மும்மொழிக் கொள்கையை ஏற்றால்தான் நிதி.. விஷத்தைச் சாப்பிட்டால்தான் சோறு போடுவோம் என்பதா? வைரமுத்து

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாடு அரசு மும்மொழிக் கொள்கையை ஏற்றால்தான் நிதி தருவோம் என மத்தியில் ஆளும் பாஜக தலைமையிலான கூட்டணி அரசு நிர்பந்தம் செய்வது என்பது விஷத்தைச் சாப்பிட்டால்தான் சோறு போடுவோம்
என்பது போன்றது என கவிஞர் வைரமுத்து கடுமையாக விமர்சித்துள்ளார்.

மும்மொழிக் கொள்கை திணிப்பு தொடர்பாக தமது எக்ஸ் பக்கத்தில் கவிஞர் வைரமுத்து பதிவிட்டுள்ளதாவது:

hindi dmk vairamuthu

இந்தி என்ற மொழி
தன்னளவில் இயங்குவது
அதன் உரிமை

இன்னொரு
தேசிய இனத்தின்மீது
திணிக்கப்படும்போது
அது புல்லுருவிபோல்
உள்ளிருந்து
தாய்மொழியின்
உயிரை உறிஞ்சிவிடும்

இந்தியின்
ஆதிக்கம் அதிகமான
மராத்திபோன்ற மொழிகளுக்கு
நேர்ந்த கதி அதுதான்

தமிழுக்கும்
அது நேர்ந்துவிடக்கூடாது
என்றுதான்
மும்மொழிக் கொள்கையை
மும்முரமாய் எதிர்க்கிறோம்

மும்மொழிக் கொள்கையை
ஏற்றால்தான் நிதிதருவோம்
என்பது
விஷத்தைச் சாப்பிட்டால்தான்
சோறு போடுவோம்
என்பது போன்றது

ஏற்றுக்கொள்ள முடியாது

தமிழ்நாட்டு அரசின்
நிலைப்பாட்டோடு
தமிழர்கள் கெட்டியாக
ஒட்டி நிற்கிறார்கள்

அறிஞர் அண்ணாவும்
உடன் இருக்கிறார்

இவ்வாறு கவிஞர் வைரமுத்து பதிவிட்டுள்ளார்.

hindi dmk vairamuthu

மும்மொழிக் கொள்கை திணிப்பும் நிதி மறுப்பும்

மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கை மும்மொழிக் கொள்கையை மாநிலங்களில் திணிக்கிறது. இதனை தமிழ்நாடு அரசு ஏற்க மறுத்து வருகிறது. இதனால் தமிழ்நாட்டுக்கு தர வேண்டிய கல்வித்துறைக்கான நிதியை மத்திய அரசு தராமல் நிலுவையில் வைத்து வருகிறது. இது தொடர்பாக அண்மையில் கருத்து தெரிவித்த மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திரன், தமிழ்நாடு அரசு மும்மொழிக் கொள்கையை ஏற்க மறுக்கிறது; அதனால் நிதியை தர மறுக்கிறோம் என பேசியது பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய நிதி அமைச்சர் தர்மேந்திர பிரதானின் இந்தப் பேச்சுக்கு தமிழ்நாட்டில் பாஜக தவிர அனைத்து அரசியல் கட்சிகளும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. ஆளும் திமுக கூட்டணி கட்சிகள் இன்று போராட்டம் நடத்துகின்றன. தமிழ்நாட்டின் பல பகுதிகளில் மாணவர்கள் தொடர் போராட்டங்களை முன்னெடுத்தும் வருகின்றனர். இந்த நிலையில் கவிஞர் வைரமுத்துவும் மும்மொழிக் கொள்கை திணிப்புக்கு எதிராக தமது குரலை வெளிப்படுத்தி இருக்கிறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+