எல்பிஜி கேஸ் சிலிண்டர் வைத்திருக்கிறீர்களா? சமையல் சிலிண்டரை இன்றே வாங்கிடுங்க.. நாளை தட்டுப்பாடு?
சென்னை: ''பல்வேறு கோரிக்கையை வலியுறுத்தி நாளை அதாவது 27ம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் நடத்தப்படும்'' என்று எல்பிஜி டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் அதிரடியாக அறிவித்துள்ளனர். எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள புதிய ஒப்பந்தத்தில் உள்ள கட்டுப்பாடுகளை நீக்க வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.
பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களின் பாட்டிலிங் நிலையங்களுக்கு, வீட்டு சமையல் கேஸ் கொண்டு செல்லும் பணிக்கு பல்க் LPG டேங்கர் லாரிகள் தொடர்ந்து பயன்படுத்தப்படுகின்றன. எண்ணெய் நிறுவனங்களிடம் ஒப்பந்தம் பெற்ற டேங்கர் லாரி உரிமையாளர்கள் மூலம் இந்த பணிகள் நடந்து வருகின்றன.

நிபந்தனைகள் ஏற்க மறுப்பு
நடப்பாண்டு முதல் வரும் 2030ம் ஆண்டு வரையிலான ஒப்பந்தம் தொடர்பாக, எண்ணெய் நிறுவனங்கள் சமீபத்தில் அறிவிப்புகளை வெளியிட்டிருந்தன.. அதில், ஒரு சில நிபந்தனைகள் தங்களுக்கு ஏற்புடையவையாக இல்லை என்று லாரி உரிமையாளர்கள் அதிருப்தியும், ஆட்சேபம் தெரிவித்தனர். எனினும், அவர்களது ஆட்சேபத்தை எண்ணெய் நிறுவனங்கள் ஏற்காத நிலையில், டேங்கர் லாரிகள் போராட்டம் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து தென் மண்டல எல்.பி.ஜி கேஸ் டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்க தலைவர் சுந்தரராஜன், நாமக்கல்லில் செய்தியாளர்களிடம் சொல்லும்போது, "2025 - 2030ம் ஆண்டுக்கான புதிய ஒப்பந்தத்தை மத்திய அரசின் பொதுத்துறை எண்ணெய் நிறுவனம் அறிவித்தது. இந்த ஒப்பந்தத்தில் இருக்கும் கடுமையான விதிமுறைகளை தளர்த்த வேண்டும் என எண்ணெய் நிறுவன அதிகாரிகளிடம் வலியுறுத்தியும்கூட, எந்த அறிவிப்பும் இதுவரை வெளியிடவில்லை.
நாளை முதல் காலவரையற்ற போராட்டம்
அவர்கள் வெளியிட்டிருந்தது பாதகமான அறிவிப்புகள்.. அதன்படி செயல்பட்டால், நாங்கள் நஷ்டமடைவோம்.. நஷ்டத்திற்காக லாரிகளை இயக்க முடியாது... மொத்தம் 10 இடங்களில் கேஸ் ஏற்றும் இடங்கள் உள்ளன. எனவே, நாளை முதல் அந்த இடங்களில் இருந்து லோடு ஏற்றாமல் லாரிகள் நிறுத்தப்படும்...
காலமுறை வேலை நிறுத்தம் போராட்டம் காரணமாக 4000 LPG டேங்கர் லாரிகள் இயங்காது. அதேபோல, இந்தியா முழுவதிலுமே இதே பிரச்சனைதான் என்பதால், மற்ற டேங்கர் லாரிகள் தரப்பிலும் போராட தயாராக உள்ளனர்" என்றார்.
கேஸ் தட்டுப்பாடு வந்துருமே
தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, ஆந்திரா, கர்நாடகா, தெலங்கானா மாநிலங்களில் நாளை வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெற உள்ளதால், அன்றாடப் பயன்பாட்டில் மிக முக்கியமான கேஸ் சிலிண்டர் வாடிக்கையாளர்களுக்கு சப்ளை செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. எனவே, வீடுகள், ஹோட்டல் உள்ளிட்டவை கேஸ் கிடைக்காமல் அவதிப்படும் நிலைமையும் உருவாகியிருப்பதாக தெரிகிறது.
அதுமட்டுமல்ல, சிலிண்டர் பாட்டிலிங் நிலையங்களுக்கு கேஸ் கொண்டு செல்வது பாதிக்கப்படும்.. இதனால், சிலிண்டர் தட்டுப்பாடுகள் மேலும் ஏற்படலாம். இந்த நெருக்கடியை தவிர்க்க முன்கூட்டியே கேஸ் சிலிண்டரை வாங்கி வைத்துக் கொள்ளுமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
-
இந்தியர்களுக்கு குட்பை.. அமெரிக்காவிற்கே மூட்டையைக் கட்டிய பிரபல நிறுவனம்.. ஐடி ஊழியர்கள் ஷாக் -
“ஆண் உறுப்பின் சைஸை பார்ப்போம்..” பெண் டாக்டர் பேச்சால் சர்ச்சை! சவக்கிடங்கில் இதுதான் நடக்குதா? -
"ஏதோ ரொம்ப தப்பா இருக்கு.." இந்திய பொருளாதாரம் குறித்து சந்தேகம் கிளப்பும் ரகுராம் ராஜன் -
"₹370 பிரியாணி வாங்கி கொடுத்தால் உடலுறவு?" பெரிதாக வெடிக்கும் சர்ச்சை.. களத்தில் இறங்கிய போலீஸ் -
அதானி நிறுவனத்தின் அசுர வளர்ச்சி! சோலார் பேனல் உற்பத்தியில்.. புதிய உச்சம்! -
சீனாவின் உதவியுடன்.. விண்வெளியில் இருந்தபடி இந்தியாவை உளவு பார்க்கும் பாகிஸ்தான்.. பகீர் -
வாழ வைத்த இந்தியா! 22 வயசுல பெங்களூர் வந்த அமெரிக்கர்.. இன்னைக்கு டாப் கோடீஸ்வரர்! எப்படினு பாருங்க -
இனி "இவங்க" யாரும் பெட்ரோல் பங்கில் டீசலை வாங்க முடியாது.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு -
பெட்ரோல் விலை 100க்கு கீழ் வருமா? மத்திய அரசின் வரி குறைப்பால் இந்தியாவில் என்ன நடக்க போகிறது? -
டென்ஷனான இந்தியா.. அமெரிக்க தூதரக பொறுப்பாளரை நேரில் அழைத்து சம்மன்.. பரபரப்பு சம்பவத்தின் பின்னணி -
இந்தியாவை கபளீகரம் செய்த சரிவு.. நிலைமை ரொம்ப மோசம்.. இது தொடர்ந்தால் டேஞ்சர் தான்! -
"அலறிய அபாய சைரன்.." நடுக்கடலில் தத்தளிக்கும் இந்தியர்கள்.. கப்பல் மீது பாய்ந்த ஏவுகணை.. பதற்றம்












Click it and Unblock the Notifications