Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

விஜய்க்கு உள்ள சொகுசு திமுக, அதிமுகவிற்கு சுத்தமாக இல்லை.. அப்படியும் கோட்டை விடுகிறாரா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக அரசியலில் காமராஜர், அண்ணா, கருணாநிதி, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா என ஆளுமைகள் கோலோச்சிய காலத்திற்குப் பிறகு, ஒரு மிகப்பெரிய வெற்றிடத்தை நிரப்ப விஜய் களமிறங்கி இருக்கிறார். பொதுவாக, அதிமுக மற்றும் திமுக போன்ற பாரம்பரியக் கட்சிகள் தங்கள் தொண்டர்களைத் திரட்ட பெரும் மெனக்கெடல்களைச் செய்ய வேண்டிய நிலை இருக்கிறது ஆனால், விஜய்க்கு இருக்கும் அந்த "சொகுசு" (மக்களே தேடி வந்து பார்ப்பது) இந்த இரு கட்சிகளுக்கும் இப்போது இல்லை என்பது நிதர்சனம். ஆனால் அப்படியான விஜய்யின் 'தனித்துவ பலம்' பலவீனமாக மாறுகிறதா? என்று அரசியல் நிபுணர்கள் கேள்வி எழுப்புகிறார்கள்.

2026 சட்டசபை தேர்தல் தேதி இன்னும் ஓரிரு வாரங்களில் அறிவிக்கப்பட உள்ளது. சட்டசபை தேர்தல் தேதி அறிவிப்பை எதிர்பார்த்தே திமுக, அதிமுக கூட்டணி கணக்குகளை தீர்மானிக்கும் முடிவில் இறங்கி உள்ளன. ஒரு பக்கம் பிரச்சாரம் செய்ய தயாராக மாறினாலும், மறுபக்கம், திமுக, அதிமுக இரண்டுமே வியூகங்களை வகுப்பதில் கில்லாடிளாக இருக்கிறார்கள். அடிமட்ட அளவில் பலம் உள்ளதால், எப்படி வாக்காளர்களை அணுக வேண்டும் என்பது இருகட்சிகளுக்குமே நன்றாகவே தெரியும்.

Luxury politics that Vijay has got is not available to DMK and AIADMK but is he leaving the fort

கரூர் சம்பவம்

இப்போது அதிமுக, திமுக இரண்டுக்குமே பிரச்சனையாக உள்ள விஷயம் என்றால் அது விஜய்யின் அரசியல் வருகை தான். தவெக தலைவர் விஜய், எங்கு சென்றாலும் கட்டுக்கடங்காத கூட்டம் வருகிறது. அவரை பார்க்க போய் 41 பேர் கரூரில் இறந்துள்ளனர். அப்படியான சூழலிலும் விஜய்யை அவரது ரசிகர்கள் விட்டுக்கொடுக்கவில்லை. 41 பேர் இறந்த போது, அவர்களை நேரில் போய் ஆறுதல் சொல்லாமல், சென்னை வரவழைத்து ஆறுதல் கூறினார். அதனையும் அவரது ரசிகர்கள் மற்றும் கட்சியினர் வரவேற்றார்கள்.

ஊடகங்கள் காலி செய்திருக்கும்

இந்நேரம் இப்படி எடப்பாடி பழனிசாமியோ அல்லது ஸ்டாலினோ கரூர் மாதிரியான சம்பவத்தை சந்தித்து இருந்தால் அல்லது அவர்கள் நேரில் போய் பார்க்காமல் போயிருந்தால், அரசியல் ரீதியாக தாங்க முடியாத இழப்பை சந்தித்து இருப்பார்கள். ஊடகங்கள் அவர்களை சும்மா விட்டிருக்காது. மொத்த ஊடகமும் காலி செய்திருக்கும். அப்படித்தான் நடந்திருக்கும். ஆனால் விஜய்க்கு அந்த அளவிற்கு நடக்கவே இல்லை. அவரது ரசிகர்களும், கட்சியினரும், விஜய்யின் பக்கமே நின்றார்கள்.

