தனபால் 'மாமன்னன்' வடிவேல் ஓகே- அப்படியானால் ஜாதி வக்கிரத்துடன் ஒடுக்கிய அதிமுக 'பகத் பாசில்' யாராம்?
சென்னை: வடிவேலு, உதயநிதி ஸ்டாலின், பகத் பாசில் நடித்துள்ள இயக்குநர் மாரி செல்வராஜின் மாமன்னன் படம் தொடர்பான விவாதங்கள் சமூக வலைதளங்களில் இடைவிடாமல் அலையடித்து கொண்டிருக்கிறது.
அருந்ததியர் சமூகத்து எம்.எல்.ஏ. பாத்திரத்தில் நடித்திருக்கும் வடிவேலு, ஜாதிய ஒடுக்குமுறைகளை வென்று சபாநாயகர் நாற்காலியில் அமரவைக்கப்படுவதாக மாமன்னன் பட இறுதிக் காட்சி அமைகிறது. தமிழ்நாட்டில் அருந்ததியர் சமூகத்தை சேர்ந்த அதிமுகவின் தனபால் இதேபோல ஜாதிய ஒடுக்குமுறைகளுக்குள்ளாக்கப்பட்ட நிலையில் உணவுத் துறை அமைச்சர் பின்னர் சபாநாயகர் என உயர் பதவிகளில் அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவால் அமர்த்தப்பட்டார் என்பது வரலாறு.

மாமன்னன் படத்தின் காட்சிகளையும் அதிமுகவின் தனபால், உணவுத்துறை அமைச்சர்- சபாநாயகர் ஆக்கட்டப்பட்ட நிகழ்வுகளையும் ஒப்பிட்டு, ரியல் திராவிட மாடல் அரசாங்கமே ஜெயலலிதாவின் அதிமுக ஆட்சிதான் எனவும் அதிமுகவினர் புளகாங்கிதம் அடைகின்றனர். அதுவும் திமுக அமைச்சர் உதயநிதி படத்துக்கே அதிமுக அரசுதான் கன்டென்ட் கொடுக்கிறது என்றெல்லாம் பெருமகிழ்வடைகின்றனர் அதிமுகவினர்.
இயக்குநர் மாரி செல்வராஜ், தனபால் சபாநாயகராக்கப்பட்ட்தை சித்தரிக்கும் வகையில்தான் பட காட்சிகள் அமைத்திருக்கிறார் என்பதை தனபாலின் ராசிபுரம் தொகுதி என்பதை காசிபுரம் என்பதாக காட்டுவதில் இருந்தே புரிந்து கொள்ள முடிகிறது. அதிமுகவினரின் கொண்டாட்ட மனநிலையையும் உள்வாங்க முடிகிறது என கூறும் நெட்டிசன்கள் முன்வைக்கும் ஒற்றை கேள்வி இதுவாகவும் இருக்கிறது.
வடிவேலு எனும் மாமன்னன்தான் தனபால் என்பதாகவே இருக்கட்டும். தனபால் அப்படி ஜாதிய கொடுமைகளை சந்தித்ததால்தான் ஜெயலலிதா உணவு அமைச்சர் பதவி, சபாநாயகர் பதவி கொடுத்தார் என்பதும் வரலாறுதான்.
மாமன்னன் வடிவேலுவை சொந்த கட்சியின் மாவட்ட செயலாளரான பகத் பாசில்தான் ஜாதிய வக்கிரத்துடன் நடத்துகிறார் அல்லவா? அதேபோல நிஜத்தில் மாமன்னன் தனபாலை ஜாதிய வக்கிரத்துடன் நடத்திய அந்த அதிமுக மாவட்ட செயலாளர் யார்? அதிமுகவின் எந்த மாவட்ட செயலாளர் தனபாலை ஜாதிய வக்கிரத்துடன் நடத்தியது? தனபால் மீது ஜாதிய ஒடுக்குமுறைகளை ஏவிய ஜாதிவெறி மாவட்ட செயலாளர் யாராக இருக்கும்? அவரா? இவரா? என்கிற கேள்விகளையும் நெட்டிசன்கள் சரமாரியாக முன்வைத்து வருகின்றனர்.

இதனிடையே அந்த மாவட்டச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியா என்று நெட்டிசன் ஒருவர்ட்விட்டரில் கேட்ட கேள்வியை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், ரீட்வீட் செய்ததோடு, அதில் சிரிப்பு எமோஜி போட்டுள்ளார்.
-
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்!












Click it and Unblock the Notifications