குடியால் வீழ்ந்த மு.க.முத்து.. ஊற்றி கொடுத்து கெடுத்தது ‘இந்த’ நடிகரா? அந்த நடிகையின் தாத்தா ஆச்சே!
சென்னை: தமிழ்நாடு முன்னாள் முதல்வரும் திமுக முன்னாள் தலைவருமான கலைஞர் கருணாநிதியின் முதல் மகனான மு.க.முத்து நேற்று மரணம் அடைந்தார். அரசியல் திரை பிரபலங்கள் அவருக்கு இரங்கல் தெரிவித்தனர். இந்த நிலையில் எம்ஜிஆருக்கு போட்டியாக களம் இறக்கப்பட்ட மு.க.முத்து, வீழ்ந்தது குடிப்பழக்கத்தால் தான் எனவும், அவருக்கு குடிப்பழக்கத்தை கற்றுக் கொடுத்ததே அவரது உறவினரான பிரபல நடிகர் எனக் கூறியிருக்கிறார் பிரபல பத்திரிகையாளரான இர்ஷாத் அகமது.
தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி பத்மாவதி தம்பதியின் ஒரே மகன் மு.க.முத்து. எம்ஜிஆர்-க்கு போட்டியாக அரசியலிலும் சினிமாவிலும் கலைஞர் கருணாநிதியால் களமிறக்கப்பட்டவர். காலப்போக்கில் தவறான பழக்கங்களால் சினிமாவிலும் அரசியலிலும் இருந்து விலகினார்.
தொடர்ந்து தந்தையுடன் ஏற்பட்ட மனக்கசப்பால் கோபாலபுரத்தில் இருந்து பிரிந்து சென்ற அவர், திருவாரூரில் மிகவும் ஏழ்மையான நிலையில் வசித்து வந்தார். அவரை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தான் சென்னைக்கு அழைத்து வந்து சிகிச்சை அளித்து வந்தார்.

ஈஞ்சம்பாக்கத்தில் வசித்து வந்த அவர் கடந்த சில நாட்களாகவே உடல் நல கோளாரால் அவதிப்பட்டு வந்த நிலையில் நேற்று காலமானார். இதை அடுத்து மு.க.ஸ்டாலின், முக அழகிரி உள்ளிட்ட பலர் அஞ்சலி செலுத்திய நிலையில் அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. அடுத்த எம்ஜிஆர், அடுத்த கலைஞர் என அரசியல் வாரிசாகவும் கலைவாரிசாகவும் பார்க்கப்பட்ட மு.க.முத்து குடிப்பழக்கத்தால் வீழ்ந்தார்.
இந்த நிலையில் தான் ஏன் அப்படி ஆனேன் என்பது குறித்து பிரபல பத்திரிகையாளரான இர்ஷாத் அகமதுவிடம் தெரிவித்திருக்கிறார் மு.க.முத்து. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருவாரூருக்கு நேரில் சென்ற பத்திரிக்கையாளர் இர்ஷாத் அகமது, முக முத்துவை பேசுயிருக்கிறார். அப்போது பேசிய அவர்," சென்னையில் பத்தாம் வகுப்பு தோல்வி அடைந்ததால் திருச்சியில் சேர்க்கப்பட்டேன். ஆனால் அங்கும் ஒழுங்காக படிக்கவில்லை. எனது அப்பாவை போலவே நானும் பத்தாம் வகுப்பில் பெயில். ஆனால் அவர் போராடி ஜெயித்தார். நான் தோற்றுவிட்டேன்.
என்னை வாழ்க்கையில் முன்னேற வைக்க வேண்டும் என அப்பா முயற்சி செய்தார். ஆனால் நான் பேச்சை கேட்டு நடக்கவில்லை. சினிமாவில் என்னை எம்.ஜி.ஆர் போல் ஆக்க வேண்டும் என அப்பாதான் கொண்டு வந்தார். அந்த முதல் படம் பிள்ளையோ பிள்ளை. அந்த படத்தை தொடங்கி வைத்ததே பெரியப்பா எம்ஜிஆர் தான். அப்பாவின் பேச்சை கேட்டு வாழ்க்கையில் முன்னேற வேண்டுமென பெரியப்பா எம்ஜிஆர் அடிக்கடி சொல்வார். ஆனால் நான் கேட்கவில்லை. அவர் மட்டும் உயிரோடு இருந்திருந்தால் எனக்கு இந்த நிலைமை வந்திருக்காது.

அரசியல் என்னையும் என் அப்பாவையும் பெரியப்பாவையும் பிரித்து விட்டது. குடி என் வாழ்வையே திருப்பிப் போட்டுவிட்டது. நடிகர் ரவிச்சந்திரன் தான் ( நடிகை தன்யாவின் தாத்தா) முதன் முதலில் எனக்கு தண்ணீ அடிக்க கற்றுக் கொடுத்தார். அவர் எங்கள் உறவினர். அவர் எனக்கு மாமா முறை வேண்டும். முதன் முதலில் அவர் கற்றுக் கொடுத்த பிறகு தினமும் குடிக்க ஆரம்பித்தேன். அதற்குப் பிறகு எவ்வளவோ முயற்சி செய்தும் என்னால் குடிப்பழக்கத்தை நிறுத்த முடியவில்லை. எனது வாழ்க்கையே நாசமாகிவிட்டது. அதே நேரத்தில் அப்பா உள்ளிட்ட யாருமே என்னை சரியாக புரிந்து கொள்ளவில்லை" எனக் கூறியிருக்கிறார்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications