இந்திய கப்பல்களில் வந்த 92,700 மெட்ரிக் டன் எல்பிஜி! ஆனால் இது பத்தாது! ப.சிதம்பரம் சொன்ன பாயிண்ட்
சென்னை: ஹார்முஸ் நீரிணையை தாண்டி, வெற்றிகரமாக 2 இந்திய கப்பல்கள் எல்பிஜியை கொண்டு வந்திருக்கின்றன. மொத்தம் 92,700 மெட்ரிக் டன் எல்பிஜி வந்திருந்தது. ஆனால், இது இந்தியாவுக்கு வெறும் ஒன்றரை நாட்களுக்கு மட்டுமே போதுமானது என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் தெரிவித்திருக்கிறார்.
இரண்டு கப்பல்கள் இந்தியாவுக்கு வந்ததை மத்திய அரசு பெருமையாக பேசி வருகிறது. ஆனால், உண்மையில் இந்த கப்பல்களில் வந்த சரக்கு, போதுமானது அல்ல என்று எதிர்க்கட்சிகள் சுட்டிக்காட்டியிருக்கின்றன.

என்ன பிரச்சனை?
முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் இது குறித்து தனது x பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது, "கூகுள் பின்வரும் தகவல்களை உருவாக்கியுள்ளது. மார்ச் 14 முதல் 17ம் தேதி வரை வெளியான அறிக்கைகளின் அடிப்படையில், இந்தியக் கொடியை ஏந்திய 'ஷிவாலிக்' மற்றும் 'நந்தா தேவி' ஆகிய இரண்டு LPG சரக்குக் கப்பல்கள், மொத்தம் 92,700 மெட்ரிக் டன்கள் அளவிலான LPG-யைச் சுமந்துகொண்டு, ஹார்முஸ் நீரிணையை வெற்றிகரமாகக் கடந்துள்ளன என்பது தெரிய வந்திருக்கிறது.
• கொண்டு வரப்பட்ட மொத்த LPG அளவு: 92,700 மெட்ரிக் டன்கள் (ஒவ்வொரு கப்பலும் 46,000 மெட்ரிக் டன்களுக்கும் அதிகமான அளவைக் கொண்டு வந்தது).
• பூர்த்தி செய்யப்படும் கால அளவு: இந்த அளவானது, இந்தியாவின் மொத்த சமையல் எரிவாயுத் தேவையில் ஏறத்தாழ 1.25 முதல் 1.6 நாட்களுக்கான தேவைக்கு இணையானதாகும்" என்று தெரிவித்திருக்கிறார்.
இந்தியாவுக்கு பற்றாக்குறை
அதாவது இந்த அளவு பிரமாண்டமாக தெரிந்தாலும், வெறும் ஒன்றரை நாட்களுக்கு மட்டுமே இது போதுமானதாக இருக்கும் என்று தெரிவித்திருக்கிறார். மேலும், 2 கப்பல்களில் எல்பிஜி வந்து சேர்ந்திருப்பது என்பது சிறிய தொடக்கம்தான். நாம் இன்னும் நீண்ட தூரம் பயணிக்க வேண்டியிருக்கிறது. எனவே சமையல் எரிவாயு கிடைப்பதில் இன்னும் சிக்கல் நிலவுகிறது என்றும் கூறியிருக்கிறார்.
போர் நிறுத்தப்பட வேண்டும்
அதேபோல, "கச்சா எண்ணெய், LNG மற்றும் LPG ஆகியவற்றை ஏற்றிச் செல்லும், இந்தியாவை நோக்கி வர வேண்டிய மேலும் 22 கப்பல்கள் ஹார்முஸ் நீரிணையை கடப்பதற்காகக் காத்திருக்கின்றன என்பது ஒரு நல்ல மற்றும் வரவேற்கத்தக்க செய்தியாகும். ஈரான் மீது திரு. டிரம்ப் தொடுத்துள்ள போர் உலகம் முழுவதும் ஒரு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. இந்தப் போர் நிறுத்தப்பட வேண்டும்" என வலியுறுத்தியுள்ளார்.
-
டாக்டர் சீட்டு இல்லையா? இனி சிரப் வாங்கவே முடியாது.. மத்திய அரசு புதிய கட்டுப்பாடு.. பின்னணி -
இந்தியாவில் டெலிகாரம் செயலிக்கு தடை.. ஜூன் 22 வரை யூஸ் செய்ய முடியாது! நீட் லீக் விவகாரத்தில் அதிரடி -
கரப்பான் பூச்சி நிறுவனரை தாக்கிய ஆர்எஸ்எஸ் அமைப்பினர்? திப்கே பகிரங்க குற்றச்சாட்டு.. என்ன நடந்தது -
சூர்யவன்ஷியிடம் வம்பிழுத்த இலங்கை வீரர்கள்.. டீ-சர்ட்டை பிடித்து தள்ளி.. மைதானத்தில் பரபரப்பு! -
இந்தியாவே இந்த 4 மாநிலத்தை தான் நம்பியிருக்கு.. உபி, பீகார் நிலைமை ரொம்ப மோசமா இருக்கே..! -
அதானிக்கு கிடைத்த மெகா அங்கீகாரம்.. உலகின் அழகான விமான நிலையங்கள் பட்டியலில் 2 இந்திய ஏர்போர்ட்டுகள் -
அலறும் சீனா - பாகிஸ்தான்.. இந்தியாவிடம் இனி வாலாட்ட முடியாது.. கைக்கு வந்த LRLACM ஏவுகணை.. வெற்றி -
தவெகவுக்கு முக்கியத்துவம்?.. மாங்குடியில் ப.சிதம்பரம் செய்த சம்பவம்..அதிருப்தியில் திமுக நிர்வாகிகள் -
வளைகுடா போர் நிறுத்தத்தால் மிடில் கிளாஸ் மக்களுக்கு என்ன லாபம்? சத்தமில்லாமல் மாற போகும் 5 மேட்டர் -
ஹார்முஸை பத்திரமாக கடந்த முதல் இந்திய டேங்கர் திஷா.. அமைதி ஒப்பந்தம் வந்தவுடனேயே நடந்த மாற்றம்! -
60 எச்சரிக்கை.. 8 முறை விமானம் மூலம் வார்னிங்.. அமெரிக்கா தாக்குதலில் இந்தியர்கள் பலியானது எப்படி? -
இந்தியர்கள் உட்பட வெளிநாட்டினருக்கு மட்டும் தடை.. AI வைத்து அமெரிக்கா ஆடும் கேம்? பின்னணி












Click it and Unblock the Notifications