Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

“படி, அதிகாரத்துக்கு வா” அதிரடி காட்டும் ஸ்டாலின்! ஆதிதிராவிட, பழங்குடியின பள்ளி, விடுதிகள் திறப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை: பல கோடி ரூபாய் மதிப்பில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாணவ, மாணவியர்களுக்காக கட்டப்பட்டுள்ள விடுதிகள், பள்ளிக் கட்டடங்கள் மற்றும் ஏகலைவா உண்டு உறைவிடப்பள்ளிக் கட்டடங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்து இருக்கிறார்.

தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் 42 கோடியே 45 லட்சத்து 67 ஆயிரம் ரூபாய் செலவில் ஆதிதிராவிடர் மாணவ, மாணவியர்களுக்காக 21 விடுதிக் கட்டடங்கள் கட்டப்பட்டன. அதேபோல், 16 கோடியே 59 லட்சத்து 14 ஆயிரம் ரூபாய் செலவில் 9 பள்ளிக் கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளன.

M.K.Stalin has inaugurated hostels, school buildings for Adi Dravidian and tribal students

மேலும் 22 கோடியே 97 லட்சத்து 70 ஆயிரம் ரூபாய் செலவில் 4 ஏகலைவா மாதிரி உண்டு உறைவிடப் பள்ளிக் கட்டடங்களும் தமிழ்நாடு அரசால் கட்டப்பட்டு உள்ளன. இதனை தமிழ்நாடு முதலமைச்சர் முக ஸ்டாலின் இன்று காணொலி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்களின் கல்வியறிவு மற்றும் சமூக - பொருளாதார நிலையினை உயர்த்தி அவர்களது வாழ்க்கைத் தரத்தினை மேம்படுத்தும் வகையில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலப் பள்ளிகள் மற்றும் விடுதிகளை தமிழ்நாடு அரசு கட்டி வருகிறது. அதில் பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு பல்வேறு கல்வி உதவித்தொகைகள் மற்றும் கட்டணச் சலுகைகளும் வழங்கப்பட்டு வருகின்றன.

அத்துடன் அவர்களுக்கு இலவச வீட்டுமனைப் பட்டாக்கள் வழங்கப்பட்டு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின குடியிருப்புகளில் அடிப்படை வசதிகளை மேம்படுத்தப்படுகின்றன. அந்த மக்களின் பொருளாதார மேம்பாட்டிற்காக மானியத்துடன் கூடிய கடனுதவி, சுயதொழில் மற்றும் வேலைவாய்ப்பினை உருவாக்க பல்வேறு திறன் மேம்பாட்டுப் பயிற்சிகள் போன்ற பல்வேறு திட்டங்களை தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வருகிறது.

அதேபோல், கரூர் மாவட்டம் - கடவூர், மதுரை மாவட்டம் ரேஸ்கோர்ஸ், திருச்சிராப்பள்ளி மாவட்டம் - துறையூர், தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரம் மற்றும் தூத்துக்குடி, மதுரை மாவட்டம் உசிலம்பட்டி, சிவகங்கை மாவட்டம் கொம்புக்காரனேந்தல், காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர், நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் ஆகிய இடங்களில் 18 கோடியே 89 லட்சத்து 46 ஆயிரம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள பள்ளி மாணவர்களுக்கான 9 விடுதிக் கட்டடங்கள் இன்று திறந்து வைக்கப்பட்டன.

திருநெல்வேலி மாவட்டம் குலவணிகர்புரம், தேனி மாவட்டம் எரசக்கநாயக்கனூர் மற்றும் கோட்டூர், திருவாரூர் மாவட்டம் - பேரளம், காஞ்சிபுரம் மாவட்டம் காஞ்சிபுரம் ஆகிய இடங்களில் 6 கோடியே 79 லட்சத்து 86 ஆயிரம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள பள்ளி மாணவியர்களுக்கான 5 விடுதிக் கட்டடங்களையும் முக ஸ்டாலின் திறந்து வைத்தார்.

கரூர் மாவட்டம் - தாந்தோணிமலை, தஞ்சாவூர் மாவட்டம் - ஒரத்தநாடு. புதுக்கோட்டை மாவட்டம் - மருதன்கோன்விடுதி, மதுரை மாவட்டம் சொக்கிகுளம், சென்னை மாவட்டம் - இராயபுரம், காஞ்சிபுரம் மாவட்டம் காஞ்சிபுரம் ஆகிய இடங்களில் 16 கோடியே 76 லட்சத்து 35 ஆயிரம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள கல்லூரி மாணவ, மாணவியர்களுக்கான 7 விடுதிக் கட்டடங்கள் என மொத்தம் 42 கோடியே 45 லட்சத்து 67 ஆயிரம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவியர்களுக்கான 21 விடுதிகளை தமிழ்நாடு முதலமைச்சர் திறந்து வைத்தார்.

அத்துடன், காஞ்சிபுரம் மாவட்டம் ரெட்டமங்கலம், செங்கல்பட்டு மாவட்டம் மீனம்பாக்கம், கடலூர் மாவட்டம் சேப்பாக்கம், மேலவன்னியூர் மற்றும் - சிதம்பரம் நந்தனார் பள்ளி, சேலம் மாவட்டம் - வெள்ளிகவுண்டனூர், புதுக்கோட்டை மாவட்டம் - முள்ளன்குறிச்சி, இராணிப்பேட்டை மாவட்டம் - எலத்தூர், சேலம் மாவட்டம் தாத்தியாம்பட்டி ஆகிய இடங்களில் உள்ள 9 ஆதிதிராவிடர் நலப் பள்ளிகளில் 16 கோடியே 59 லட்சத்து 14 ஆயிரம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள வகுப்பறைக் கட்டடங்கள், அறிவியல் ஆய்வுக்கூடங்கள் உள்ளிட்ட கட்டடங்களை முதலமைச்சர் திறந்து வைத்தார்.

M.K.Stalin has inaugurated hostels, school buildings for Adi Dravidian and tribal students

திருப்பத்தூர் மாவட்டம் கீழுர், திருவண்ணாமலை மாவட்டம் புளியம்பட்டி, நீலகிரி மாவட்டம் மு. பாலாடா, நாமக்கல் மாவட்டம் - செங்கரை ஆகிய இடங்களில் 22 கோடியே 97 லட்சத்து 70 ஆயிரம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள ஏகலைவா மாதிரி உண்டி உறைவிடப் பள்ளிக் கட்டடங்கள், என மொத்தம் 39 கோடியே 56 லட்சத்து 84 ஆயிரம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலப் பள்ளிக் கட்டடங்களை முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைத்து உள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+