தூரிகையை நினைவிருக்கா.. 28 வயதில் தற்கொலை செய்தாரே.. தந்தை கவிஞர் கபிலன் உருக்கமான பதிவு
சென்னை: பாடலாசிரியர் கபிலன் தனது மகள் தூரிகையை நினைத்து உருக்கமான ஒரு பதிவை போட்டுள்ளார். ரசிகர்கள் ஆறுதல் கூறி வருகிறார்கள்.
கவிஞரும் பாடலாசிரியருமான கபிலன் 50 -க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் பாடல்கள் எழுதியிருக்கிறார். ரஜினிகாந்த், விஜய், அஜித் என பல முன்னணி நடிகர்களின் படங்களுக்கு கபிலன் பாடல்களை எழுதியுள்ளார்.

தசாவதாரம் திரைப்படத்தில் நடிகர் கமலுடன் கபிலன் நடித்தும் இருந்தார். இந்த நிலையில் கபிலன் சென்னை அரும்பாக்கம் எம்எம்டிஏ பகுதியில் தனது குடும்பத்தினருடன் வசித்து வந்தார். அவரது மகள் தூரிகை கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் அவரது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
கபிலனின்மகள் தூரிகை ஆடை வடிவமைப்பாளராகவும் எழுத்தாளராகவும் இருந்தார். இவர் Being Women Magazine' எனும் இதழையும், 'The Label Keera' எனும் ஆடை வடிவமைப்பகத்தையும் நடத்தி வந்தார். இந்த நிலையில் தூரிகை ஏன் தற்கொலை செய்து கொண்டார் என தெரியவில்லை.
அவருடைய திருமணத்திற்கு பெற்றோர் வற்புறுத்தியதால் தூரிகை தற்கொலை செய்து கொண்டதாக தகவல்கள் வெளியாகின. ஆனால் இவற்றில் எந்த அளவுக்கு உண்மை என தெரியவில்லை. கபிலன் மகள் தான் நடத்தி வந்த பத்திரிகை பெண்களைக் கொண்டாடுவதற்காக என பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.
மகள் இறந்த துக்கத்தில் மிகவும் உடைந்து போயிருந்த கபிலன் தற்போது மெல்ல மெல்ல மீண்டு வந்து ரஜினியின் லால் சலாம் படத்திற்கு பாடல் வரிகளை எழுதியுள்ளார். இந்த நிலையில் அவர் தனது மகள் தூரிகை குறித்து ஒரு போஸ்ட் வெளியிட்டுள்ளார். அதில் தனது மகளின் பிறந்தநாளுக்கு வாழ்த்துகளை கபிலன் தெரிவித்துள்ளார்.

அந்த போஸ்ட்டில் அவர் கூறியிருப்பதாவது: மகள் தூரிகைக்கு அன்பான பிறந்த நாள் வாழ்த்துகள்! என குறிப்பிட்டுள்ளது. இவரது போஸ்ட்டிற்கு பலர் வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர். அது போல் மகள் எங்கிருந்தாலும் உங்களுடன் இருப்பார், எனவே அவரை நினைத்து வருத்தமடையாமல் உங்களுக்கு பிடித்த கவிதை பணியில் கவனம் செலுத்துங்கள் என ஆறுதல் கூறியுள்ளனர்.
தூரிகை இறந்த போது அவருக்கு 28 வயதுதான். இத்தனை சிறிய வயதில் , வாழ வேண்டிய வயதில் மகளின் இழப்பீடு மிகவும் கொடூரம் என்றும் இந்த நிலை யாருக்கும் வரக் கூடாது என்றும் நெட்டிசன்கள் ஆறுதல் கூறி வருகிறார்கள். மே 22 ஆம் தேதி தூரிகையின் பிறந்தநாள்.
-
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா? -
சேலத்தில் விபச்சாரத்தில் தள்ளப்பட்ட 50 பெண்கள்? பல ஆபாச வீடியோக்கள்! தவெக மணிகண்டன் சிக்கியது எப்படி -
"காலம் எனக்கு ஆப்பு வைத்து விட்டது.." கடவுள் தான் காப்பாற்றினாரு..! பாடகி ராஜலட்சுமி உருக்கம் -
திமுக மகளிரணி கூட்டத்திற்கு வந்து! வரவேற்க யாரும் இல்லாததால் திரும்பிச் சென்ற துரைமுருகன் -
ரூ.115 லட்சம் கோடி சொத்து இருந்து என்ன பயன்.. எலான் மஸ்க் வீட்டை பார்த்தீங்களா.. ஒரு 3BHK வீட்டை விட சிறியது? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது -
விவாகரத்து பேப்பர்களை கிழித்தெறிந்து கணவரை கட்டி பிடித்த மனைவி! கோர்ட் வாசலில் நடந்த உருக்கமான செயல்












Click it and Unblock the Notifications