இனிதான் ஆட்டம்.. தமிழகத்தை திரும்பி பார்த்த டெல்லி.. தேசிய அரசியலில் மீண்டும் கோலோச்சும் திமுக!
நேற்று கருணாநிதி சிலை திறப்பு விழா பொதுக்கூட்டத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் பேசியது பெரிய விவாத பொருளாகி உள்ளது.
Recommended Video

சென்னை: நேற்று கருணாநிதி சிலை திறப்பு விழா பொதுக்கூட்டத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் பேசியது பெரிய விவாத பொருளாகி உள்ளது. இதன் மூலம் தேசிய அரசியலில் தமிழகம் மீண்டும் கோலோச்ச மிகப்பெரிய வாய்ப்பு கிடைத்து உள்ளது.
நேற்று மறைந்த திமுக முன்னாள் தலைவர் கருணாநிதியின் சிலை திறப்பு பொதுக்கூட்டத்தில் பல அரசியல் தலைவர்கள் கலந்து கொண்டு பேசினார்கள். இதில் திமுக தலைவர் ஸ்டாலின் பேசியது பலரையும் கவர்ந்தது.
விழா மேடையிலேயே அவர் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை, எதிர்க்கட்சி கூட்டணியின் பிரதமர் வேட்பாளராக அறிவித்தார். அவரின் இந்த பேச்சு பல அரசியல் மாற்றங்களை ஏற்படுத்த வாய்ப்புள்ளது.

ஒரு காலம்
கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு வரை தமிழகம் தேசிய அரசியலில் மிக முக்கியமான மாநிலமாக இருந்தது. காங்கிரஸ் கட்சியின் 10 வருட ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் திமுக முக்கிய பதவிகளை வகித்தது. இதன் காரணமாக தமிழகம் தேசிய அளவில் சில முக்கிய முடிவுகளை எடுக்க முடிந்தது. இந்த 10 ஆண்டுகளில் தமிழகம் சில திட்டங்களை நேரடியாக மத்திய அரசிடம் இருந்து கேட்டு பெற்றது.

மொத்தமாக மங்கியது
ஆனால் கடந்த 2014 நாடாளுமன்ற தேர்தலில் திமுக பெரிய தோல்வியை தழுவியது. ஐக்கிய முற்போக்குக் கூட்டணியும் மண்ணை கவ்வியது. இதனால் தேசிய அரசியலில் தமிழகம் ஒன்றுமில்லால் போக தொடங்கியது. அதிமுக நாடாளுமன்றத்தில் மிகப்பெரிய கட்சியாக உருவெடுத்து இருந்தாலும் கூட, பாஜக கூட்டணியில் இடம்பெறாததால், தமிழகத்திற்கு எதுவும் கேட்டு பெற முடியவில்லை.

மோசமானது
அதனால் கடந்த ஐந்து வருடத்தில் தேசிய அளவில் தமிழகத்தின் ''கை'' தாழ்ந்து போனது. முக்கியமாக கருணாநிதி, ஜெயலலிதா என்று இரண்டு பெரிய அரசியல் தலைவர்களை அடுத்தடுத்து இழந்த காரணத்தால் தேசிய அளவில் தமிழகம் பெரிய இழப்பை சந்தித்தது. இது தமிழகத்திற்கான நலத்திட்டங்களை பாதித்தது.

திருப்பம்
ஆனால் தற்போது அதில் பெரிய திருப்பம் நிகழ்ந்து இருக்கிறது. திமுக தலைவர் ஸ்டாலின் நேற்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தியது பெரிய டிரெண்ட் ஆகியுள்ளது. இதன் வழியாக தேசிய அரசியலில் திமுக புதிய கவனம் பெற்றுள்ளது. திமுக மூலம் தமிழகம் மீண்டும் தேசிய அளவில் முடிவெடுக்கும் கட்சியாக மாறி உள்ளது.

தலைதூக்கும்
அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றாக ராகுலை பிரதமர் வேட்பாளராக ஏற்கும் பட்சத்தில் அது இன்னும் பெரிய திருப்பமாக அமையும். ஸ்டாலின்தான் முதலில் ராகுலை பிரதமர் வேட்பாளராக அறிவித்தது என்பதன் மூலம், அவர் மிக முக்கியமான தலைவராக உருவாவார். இது தேசிய அரசியலிலும் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும். என்னவெல்லாம் நடக்க போகிறது என்பதை தெரிந்து கொள்ள 2019 வரை காத்திருக்க வேண்டும்.
-
“தனது தலையில் தானே மண் அள்ளிப் போட்டுக் கொண்டுள்ளார் ராகுல்..” முரசொலி சரமாரி விமர்சனம்! -
சென்னை உட்பட.. 26 மாவட்டங்களை லிஸ்ட் போட்ட வானிலை மையம்! ஆட்டம் ஆரம்பம்! கனமழை வெளுக்கப்போகுது! -
சென்னையில் மழை வெளுக்கப்போகுது.. மொத்தமா 9 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை! அடுத்த 2 மணி நேரம் உஷார் -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி












Click it and Unblock the Notifications