சமையல் கேஸ் சிலிண்டர்.. இனிமேல் "அந்த பணம்" தராதீங்க.. பொதுமக்களுக்கு மத்திய அரசு அதிரடி அறிவிப்பு
சென்னை: சமையல் கேஸ் சிலிண்டர் குறித்து மத்திய அரசு முக்கிய அறிவுரையை தந்திருக்கிறது. இதுகுறித்த அறிக்கை ஒன்றும் வெளியாகி உள்ளது.
சமையல் கேஸ் சிலிண்டர் விலை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே வரும்நிலையில், இப்போதுவரை எந்த ஒரு மாற்றமும் இல்லாமல் இருக்கிறது.. கடந்த மாதமாவது சிலிண்டர் விலை குறையும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தக்காளி, அரிசி விலைதான் உயர்ந்துவிட்டது.

இந்த சிலிண்டர் விலையையும் சேர்த்து, சிலிண்டரை டெலிவரி செய்யும் நபர்களுக்கும் பணம் தர வேண்டி உள்ளது.. டெலிவரி கட்டணம் என்று ஏதாவது இருக்கிறதா? இல்லையா என்றுகூட பலருக்கு தெரிவதில்லை. சிலிண்டர் விலையைவிட, கூடுதலாக 50 ரூபாய் கேட்கிறார்கள் டெலிவரி மேன்கள்.. ஆனால், இவர்களுக்கு எப்போதுமே பணம் எதுவும் கொடுக்கத் தேவையில்லை.
கேஸ் சிலிண்டர்: டெலிவரி கட்டணம் தொடர்பாக தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் விளக்கமும் உள்ளது.. நீங்கள் சிலிண்டரை புக்கிங் செய்தால், உங்கள் வீட்டுக்கே அந்த சிலிண்டரை டெலிவரி செய்வது ஏஜென்சியின் பொறுப்பாகும்.
HPCL நிறுவனம் கொடுத்துள்ள விளக்கத்தின்படி, டெலிவரி செய்யும் சமயத்தில் பணம் எதுவும் கேட்கப்பட்டால் கொடுக்கத் தேவையில்லை.. அப்படி கேட்கப்பட்டால் சம்பந்தப்பட்ட வாடிக்கையாளர்கள் புகார் தரலாம் என்று ஏற்கனவே HPCL நிறுவனம் கண்டிப்புடன் கூறியிருந்தது. டெலிவரி மேனுக்கு கொடுக்கும் அந்த கட்டணமானது, நாமாகவே விருப்பப்பட்டு தருவது.. அதை யாரும் கட்டாயப்படுத்த முடியாது. அப்படி கட்டாயப்படுத்தினால், தாராளமாக வாடிக்கையாளர்கள் புகார் கொடுக்கலாம்.
அட்வைஸ்: ஆனால், இப்போதுவரை, டெலிவரி மேனுக்கு பணம் தரப்பட்டுகொண்டுதான் இருக்கிறது. இது அனைத்து மாநிலங்களிலுமே நடக்கிறது.. இந்நிலையில், மத்திய அரசு ஒரு அட்வைஸ் தந்துள்ளது...
பெட்ரோலிய அமைச்சகம் ஒரு அறிக்கை விடுத்துள்ளது. அதில், சிலிண்டர் எடுத்து வரும் ஊழியர்களிடம் ரசீதில் உள்ள தொகையை தவிர, வாடிக்கையாளர் கூடுதல் பணம் தர கூடாது. சிலிண்டரை வீட்டு வாசலில் வினியோகம் செய்வது கட்டாயமாகும். கேஸ் ஏஜென்சிகளுக்கு சென்று சிலிண்டர் எடுக்கும்போது, அதற்குரிய டெலிவரி தொகையை ஏஜென்சிகளிடம் இருந்து பெற்று கொள்ளலாம் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிம்மதி: ஆகவே, இனிமேல், வாடிக்கையாளரே ஏஜென்சிக்கு சென்று சிலிண்டரை எடுத்து கொள்ளும்போது அதற்கு உரிய, 29.26 ரூபாய் போக மீதி தொகை வழங்கினால் போதும்.












Click it and Unblock the Notifications