அதிமுகவிற்கு சாதகமாகும்.. நடத்த விட கூடாது.. வழக்கறிஞர் குழுவுடன் ஸ்டாலின் ஆலோசனை.. என்ன திட்டம்?
உள்ளாட்சி தேர்தலுக்கு எதிராக திமுக தொடங்கி இருக்கும் சட்ட போராட்டம் காரணமாக திமுக தலைவர் ஸ்டாலின் வழக்கறிஞர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்
சென்னை: உள்ளாட்சி தேர்தலுக்கு எதிராக திமுக தொடங்கி இருக்கும் சட்ட போராட்டம் காரணமாக திமுக தலைவர் ஸ்டாலின் வழக்கறிஞர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்
தமிழகத்தில் அதிமுக கூட்டணி, திமுக கூட்டணி இரண்டும் உள்ளாட்சிதேர்தலுக்காக தீவிரமாக தயாராகி வருகிறது. இந்த கூட்டணிகள் இப்போதே இதற்காக ஆலோசனை செய்ய தொடங்கிவிட்டது.
தமிழகத்தில் டிசம்பர் 27 மற்றும் 30 தேதிகளில் உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் என்று மாநில தேர்தல் ஆணையர் பழனிசாமி அறிவித்துள்ளார். இரண்டு கட்டமாக தமிழகத்தில் தேர்தல் நடக்கிறது. வாக்கு எண்ணிக்கை ஜனவரி 2, 2020ல் நடக்கும்.

உள்ளாட்சி தேர்தல்
இந்த நிலையில் உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக திமுக தலைவர் ஸ்டாலின் வழக்கறிஞர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். மூன்று முக்கியமான விஷயங்கள் குறித்து இதில் ஆலோசனை நடத்தி இருக்கிறார்கள். முதல் விஷயம் தொகுதி மறுசீராய்வு தொடர்பான வழக்கு. அதாவது தொகுதி மறுசீராய்வு செய்யாமல் தேர்தல் நடத்த கூடாது என்று தொடர்ந்த வழக்கு.

எப்படி வாதம்
இந்த வழக்கு மீதான விசாரணை இன்னும் இரண்டு நாட்களில் நடக்க உள்ளது. இதில் திமுக சார்பாக என்ன வாதம் செய்யலாம். எப்படி தேர்தலுக்கு இடைக்கால தடை பெற வைக்கலாம் என்று ஆலோசனையை செய்தனர்.

ஏன் இல்லை
அதே சமயம் இன்னொரு பக்கம் உள்ளாட்சி தேர்தல் மட்டுமே இப்போது அறிவிக்கப்பட்டுள்ளது .நகராட்சி, மாநகராட்சி அமைப்புகளுக்கு தேர்தல் அறிவிக்கப்படவில்லை. தேர்தல் ஆணையத்தின் இந்த முடிவு தவறு, அதனால் தேர்தலை நிறுத்த என்றும் கூடுதலாக வேண்டும் என்று கூடுதலாக ஒரு மனுவை தாக்கல் செய்ய திட்டமிட்டுள்ளனர்.

பேசினார்கள்
இது தொடர்பாகவும் ஆலோசனையில் நேற்று பேசி உள்ளனர். கடைசியாக தேர்தலுக்கு இடைக்கால தடை விதிக்கவில்லை என்றால்,உள்ளாட்சி, நகராட்சி, மாநகராட்சி தேர்தலை ஒன்றாக நடத்த உத்தரவிட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் திமுக கோரிக்கை வைக்கவுள்ளது.

என்ன பேசினார்
இது தொடர்பாக நேற்று பேசி உள்ளனர். தனி தனியாக தேர்தல் நடந்தால் அது அதிமுகவிற்கு பலன் அளிக்கும். அதனால் தேர்தலை எப்படியாவது நிறுத்த வேண்டும். தேர்தல் நேர்மையாக நடக்க வேண்டும் என்று ஸ்டாலின் தனது வழக்கறிஞர் குழுவிடம் கண்டிப்பாக கூறி இருக்கிறார். இதனால் 5ம் தேதி நடக்க போகும் வழக்கு விசாரணை அதிக எதிர்பார்ப்பிற்கு உள்ளாகிறது.












Click it and Unblock the Notifications