நவம்பர், டிசம்பரில் இது வராமல் இருந்தால் நல்லது.. வந்தாலும் நாங்க ரெடிதான்.. மா.சுவின் மாஸ் பதில்
சென்னை: தமிழ்நாட்டில் கொரோனா 3ஆவது அலை வந்தாலும் அதை சமாளிக்கத் தேவையான கட்டமைப்பு வசதிகள் இருக்கின்றன என சுகாதாரத் துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
Recommended Video
மத்திய அரசிடம் இருந்து பெறப்பட்ட 3.65 லட்சம் கோவிஷீல்டு தடுப்பூசிகளை சென்னை டிஎம்எஸ் வளாகத்தில் உள்ள தடுப்பூசி மருந்துகள் சேமிப்பு கிடங்குக்கு கொண்டு வரப்பட்டது. அங்கு மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் ஆய்வு மேற்கொண்டார்.
அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் தமிழகத்தில் ஏறத்தாழ 50 ஆயிரம் படுக்கைகள் காலியாக இருக்கின்றன. அவற்றில் பெரும்பாலானவை ஆக்ஸிஜன் வசதியுடன் கூடியவை.

தடுப்பூசி
மாநிலத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. ஒருவருக்கு தடுப்பூசி போடுவதை மெதுவாகத்தான் செய்ய வேண்டும். ஒரு வேளை இதை மனதில் வைத்துதான் கொரோனா தடுப்பூசி போடும் பணி ஆமை வேகத்தில் செல்கிறது என ஓபிஎஸ் கூறியிருப்பார்.

கட்டமைப்பு
முதல்வர் ஸ்டாலின் மேற்கொண்ட தீவிர நடவடிக்கையின் காரணமாகத்தான் 21 ஆம் தேதிக்கு பிறகு மத்திய அரசு 75 சதவீத தடுப்பூசிகளை கொள்முதல் செய்து மாநில வாரியாக பிரித்திடுவோம் என கூறியிருக்கிறது. கொரோனா 3ஆவது அலை வந்தாலும் அதை சமாளிக்கத் தேவையான கட்டமைப்பு வசதிகள் தமிழ்நாட்டில் இருக்கின்றன.

ஆரம்ப சுகாதார நிலையங்கள்
இப்போது அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் அனைத்திலும் ஆக்ஸிஜன் வசதியுடன் படுக்கைகள் ஏற்படுத்துகின்றன. எனவே கொரோனா 3ஆவது அலை வந்தாலும் அச்சப்படத் தேவையில்லை. இங்கிலாந்தில் 3ஆவது அலை உருவாகி தினமும் 6 ஆயிரம் என்ற அளவில் உயர்ந்துள்ளது.

டிசம்பர்
இதனால் தமிழகத்திலும் நவம்பர், டிசம்பர் மாதங்களில் 3ஆவது அலை வரும் என நிபுணர்கள் சொல்கிறார்கள். அது நடக்காமல் இருந்தால் நல்லது. தமிழகத்தில் இதுவரை 97 லட்சத்து 65 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. கையிருப்பில் 85 ஆயிரம் இருந்தது.

மருந்துகள்
தற்போது 3 லட்சத்து 65 ஆயிரம் தடுப்பூசிகள் வந்துள்ளன. இந்த தடுப்பூசிகள் தேவைக்கு ஏற்ப மாவட்டங்களுக்கு பிரித்தனுப்பப்படும். இதுவரை ஆயிரத்து 299 பேருக்கு கருப்பு பூஞ்சை பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதற்கான மருந்துகள் கையிருப்பில் உள்ளன.
-
ராயல் என்பீல்டு முதலீடு ஆந்திரா சென்றதா? அமைச்சர் கீர்த்தனா பற்றி உண்மையை உடைத்த MP மாணிக்கம் தாகூர் -
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி












Click it and Unblock the Notifications