பிரபல பாடலாசிரியர் மகள் தூக்கிட்டு தற்கொலை.. திரையுலகினர், ரசிகர்கள் அதிர்ச்சி!
சென்னை : பிரபல திரைப்பட பாடலாசிரியர் கபிலனின் மகள் தூரிகை, வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தற்கொலை செய்துகொண்ட தூரிகையின் உடல் சாலிகிராமம் தனியார் மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. இந்த தற்கொலைச் சம்பவம் தொடர்பாக சென்னை அரும்பாக்கம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பாடலாசிரியர் கபிலனின் மகள் தற்கொலை செய்துகொண்ட சம்பவத்தைத் தொடர்ந்து திரையுலகினரும், ரசிகர்களும் அதிர்ச்சியையும், வேதனையையும் வெளிப்படுத்தி வருகின்றனர்.

பாடலாசிரியர் கபிலன்
கவிஞரும், பாடலாசிரியருமான கபிலன், 50க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் பாடல்கள் எழுதியிருக்கிறார். ரஜினிகாந்த், விஜய், அஜித் என பல முன்னணி நடிகர்களின் படங்களுக்கு பாடல்கள் எழுதி இருக்கிறார். தசாவதாரம் திரைப்படத்தில் நடிகர் கமல்ஹாசனுடன் நடித்தும் இருக்கிறார் கபிலன். கபிலன் சென்னை அரும்பாக்கம் எம்.எம்.டி.ஏ பகுதியில் தனது குடும்பத்தினருடன் வசித்து வந்தார். அவரது மகள் தூரிகை சற்றுமுன் அவரது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

தூரிகை
கபிலனின் மகள் தூரிகை ஆடை வடிவமைப்பாளராகவும், எழுத்தாளராகவும் இருந்து வந்தார். இவர் 'Being Women Magazine' எனும் இதழையும், 'The Label Keera' எனும் ஆடை வடிவமைப்பகத்தையும் நடத்தி வந்தார். இந்நிலையில், அவர் சற்று முன்பு தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தற்கொலை
தற்கொலை செய்துகொண்ட தூரிகையின் உடல் சாலிகிராமம் தனியார் மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த தற்கொலைச் சம்பவம் தொடர்பாகவும், தற்கொலைக்கான காரணம் என்ன என்பது குறித்தும் சென்னை அரும்பாக்கம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திரையுலகினர் அதிர்ச்சி
பாடலாசிரியர் கபிலனின் மகள் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவத்தைக் கேள்விப்பட்ட திரையுலகினரும், ரசிகர்களும் தங்கள் அதிர்ச்சியையும், வேதனையையும் வெளிப்படுத்தி வருகின்றனர்.
-
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
பயிர் கடன் தள்ளுபடியில் விஜய் வைத்த செக்.. 100%, 50% தள்ளுபடிக்கு பின் இருக்கும் ஸ்மார்ட் கணக்கு! -
ஸ்டாலின் கொண்டு வந்த காலை உணவு திட்டம் தொடரும்.. மெனு மாற்றம்.. அமைச்சர் ராஜ்மோகன் உறுதி












Click it and Unblock the Notifications