மு.க. ஸ்டாலின், ராகுல் உள்ளிட்ட தி.மு.க. கூட்டணி கட்சி தலைவர்கள் மார்ச் 28-ல் ஒரே மேடையில் பிரசாரம்!
சென்னை: தி.மு.க தலைவர் மு.க. ஸ்டாலின், மூத்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட திமுக கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் அனைவரும் மார்ச் 28-ந் தேதி ஒரே மேடையில் பிரசாரம் செய்கின்றனர்.
தமிழக சட்டசபை தேர்தல் ஏப்ரல் 6-ந் தேதி நடைபெறுகிறது. மே 2-ந் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படுகின்றன. தேர்தல் நெருங்கிவிட்ட நிலையில் பிரசாரம் அனல் பறக்கிறது.

ஒவ்வொரு கட்சி தலைவர்களும் சூறாவளியாக சுழன்று பிரசாரம் செய்து வருகின்றனர். இருப்பினும் கடந்த காலங்களைப் போல ஒவ்வொரு கூட்டணியின் அத்தனை தலைவர்களும் ஒரே மேடையில் பிரசாரம் செய்யும் நிகழ்ச்சிகள் எதுவும் ஏற்பாடு செய்யப்படாமல் இருந்தது. இதனை நாம் நமது ஒன் இந்தியா தளத்தில் நேற்று பதிவும் செய்திருந்தோம்.
இந்த நிலையில் தி.மு.க. தலைமையிலான கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் அனைவரும் ஒரே மேடையில் மே 28-ந் தேதி பிரசாரம் செய்கின்றனர். சேலம் சீலநாயக்கன்பட்டியில் உளுந்தூர்பேட்டை நெடுஞ்சாலையில் இந்த பிர்ரமாண்ட பொதுக் கூட்டம் நடைபெற உள்ளது.
மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் இந்த பிரசாரக் கூட்டத்தில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, திராவிடர் கழக தலைவர் கி. வீரமணி, தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரி, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, சி.பி.எம். செயலாளர் கே. பாலகிருஷ்ணன் பங்கேற்கின்றனர்.
மேலும் திமுக கூட்டணி கட்சிகளின் தலைவர்களான இரா. முத்தரசன், கே.எம். காதர் மொகிதீன், தொல். திருமாவளவன், ஜவாஹிருல்லா, தி. வேல்முருகன், ஈ.ஆர். ஈஸ்வரன், பி.வி. கதிரவன், இரா. அதியமான், இனிகோ இருதயராஜ், முருகவேல்ராஜன் ஆகியோரும் இந்த பொதுக்கூட்டத்தில் பங்கேற்கின்றனர். அதிமுக கூட்டணியிலும் இதேபோல் பிரமாண்ட பொதுக்கூட்டம் விரைவில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
-
ரூ.13 லட்சம் கோடி கடன்! “திமுகதான் பதில் சொல்ல வேண்டும்!” டோனை மாற்றிய திருமாவளவன் -
பெப்பே காட்டிய விஜய்.. விஷத்தை கடைந்த ராகுல்.. திமுக, காங்கிரஸ் பந்தம் டோட்டலாக க்ளோஸ் ஆயிருச்சே -
"பன்றிக்கு நன்றி சொல்லி குன்றின் மேல் ஏறி".. மரியா வில்சனின் வெள்ளை அறிக்கையை விமர்சித்த திமுக -
தவெகவுக்கு தாவும் திண்டுக்கல் திமுக கவுன்சிலர்.. அவங்க அப்பா பெரிய புள்ளியாச்சே! பிரம்மாண்ட ப்ளான்! -
'Sofa Model' தவெக ஆட்சியில் எம்எல்ஏ-க்களை கொள்முதல் செய்றாங்க.. உதயநிதி ஸ்டாலின் நேரடி அட்டாக்! -
வெளியே போறோம்..புரட்சி செய்யும் புதுக்கோட்டை மும்மூர்த்திகள்! சி.விஜயபாஸ்கருக்கு சிக்கல்! என்னாச்சு? -
சேலத்தில் பெரியார் சிலை அவமதிப்பு.. கீழ்த்தரமான செயல் என திமுக கண்டனம் -
காங்கிரஸ் செய்த கழுத்தறுப்புகள்.. ஆசிர்வாதம் செய்த ராகுல் காந்தி! விடாத திமுக.. குதிக்கும் தலைகள்! -
விஜய் சார் இதை மறந்துடாதீங்க.. திமுக ஐடி விங்க் வெளியிட்ட மீம் வீடியோ..! -
திமுக செய்த சாதனை.. உண்மையை ஒப்புக்கொண்ட TVK.. அப்போ பெண்களுக்கான 'இந்த' திட்டம் வருமா? வரதா? -
“கோட் போட்டு வந்தாரு.. டிபன் எடுத்து வந்தாரு.. நாட்டுல பல அக்கிரமம் நடக்குது” விஜய்யை சாடிய ஸ்டாலின் -
தோல்விக்கு காரணம் என்ன? ரிப்போர்ட்டை கண்டதும் உதயநிதி தந்த ரியாக்சன்.. ஸ்டாலினுக்கு போன மெசேஜ்












Click it and Unblock the Notifications