விஜய்க்கு பலம் என்ன

விஜய்யை பொறுத்தவரை உணர்வுப்பூர்வமான ஒரு ரசிகர் பட்டாளம் அவருக்குப் பின்னால் இருப்பது விஜய்க்கு இருக்கும் மிகப்பெரிய பலம். இன்றும் அவர் எங்கு சென்றாலும் அவரை ஒருமுறை பார்க்கத் துடிக்கும் அந்த "வெறித்தனம்" ஒரு அலை போல வீசுகிறது. திமுக, அதிமுகவின் இரண்டாம் கட்டத் தலைவர்களுக்கோ அல்லது தற்போதைய சூழலில் அக்கட்சிகளுக்கோ இந்த அளவிலான தன்னெழுச்சியான மக்கள் திரள் கிடைப்பது அரிதாகிவிட்டது. ஏனெனில் விஜய் ரசிகர்கள் இல்லாத கிராமமே இல்லை.. திமுக, அதிமுகவிற்கு கட்சி ரீதியாக அடிமட்ட அளவில் தொண்டர்கள் எப்படி உள்ளார்களோ, அதுபோல் குக்கிராமத்தில் கூட தவெகவிற்கு பலம் உள்ளது. விஜய்யின் ரசிகர்கள் இருக்கிறார்கள் என்பது மறுக்க முடியாத உண்மை

கோட்டை விடப்படுகிறதா 'நடை பயணம்'

இவ்வளவு பெரிய மக்கள் ஆதரவையும், இளைய தலைமுறையின் உத்வேகத்தையும் கையில் வைத்திருக்கும் விஜய், இன்னும் ஏன் மக்களை நோக்கி நேரடியாக இறங்கவில்லை என்ற கேள்வியை அரசியல் நிபுணர்கள் எழுப்புகிறார்கள். இது தொடர்பாக அரசியல் நிபுணர்கள் கூறுகையில், அரசியல் என்பது வெறும் திரையில் தோன்றுவது அல்லது மேடைப் பேச்சோடு முடிந்துவிடுவதல்ல. மக்களுடன் மக்களாக அமர்ந்து பேசுவது, அவர்களது குறைகளைக் கேட்பதுதான் ஒரு தலைவனை "மக்களின் தலைவனாக" மாற்றும்.

நடை பயணத்தின் அவசியம்

தமிழக அரசியலில் நடை பயணம் என்பது ஒரு 'கேம் சேஞ்சர்' ஆக இருந்துள்ளது எம்.ஜி.ஆர் முதல் ஸ்டாலின் வரை அனைவரும் மக்களை நேரில் சந்தித்துதான் ஆட்சிக் கட்டிலைப் பிடித்தார்கள். ஆட்சிக்கு வரவிரும்பும் பாஜகவின் அண்ணாமலையும் நடை பயணம் மேற்கொண்டார். விஜய் போன்ற ஒரு பெரிய நட்சத்திரம் நடை பயணம் மேற்கொண்டால், அது தமிழக அரசியலில் ஒரு மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை.

'டிஜிட்டல்' அரசியலும் 'நேரடி' அரசியலும்

விஜய் தற்போது ஒரு பாதுகாப்பான தூரத்திலிருந்தே அரசியலை அணுகுவதாகத் தெரிகிறது. ஆனால், அதிமுக மற்றும் திமுக ஆகிய கட்சிகள் அடிமட்ட அளவில் பலமாக இருக்கின்றன இந்த பலத்தை உடைக்க வேண்டுமானால், விஜய் தனது 'சொகுசு மண்டலத்தை' விட்டு வெளியே வர வேண்டும். ரசிகர்கள் அவரை பொதுவாக காப்பாற்றுவார்கள், ஆனால் மக்கள் விஜய்யை அங்கீகரிக்க வேண்டும் என்றால் அவர் நேரடியாக போய் மக்களின் வீட்டு வாசலில் நிற்க வேண்டும் " என்கிறார்கள் அரசியல் நிபுணர்கள்.

ரசிகர் மன்ற கொண்டாட்டமாக முடிந்துவிடும்

விஜய்க்கு இருக்கும் அந்த ஈர்ப்பு விசை ஒரு வரம் என்று கூறும் அரசியல் நிபுணர்கள், அந்த வரத்தை வெறும் அறிக்கைகளோடும், கூட்டங்களோடும் சுருக்கிக் கொள்ளாமல், ஊர் ஊராகச் சென்று மக்களைத் தொட்டுப் பேசும் ஒரு 'மக்கள் பயணத்தை' அவர் தொடங்கினால், அது திமுக, அதிமுக ஆகிய இரு திராவிடக் கட்சிகளுக்கும் மிகப்பெரிய சவாலாக அமையும். அதைச் செய்யத் தவறும் பட்சத்தில், இந்த மிகப்பெரிய மக்கள் ஆதரவு என்பது வெறும் 'ரசிகர் மன்றக் கொண்டாட்டமாகவே' முடிந்துவிடக் கூடிய அபாயம் உள்ளது என்கிறார்கள் அரசியல் நிபுணர்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+