சென்னை பல்லாவரம் ஜிஎஸ்டி சாலையில்..சட்டென தீப்பிடித்து எரிந்த சொகுசு கார்.. போக்குவரத்து பாதிப்பு
சென்னை: சென்னை பல்லாவரம் ஜிஎஸ்டி சாலையில் ஓடும் கார் திடீரென தீப்பற்றி எரிந்ததால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். நல்ல வேளையாக காரில் இருந்தவர்கள் உடனடியாக இறங்கிவிட்டதால் உயிர் தப்பினார். கார் தீப்பற்றி எரிவது தொடர்பான காட்சிகள் பார்ப்போரை அதிர வைத்துள்ளது.
ஓடும் கார்கள்தீப்பிடித்து எரியும் சம்பவங்களை அடிக்கடி நாம் கேள்வி பட்டிருப்போம். அப்படி கார்கள் ஏதாவது ஒரு தொழில் நுட்ப காரணமாகவோ அல்லது என்ஜின் அதிகப்படியாக சூடானதாலோ, கார்களின் என்ஜினில் முன்பக்கம் புகை வருகிறது. சட்டென மொத்த காரும் தீப்பிடித்து எரிந்து விடுகிறது. சில நொடிகளில் சுதாரித்து வெளியேறுபவர்கள் தப்பிக்கிறார்கள்.

சில நேரம் கார்களின் லாக் ஓபன் ஆகாமல் போகும் நிகழ்வுகள் உண்டு.. அப்படியான சமயங்களில் கார்களை விட்டு சில நிமிடங்களில் வெளியே வர முடியாமல் தீயில் சிக்கி உயிரிழக்கும் சம்பவங்கள் நடந்து விடுகிறது. அப்படி சென்னையில் கூட சில சம்பவங்கள் நடந்திருக்கிறது.
சென்னையில் நேற்று இரவு பரபரப்பான பல்லாவரம் ஜிஎஸ்டி சாலையில் ஸ்கார்பியோ கார் ஒன்று சென்று கொண்டிருந்தது. அந்த காரை காஞ்சிபுரத்தை சேர்ந்த சாமு என்பவர் ஓட்டி சென்று கொண்டிருந்தார். திடீரென காரின் முன்பகுதியில் புகை வரவே, காரை நிறுத்தி உள்ளே இருந்தவர்கள் கீழே குதித்து தப்பினார்கள். காரை ஓட்டி வந்த சாமுவும் சமயோகிதமாக குதித்து தப்பினார். காரில் இருந்தவர்கள் இறங்கிய சில நொடிகளிலேயே கார் மளமளவென தீப்பிடித்து எரிய தொடங்கியது.
கார் பயங்கரமாக தீப்பிடித்து எரிந்ததை கண்டு பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். சில நிமிடங்களில் கார் முற்றிலும் எரிந்து சேதமானது.இந்த கார் தீ விபத்து காரணமாக பல்லாவரம் ஜிஎஸ்டி சாலையில் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது.தகவல் அறிந்து வந்த தீயணைப்பு படையினர் காரை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சரி செய்ய உதவினர். இந்த சம்பவம் காரணமாக சென்னை பல்லாவரம் ஜிஎஸ்டி சாலையில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னையை போலவே கன்னியாகுமரி மாவட்டத்திலும் ஓடும் காரில் தீப்பிடித்தது. திருவட்டார் பகுதியை சேர்ந்த 45 வயதாகும் பென்னி என்பவர் நேற்று முன்தினம் தனது சொகுசு காரில் நாகர்கோவில் சென்றுள்ளார்.
இரவு 9 மணி அளவில் இரணியல் வள்ளி ஆற்றின் கரை பகுதியில் வந்து போது காரின் முன்பக்கம் என்ஜின் பகுதியில் புகை வந்துள்ளது. உனடியாக காரை ஓரமாக நிறுத்திவிட்டு உடனடியாக இறங்கினார்.. அதேநேரம கார் மளமளவென தீப்பற்றி எரிந்தது. உடனே பொதுமக்கள் தண்ணீர் விட்டு தீயை அணைக்க முயற்சி செய்தனர்.
அதுமட்டுமின்றி இதுகுறித்து திங்கள் நகர் தீயணைப்புநிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். உடனே தீயணைப்பு நிலைய அலுவலர் ஜான்வின்ஸ் மற்றும் வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
-
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications