மாதம்பட்டி ரங்கராஜூக்கு சம்மன் போச்சே? இன்று சென்னை போலீஸில் ஆஜராகி விளக்கம் தருவாரா? விடாத ஜாய்
சென்னை: மாதம்பட்டி ரங்கராஜ் மீது நடவடிக்கை எடுப்பதாக போலீசார் எனக்கு உறுதி தந்திருக்கிறார்கள்.. சட்டப்படியாக மாதம்பட்டி ரங்கராஜ் மீது நடவடிக்கை எடுப்பார்கள் என நம்புகிறேன். ஆனால் என்னையே எல்லாரும் குற்றம்சாட்டுகிறார்கள்.. மாதம்பட்டி ரங்கராஜிடம் எதுவுமே கேட்பதில்லை என்று ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிசில்டா கண்ணீருடன் 2 நாட்களுக்கு முன்பு செய்தியாளர்களிடம் கூறியிருந்தார். இந்நிலையில், மாதம்பட்டி ரங்கராஜூக்கு போலீசார் சம்மன் அனுப்பியிருப்பதாக தகவல் வெளியான நிலையில், இன்றைய தினம் சென்னை ஆயிரம் விளக்கு போலீஸில் ஆஜராவார் என்று தெரிகிறது.
நடிகர், தயாரிப்பாளர், சமையல் கலை நிபுணர், டிவி செலிபிரிட்டி என்று நிறைய முகங்களை கொண்டவர் மாதம்பட்டி ரங்கராஜ். விஐபிகளின் வீடுகளின் சமையல் நிகழ்ச்சிகளுக்கு ஹெலிகாப்டரிலேயே சென்று பங்கேற்று வருபவர் என்றெல்லாம் கூறப்படுகிறது.

7 மாத கர்ப்பம்
ஏற்கனவே திருமணமான மாதம்பட்டி தங்கராஜ், தன்னை திருமணம் செய்வதாக சொல்லி, இரண்டு வருடங்கள் வாழ்ந்ததாகவும், இப்போது தான் 7 மாத கர்ப்பமாகவும், தன்னுடைய வயிற்றில் வளரும் குழந்தைக்கு அவர்தான் அப்பா என்றும் ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிசில்டா பொதுவெளியிலேயே பகிரங்கமாக குற்றஞ்சாட்டியிருந்தார்.
இது தொடர்பாக கமிஷனர் அலுவலகத்திலும் புகார் தந்தார். ஆனால், ஜாய் தந்த புகார் மீது போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை என்று சொல்லி, முதல்வர் ஸ்டாலினுக்கு தன்னுடைய சோஷியல் மீடியா பக்கம் கோரிக்கை வைத்தார். "நான் ஏழு மாத கர்ப்பிணியாக இருக்கிறேன். ஸ்டாலின் அப்பா என் குழந்தைக்கு நீதி வேணும்" என்றும் கேட்டுக் கொண்டிருந்தார்.
ஜாய் தந்த ஆதாரங்கள்
இதையடுத்து, சென்னை ஆயிரம் விளக்கு பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு பிரிவு அலுவலகத்தில் ஜாய் கிரிசில்டா 3 நாட்களுக்கு முன்பு ஆஜரானார். காலை 11 மணி முதல் 6 மணி நேரம் ஜாயிடம் விசாரணை நடத்தப்பட்டது..
அப்போது ஜாய் கிரிசில்டாவிடம், மாதம்பட்டி ரங்கராஜ் உடனான தொடர்புகள்? திருமணம் செய்ததற்கான ஆவணங்கள், கருக்கலைப்பு செய்ததற்கான ஆவணங்கள் குறித்து 50க்கும் மேற்பட்ட கேள்விகளை கேட்டு விசாரணை ஆரம்பமானது.. AI தொழில் நுட்பம் தற்போது கையாளப்படுவதால், திருமணம் செய்த புகைப்படங்கள், அதற்கான தரவுகள் குறித்தும் துணை கமிஷனர் விசாரணை நடத்தப்பட்டது.
இதையடுத்து, மாதம்பட்டி ரங்கராஜ் தன்னை ஏமாற்றி திருமணம் செய்து கர்ப்பமாக்கியது குறித்த ஆதாரங்களை ஜாய் சமர்ப்பித்திருந்தார்.
பாவம் சும்மா விடாது
இந்த விசாரணை முடிந்து வெளியே வந்த ஜாய், செய்தியாளர்களிடம் பேசும்போது, எனக்கும் என் வயிற்றில் இருக்கும் குழந்தைக்கும் நீதி தேவை. இந்த பாவமெல்லாம் மாதம்பட்டி ரங்கராஜை சும்மா விடாது. என் குழந்தைக்காக எந்தவொரு உச்சத்துக்கும் சென்று நீதி கேட்பேன்.. நிச்சயம் போலீசார் இதில் நடவடிக்கை எடுப்பார்கள். எனக்கு காவல்துறை மீது நம்பிக்கை உள்ளது' என்று கூறியிருந்தார்.
ஜாயிடம் விசாரணை நடத்தி முடிக்கப்பட்டதையடுத்து, மாதம்பட்டி ரங்கராஜிடம் விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்திருப்பதாக கூறப்பட்டது.. இதன்காரணமாக மாதம்பட்டிக்கு விரைவில் சம்மன் அனுப்பப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்பட்டது.
அதன்படியே, தன்னை திருமணம் செய்து ஏமாற்றியதாக ஜாய் கிரிசில்டா கொடுத்த புகாரில் 26ம் தேதி ஆஜராகுமாறு மாதம்பட்டி ரங்கராஜூக்கு பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவு போலீஸ் சம்மன் அனுப்பியது.
இன்று நேரில் ஆஜராகுவாரா
ஏற்கனவே ஜாய் ஆஜரானபோது அவரிடம் 6 மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை நடந்த நிலையில், இன்றைய தினம் மாதம்பட்டி ரங்கராஜ் ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள குழந்தைகள், பெண்களுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவு அலுவலகத்தில் துணை ஆணையர் முன்பு ஆஜராக உள்ளதாக கூறப்படுகிறது.
இன்று நேரில் ஆஜராகும் மாதம்பட்டி ரங்கராஜிடம் போலீசார் விசாரணை நடத்த உள்ளதால், தன்னுடைய விளக்கத்தை போலீசில் தெரிவிப்பார் என்று நம்பப்படுகிறது.. எனவே இந்த வழக்கில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
-
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக் -
டெல்டா, வடக்கில் விஜய்க்கு 'முட்டை’ தான்.. மொத்தமாக தவெகவுக்கு எத்தனை சீட் கிடைக்கும்? புதிய கருத்து கணிப்பு












Click it and Unblock the Notifications