அசல் ஆவணங்கள் இன்றி அரசு நிலத்தை அபகரித்த கேஸ்.. சுப்ரீம் கோர்ட்டில் இன்று மா. சுப்பிரமணியன் வழக்கு
சென்னை: நில அபகரிப்பு வழக்கில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் மற்றும் அவரது மனைவி காஞ்சனா ஆகியோர் மே 23-ம் தேதி குற்றச்சாட்டுப் பதிவுக்காக கட்டாயம் நேரில் ஆஜராக வேண்டும் என்றும் ஒருவேளை ஆஜராகாவிட்டாலும், குற்றச்சாட்டுப் பதிவு செய்யப்படும் என்றும் சிறப்பு நீதிமன்றம் அறிவித்திருந்தது.. அந்தவகையில், இன்றைய தினம் நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னை கிண்டி தொழிலாளர் காலனியில் எஸ்.கே.கண்ணன் என்பவருக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட சிட்கோ நிலத்தை அமைச்சர் மா.சுப்ரமணியன், சென்னை மாநகர மேயராக பதவி வகித்தபோது, போலி ஆவணங்கள் மூலமாக தனது மனைவி காஞ்சனா பெயருக்கு மாற்றி நில அபகரிப்பில் ஈடுபட்டுள்ளதாக பார்த்திபன் என்பவர் போலீஸில் புகார் அளித்தார்.

காஞ்சனா மீதும் புகார்
இதையடுத்து, அமைச்சர் மா.சுப்பிரமணியன் மற்றும் அவரது மனைவி காஞ்சனா மீதும் கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில் சிபிசிஐடி போலீஸார் வழக்குப்பதிவு செய்து, 2019ல் குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கு சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் மீதான குற்ற வழக்கை விசாரிக்கும் சிறப்பு கோர்ட்டில் நிலுவையில் உள்ளது. நீதிபதி ஜி. ஜெயவேல் இதனை விசாரித்து வரும்நிலையில், தன்மீதான வழக்கை ரத்து செய்யக் கோரி மா.சுப்பிரமணியன் மனு தாக்கல் செய்தார். ஆனால், மனு தள்ளுபடி செய்யப்பட்டுவிட்டது.
சிறப்பு நீதிமன்றம்
இதையடுத்து, இந்த வழக்கு கடந்த 2 மாதங்களுக்கு சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, அமைச்சரவைக் கூட்டம் நடந்ததால் அமைச்சர் மா.சுப்பிரமணியன் சார்பில் நேரில் ஆஜராக விலக்கு அளிக்கக்கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது. பிறகு கடந்த மே 6ம் தேதியும், இருவரும் ஆஜராகவில்லை. இதனிடையே ஹைகோர்ட் உத்தரவை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்துள்ளதால், வழக்கை ஜூன் மாதத்திற்கு தள்ளி வைக்க வேண்டுமென கேட்டுக்கொண்டார்.
அதற்கு மறுப்பு தெரிவித்த நீதிபதி, இந்த வழக்கில் எவ்வித கூடுதல் கால அவகாசமும் வழங்க முடியாது எனக் கூறி அடுத்த விசாரணைக்குள் உச்ச நீதிமன்றத்தில் உத்தரவை பெற வேண்டும் என தெரிவித்தார். இல்லாவிட்டால், ஜூலை 24-ம் தேதி மா.சுப்பிரமணியன் மற்றும் அவரது மனைவி மீது குற்றச்சாட்டுப் பதிவு நடைமுறை மேற்கொள்ளப்படும் எனக் கூறி அன்றைய தினத்துக்கு விசாரணையை ஒத்திவைத்தார்.
இந்நிலையில்தான், தமிழக மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் சுப்பிரமணியன் மேயராக இருந்தபோது செய்ததாக கூறப்படும் முறைகேடு தொடர்பான வழக்கை, உச்ச நீதிமன்றம் இன்று விசாரிக்கிறது.
உதாரணங்கள் தயார்
அதாவது சுப்ரீம்கோர்ட்டில் சுப்பிரமணியன் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட அப்பீல் மனுவை, கடந்த மே 16ல், நீதிபதிகள் சுதன்சு துளியா மற்றும் வினோத் சந்திரன் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது, சுப்பிரமணியன் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் முகுல் ரோஹத்கி, '''மேயராக இருப்பவரை விசாரணைக்கு உட்படுத்த வேண்டுமானால், அதற்கு, மாநில அரசு தான் அனுமதி வழங்க வேண்டும். ஆனால், இந்த விஷயத்தில், சபாநாயகராக இருந்த தனபால் ஒப்புதல் வழங்கியுள்ளார்.. பின்பற்றப்பட்ட சட்ட நடைமுறைகளே தவறாக இருப்பதால், விசாரணையையே ரத்து செய்ய வேண்டும்'' என வாதாடினார்.
இன்று விசாரணை
இந்த வாதத்தை ஏற்ற நீதிபதிகள், 'இது தொடர்பாக முடிவுற்ற வழக்குகள் உதாரணமாக உள்ளனவா?' என நீதிபதிகள் கேட்டனர். உதாரணங்களை திரட்டி தருகிறோம் என்று சுப்பிரமணியன் தரப்பினர் கூறியிருந்த நிலையில், நேற்றைய விசாரணையின் போது, விவரங்கள் தயார் என்று நீதிபதிகளிடம் தெரிவித்திருக்கிறார்கள்.. இதனை ஏற்றே, இன்றைய தினம் விசாரணை தொடரும் என்று நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications