என்னாச்சு.. கே.டி.ராகவன் பற்றி வீடியோ வெளியிட்ட மதன் டைரி யூடியூப் சேனல் திடீர் முடக்கம்!
சென்னை: பாஜக பிரமுகர் கே.டி.ராகவன் தொடர்பாக பெரும் புயலைக் கிளப்பிய வீடியோவை வெளியிட்ட மதன் ரவிச்சந்திரன் என்பவருடைய யூடியூப் சேனல் முடக்கப்பட்டிருக்கிறது.
Recommended Video
பாஜக தமிழக பொதுச் செயலாளராக பதவி வகித்த கே.டி.ராகவன், பெண் ஒருவருடன் செல்போனில் வீடியோ செக்ஸ் சாட் பேசியதாக ஒரு வீடியோ இந்த யூடியூப் தளத்தில்தான் வெளியிடப்பட்டிருந்தது.
பெண் ஒருவருடன் ஆபாசமாக பேசிக்கொண்டு சுய இன்பம் செய்வது போல் அந்த வீடியோ காட்சிகள் அமைந்திருந்தன. இந்த செயல்களில் ஈடுபடுவது கே.டி.ராகவன் என்று மதன் ரவிச்சந்திரன் அந்த வீடியோவில் தெரிவித்திருந்தார்.

ராகவன் ராஜினாமா
இந்த வீடியோ போலியானது என்றும், இதை சட்டப்படி சந்திப்பேன் என்றும் ராகவன் தெரிவித்த நிலையில் தனது பொதுச் செயலாளர் பதவியை நேற்று ராஜினாமா செய்தார். இந்த நிலையில்தான் மதன் டைரி, என்ற பெயர் கொண்ட அந்த யூட்யூப் சேனல் இன்று காலை திடீரென முடக்கப்பட்டு இருக்கிறது. சேனல் முடக்கத்தின் பின்னணியில் யார் இருக்கிறார்கள் என்ற தகவல் இதுவரை வெளியாகவில்லை.

மதன் ரவிச்சந்திரன் பற்றி அண்ணாமலை விளக்கம்
இந்தநிலையில், பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை நேற்று வெளியிட்ட அறிக்கையில், கே.டி.ராகவன் தொடர்பாக இது போன்ற ஒரு வீடியோ காட்சி தன்னிடம் இருப்பதாக மதன் ரவிச்சந்திரன் தன்னை அணுகி கூறியதாகவும், ஆனால் ஆதாரத்தை காட்டாமல் நடவடிக்கை எடுக்க முடியாது என்று நான் தெரிவித்தேன் என்றும் விளக்கமளித்தார். தொடர்ந்து மதன் ரவிச்சந்திரன் இந்த வீடியோ தொடர்பாக பேசிக்கொண்டே இருந்ததால், ஒரு கட்டத்தில், ஆதாரம் இருந்தால் நீங்கள் வெளியிட்டு கொள்ளுங்கள் என்று நான் தெரிவித்தேன் என்று அண்ணாமலை தனது விளக்கத்தில் தெரிவித்திருந்தார்.

அண்ணாமலைக்கு பாராட்டு
தனது கட்சியை சேர்ந்த முக்கிய பிரமுகர் ராகவன் என்றபோதிலும், அண்ணாமலை இதில் தலையீடு செய்யவில்லை. பெண்களுக்கு எதிரான குற்றங்களை செய்வோரை அனைத்து கட்சிகளும் இது போன்ற கடுமையான நடவடிக்கை மூலம் எச்சரிக்கை மெசேஜ் பிறப்பிக்க வேண்டும் என்று சமூக வலைத்தளங்களில் பலரும் கருத்துக் கூறியதை பார்க்க முடிந்தது.

பல கட்சிகளைச் சேர்ந்தவர்கள்
அதேநேரம் ராகவன் குற்றமற்றவர் என்று நிரூபித்து இந்த விவகாரத்தில் இருந்து மீண்டு வருவார் என்று அண்ணாமலை நம்பிக்கை தெரிவித்திருந்தார். இந்தநிலையில், மதன் ரவிச்சந்திரன் யூடியூப் சேனல் திடீரென முடக்கப்பட்டிருக்கிறது. பல கட்சிகளை சேர்ந்த பல பிரமுகர்கள் பற்றிய வீடியோ தன்னிடம் இருப்பதாக மதன் ரவிச்சந்திரன் கூறியதாக தகவல்கள் வெளியாகின. இந்த ஒரு நிலையில் அவரது யூடியூப் சேனல் முடக்கப்பட்டு இருப்பது பல்வேறு சந்தேகங்களை கிளப்பி உள்ளது.

மதன் ரவிச்சந்திரன்
மதன் ரவிச்சந்திரன் ஊடகத் துறையைச் சேர்ந்தவர். ஆனால் பிறகு, அவர் பாஜகவில் இணைந்தார். டெல்லியில், ஜே.பி.நட்டா முன்னிலையில் பாஜகவில் இணைந்தவர் மதன் ரவிச்சந்திரன். அவர் ஏன் இந்த வீடியோவை எடுத்தார், இதன் பின்னணி என்ன என்று பலரும் கேள்வி எழுப்ப ஆரம்பித்தனர். இந்த நிலையில்தான், திடீரென அவரது யூடியூப் சேனல் முடக்கப்பட்டுள்ளது.
-
பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் இவை தானா? கொங்கு & தென் மண்டலம் டார்கெட்! -
திமுகவையே ஓவர்டேக் செய்த எடப்பாடி.. அதிமுக – பாஜக தொகுதி பங்கீட்டில் இப்படி நடந்ததே இல்லை! பின்னணி -
சிங்காநல்லூர் அல்லது கவுண்டம்பாளையம்.. ஒரு தொகுதியை கொடுங்க.. பியூஷ் கோயலிடம் கேட்ட அண்ணாமலை? -
பாமக வரலாற்றிலேயே முதல் முறையாக.. 35 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிகக் குறைவான தொகுதிகளில் போட்டி! -
பாமக போட்டியிடும் 18 தொகுதிகள் எவை? வெளியானது உத்தேச பட்டியல்.. எல்லாமே வட மாவட்டங்களில்? -
Annamalai: அதிமுக அலுவலகத்தில் அண்ணாமலையை காணோமே! ஆதரவாளர்கள் அப்செட்! எடப்பாடி கண்டிஷனா? -
இன்னும் சற்று நேரத்தில் NDA கூட்டணி தொகுதிப் பங்கீடு.. அதிமுக அலுவலகத்துக்கு விரைந்த பியூஷ் கோயல் -
அதிமுக கூட்டணியில் தமாகவுக்கு 5 இடங்கள் ஒதுக்கீடு.. தாமரை சின்னத்தில் போட்டி.. தொகுதிகள் லிஸ்ட் -
அவிநாசி அல்லது மேட்டுப்பாளையம்.. 2ல் ஒரு தொகுதியில் போட்டியிடும் மத்திய இணையமைச்சர் எல்.முருகன்? -
“காருக்குள் வைத்து தவறாக நடக்க முயற்சி”.. பாஜக முக்கிய நிர்வாகி மீது மகளிரணி தலைவி பரபரப்பு புகார் -
Election Commission: தேர்தல் ஆணைய கடிதத்தில் பாஜகவின் முத்திரை.. கேரள அரசியல் கட்சிகள் அதிர்ச்சி.. நடந்தது என்ன? -
அசைக்க முடியாத சாதனையைச் செய்த மோடி! 8,931 நாள் அரசு பதவி! உலக அளவில் உயரும் டிஜிட்டல் செல்வாக்கு!












Click it and Unblock the Notifications