விடைபெற்றார் மதன் பாப்.. கதறி அழுத மனைவி.. பெசன்ட் நகர் மயானத்தில் கண்ணீர் மல்க உடல் தகனம்!
சென்னை: பிரபல நகைச்சுவை நடிகர் மதன் பாப் (71), உடல்நலக் குறைவால் நேற்று இரவு காலமானார். இந்நிலையில் அவரது உடல் இன்று தகனம் செய்யப்பட்டது.
மதன் பாப், புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது உடல், இறுதி அஞ்சலிக்காக அடையாறில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த நிலையில், இன்று மாலை 4 மணியளவில் சென்னை பெசன்ட் நகர் மின் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.

மதன் பாப், தமிழ், தெலுங்கு, மலையாளம், மற்றும் இந்தி உள்ளிட்ட மொழிகளில் 150-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்தவர். அவரது தனித்துவமான சிரிப்பு, உடல் மொழி ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தது. 1984ஆம் ஆண்டு பாலு மகேந்திராவின் 'நீங்கள் கேட்டவை' படம் மூலம் நடிகராக அறிமுகமான இவர், இயக்குநர் கே. பாலச்சந்தரின் 'வானமே எல்லை' படத்தில் 'மதன் பாப்' என்ற பெயரைப் பெற்றார்.
ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய், அஜித், சூர்யா உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் பல படங்களில் நடித்து, தனது நகைச்சுவை மற்றும் குணச்சித்திர வேடங்களால் புகழ் பெற்றார். மதன் பாப், நடிப்பு மட்டுமல்லாமல் இசையமைப்பாளராகவும், தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளராகவும், மிமிக்ரி கலைஞராகவும் பன்முகத் திறமை கொண்டவர்.
'அசத்தப் போவது யாரு' உள்ளிட்ட காமெடி நிகழ்ச்சிகளில் நடுவராகப் பணியாற்றிய இவர், இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மானுடனும் நெருக்கமாக பணியாற்றியவர். மதன் பாப்பின் மியூசிக் ட்ரூப் உடன் இணைந்து ஏ.ஆர்.ரஹ்மான் பணியாற்றியுள்ளார்.
மதன் பாப்பின் மனைவி சுசிலா ஒரு பாடகி, மேலும் இவர்களுக்கு ஜனனி என்ற மகளும், அர்ஷித் என்ற மகனும் உள்ளனர். நடிகர் மதன் பாப்பின் மறைவு, திரையுலகினரையும் ரசிகர்களையும் பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
இன்று காலை முதல், மதன் பாப் உடலுக்கு திரையுலக பிரபலங்கள், அரசியல் தலைவர்கள், மற்றும் ரசிகர்கள் அஞ்சலி செலுத்தினர். இன்று பிற்பகல், அவரது உடல் ஊர்வலமாக பெசன்ட் நகர் மின் மயானத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு, குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய உறவினர்கள் முன்னிலையில் தகனம் செய்யப்பட்டது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications