சிட்டுக் குருவி முத்தம் கொடுத்த போது எனக்கு முதல் மீசை முளைத்தது! பி.சுசீலாவுக்கு வைரமுத்து வாழ்த்து
சென்னை: பாடகி பி.சுசீலாவின் கலை பயணத்தை வாழ்த்தி கவிஞர் வைரமுத்து கவிதை எழுதியுள்ளார்.
தமிழ் சினிமாவில் பழம்பெரும் பாடகி பி.சுசீலா. இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் பல ஆயிரக்கணக்காண பாடல்களை பாடியுள்ளார். இவர் ஆந்திராவை சேர்ந்தவராக இருந்தாலும் தமிழில் சிறப்பாக பாடினார்.

இவரது திறமையை பாராட்டி கம்பன் புகழ் விருது, பத்மபூஷன் விருது, தேசிய விருது , தமிழக அரசின் கலைமாமணி விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளை பெற்றுள்ளார். இந்த நிலையில் பாடகி சுசீலாவின் திறமையை பாராட்டும் வகையில் டாக்டர் ஜெ ஜெயலலிதா இசை மற்றும் கவின்கலைப் பல்கலைக்கழகம் சார்பில் சுசீலாவுக்கு மதிப்புறு முனைவர் பட்டம் வழங்கி கவுரவிக்கப்பட்டது.
பாடகி சுசீலாவின் இருக்கைக்கே சென்று அவருக்கான முனைவர் பட்டத்தை முதல்வர் ஸ்டாலின் வழங்கியிருந்தார். மேடையில் பேசிய ஸ்டாலின், தான் சுசீலாவின் தீவிர ரசிகர் என்று கூறிய அவர் அவரது பாடலை இரு வரிகள் பாடிக் காட்டினார். அதாவது நீ இல்லாத உலகத்திலேயே நிம்மதி இல்லை. உன் நினைவில்லாத இதயத்திலேயே சிந்தனை இல்லை. காயும் நிலா வானில் வந்தால் கண் உறங்கவில்லை என்ற பாடலை பாடினார்.
நீ
— வைரமுத்து (@Vairamuthu) November 23, 2023
மலர்ந்தும் மலராத பாடியபோது
என் பாதிமலர்க் கண்களில்
மீதி மலர்க் கண்களும்
மென்துயில் கொண்டன
சிட்டுக் குருவி
முத்தம் கொடுத்தபோது
எனக்கு முதல்மீசை முளைத்தது
உன்
கங்கைக்கரைத் தோட்டத்தில்
நான் கால்சட்டை போட்ட
கண்ணனானேன்
சொன்னது நீதானாவென்று
சொற்களுக்கிடையில்
விம்மிய பொழுது
என்… pic.twitter.com/UfWcNEIl3A
பி.சுசீலாவுக்கு நிறைய பேர் பாராட்டி வருகிறார்கள். இதுகுறித்து வைரமுத்து தனது எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது: நீ
மலர்ந்தும் மலராத பாடியபோது
என் பாதிமலர்க் கண்களில்
மீதி மலர்க் கண்களும்
மென்துயில் கொண்டன
சிட்டுக் குருவி
முத்தம் கொடுத்தபோது
எனக்கு முதல்மீசை முளைத்தது
உன்
கங்கைக்கரைத் தோட்டத்தில்
நான் கால்சட்டை போட்ட
கண்ணனானேன்
சொன்னது நீதானாவென்று
சொற்களுக்கிடையில்
விம்மிய பொழுது
என் கண்களில்
வெளியேறியது ரத்தம்
வெள்ளை வெள்ளையாய்
காலமகள் கண்திறப்பாள்
பாடியபோது
என் எலும்பு மஜ்ஜைகளில்
குருதியும் நம்பிக்கையும்
சேர்ந்து சுரந்தன
நீ காதல் சிறகைக்
காற்றினில் விரித்தபோது
ஒரு தேவதையின் சிறகடியில்
என் காதல் சம்பவம் நிகழ்ந்தது
நீ கண்ணுக்கு மையழகு
பாடவந்தபோது
சந்திரனும் சூரியனும்
நட்சத்திரமும் கூழாங்கல்லும்
என் தமிழும் அழகாயின
எத்துணையோ
காயங்களை ஆற்றியபிறகு
உன்னை டாக்டர் என்கிறார்கள்
வாழ்க நீ அம்மா!
இவ்வாறு பாடகி சுசீலாவுக்கு கவிஞர் கண்ணதாசன் கவிதை எழுதி பாராட்டியுள்ளார்.
-
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு -
சூர்யவன்ஷியிடம் வம்பிழுத்த இலங்கை வீரர்கள்.. டீ-சர்ட்டை பிடித்து தள்ளி.. மைதானத்தில் பரபரப்பு!












Click it and Unblock the Notifications