற்பத்தி குறைவு அல்லது நிறுத்த வாய்ப்பு.
ஆட்டோ/டாக்சி ஓட்டுநர்கள் (LPG ஆட்டோக்கள்) பாதிப்பு (சில இடங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது).
வீட்டு உபயோக எல்பிஜி தட்டுப்பாடு இல்லை என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது, ஆனால் வணிகப் பயன்பாட்டில் மட்டுமே கடுமை. மத்திய அரசு உற்பத்தியை அதிகரித்து, மாற்று இறக்குமதியை (அமெரிக்கா, ஆஸ்திரேலியா) தேடி வருகிறது.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications