மெகா தடுப்பூசி முகாமால் கை மேல் பலன்.. மா.சு. டபுள் ஹேப்பி.. வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!
சென்னை: திருவிழாவைப் போல் மக்கள் சாரை சாரையாக வந்து தடுப்பூசி போட்டது மகிழ்ச்சி அளிக்கிறது என மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். மேலும் இனி வாரந்தோறும் தடுப்பூசி முகாம்கள் நடத்தப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
Recommended Video
தமிழகம் முழுவதும் ஒரே நாளில் 40 ஆயிரம் இடங்களில் தடுப்பூசி போடும் முகாம் நடைபெற்றது. தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி, மதுரை ஆகிய மாவட்டங்களில் முகாமை ஆய்வு செய்து மதுரையில் இருந்து சென்னை வந்த மருத்துவம் மற்றும் மக்கள் நலவாழ்வு துறை அமைச்சர் மா. சுப்பிரமணியனை திமுக எம்.எல்.ஏ. பிரபாகர் ராஜா தலைமையில் திமுக வரவேற்றனர்.
பின்னர் அமைச்சர் மா. சுப்பிரமணியன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: ஒரே நாளில் 40 ஆயிரம் இடத்தில் தடுப்பூசி முகாம் நடத்தி மிகப் பெரிய அளவிலான சாதனையாக 28 லட்சத்து 36 ஆயிரத்தி 776 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டிருக்கிறது.

7 லட்சம்
இதே அளவிலான தடுப்பூசி முகாம் நடத்தி உத்தரப்பிரதேசத்தில் போடப்பட்டிருக்கிறது. ஆனால் நமது மக்கள் தொகையை காட்டிலும் 3 மடங்கு கூடுதலாக கொண்ட மாநிலம். தமிழகத்தில் நடைபெற்று இருக்கின்ற இந்த சாதனையானது மகத்தான சாதனையாகும். தினந்தோறும் 7 லட்சம் பேருக்கு போடுகின்ற அளவுக்கு நிர்வாக கட்டமைப்பு உள்ளது.

28 லட்சம் தடுப்பூசி
ஆனால் இன்றைக்கு 3 மடங்காக மாறி ஒரு நாளைக்கு 28 லட்சம் வரை தடுப்பூசி போடும் முறை நிர்வாக கட்டமைப்பு உள்ளது. தமிழகத்தில் இதுவரை 4 கோடியே 3 லட்சத்து 13 ஆயிரத்தி 112 பேர் தடுப்பூசி போட்டுள்ளனர். தமிழகத்தைப் பொறுத்தவரை 6 கோடி பேருக்கு தடுப்பூசி போட வேண்டும். ஆனால் தற்போது 66 சதவீதத்திற்கு மேலாக தடுப்பூசி போடப்பட்டு உள்ளது.

மெகா தடுப்பூசி முகாம்
இது குறித்து மத்திய சுகாதாரத் துறை அமைச்சருக்கு அறிவிக்க உள்ளோம். மேலும் வாரம் ஒருமுறை இதுபோன்ற மெகா தடுப்பூசி முகாம் தமிழகத்தில் நடத்துவதற்கு கூடுதல் தடுப்பூசிகளை தர வேண்டுமென மத்திய சுகாதார துறை அமைச்சரிடம் தொலைபேசி மூலமாக கேட்க உள்ளோம். இது நிச்சயம் தமிழக மக்களிடையே பெரும் விழிப்புணர்வை ஏற்படுத்தி இருக்கிறது.

தொலைபேசி மூலம் கோரிக்கை
பல்வேறு இடங்களில் பிற்பகலுக்கு பிறகு தடுப்பூசி பற்றாக்குறை உள்ளதாக நூற்றுக்கும் மேற்பட்ட இடங்களில் இருந்து தொலைபேசி மூலமாக தெரிவித்தனர். குறிப்பிட்ட முகாமங்களில் அளவிற்கு அதிகமாக மக்கள் வருகையால் இது ஏற்பட்டுள்ளது. தடுப்பூசி போடப்படாமல் சென்றவர்களின் தொலைபேசி எண்களை வாங்கி வைத்து கொண்டு அடுத்த நாள் அழைத்து அவர்களுக்கு தடுப்பூசி போடப்பட திட்டமிட்டிருந்தோம்.

திருவிழாவை போல்
திருவிழாவைப் போல் மக்கள் சாரை சாரையாக வந்து தடுப்பூசி போட்டுக் கொண்டது மகிழ்ச்சி அளிக்கிறது. இதேபோல் தொடர்ந்து வாரத்திற்கு ஒரு முறை மெகா முகாம் நடத்துவதற்கு ஏதுவாக தடுப்பூசிகளை கேட்டு உள்ளோம். 2வது தவணை செலுத்தி கொண்டவர்களுக்கு மட்டுமே கோவாக்சீன் போடப்பட்டது. நீட் தேர்வுக்கு பயந்து மாணவர்கள் உயிரை இழக்க கூடாது என்றார்.
-
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மீண்டும் வந்த அதே வரலாற்று சிக்னல்.. தங்கம் விலை மிகப்பெரிய அளவில் சரிகிறது.. இப்போ வாங்கலாமா? -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
கேஸ் சிலிண்டர் விலை ரூ.1,600.. விலை உயர்வை அறிவித்த கையோடு.. மத்திய அரசு சொன்ன முக்கியமான பாயிண்டு -
இன்னும் சில மணி நேரம் தான்.. பூமியை நோக்கி வரும் 'சூரிய புயல்'! மெகா அலர்ட் கொடுத்த நாசா












Click it and Unblock the Notifications