மதன் பாப் மகள் பிரபல பாடகி.. தந்தை மறைவால் மன வேதனையில் ஜனனி போட்ட பதிவு!
சென்னை: மறைந்த மதன் பாப்பின் மகள் ஜனனி ஒரு பிரபல பாடகி. தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் 100க்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடியுள்ளார். தனது தந்தையின் இறப்பால் மனம் உருகி அவர் சமூக வலைதளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
மதன் பாப் 1950 ஆம் ஆண்டு சென்னையில் பிறந்தவர். இசை அமைப்பாளராக திரைத்துறை வாழ்க்கையை தொடங்கிய மதன்பாபு, பின்னர் ஒரு நகைச்சுவை நடிகராக திரையுலகில் தனக்கென ஒரு தனி அடையாளத்தை பதித்தவர்.

1984ஆம் ஆண்டு நீங்கள் கேட்டவை என்ற பாலு மகேந்திராவின் நீங்கள் காமெடி நடிகராக அறிமுகம் ஆனார். அதன்பின்னர் வானமே எல்லை, காட்ஜி மல்லி, தேவர் மகன், ஹான்ஸ்ட் ராஜ், திருடா திருடா, பூவே உனக்காக என 100க்கும் மேற்பட்ட தமிழ் படங்களில் நடித்தார்.
1990-களில் இருந்து பல ஹிட் படங்களில் துணை மற்றும் நகைச்சுவை வேடங்களில் நடித்த அவர், தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் நடுவராகவும் பங்கேற்றுள்ளார். இந்நிலையில், சமீப காலமாக உடல்நலக் குறைபாடால் அவதிப்பட்டு வந்த மதன்பாபு, நேற்று மாலை காலமானார். நடிகர் மதன் பாப்பின் மறைவு, திரையுலகினரையும் ரசிகர்களையும் பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. அவரது உடல் சென்னை அடையாரில் உள்ள அவரது இல்லத்தில் பொதுமக்கள் மற்றும் திரையுலகினரின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது.
இன்று காலை முதல், மதன் பாப் உடலுக்கு திரையுலக பிரபலங்கள், அரசியல் தலைவர்கள், மற்றும் ரசிகர்கள் அஞ்சலி செலுத்தினர். இன்று பிற்பகல், அவரது உடல் ஊர்வலமாக பெசன்ட் நகர் மின் மயானத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு, குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய உறவினர்கள் முன்னிலையில் தகனம் செய்யப்பட்டது.
மதன் பாப்பின் மனைவி சுசிலா ஒரு பாடகி, மேலும் இவர்களுக்கு ஜனனி என்ற மகளும், அர்ஷித் என்ற மகனும் உள்ளனர். தந்தையிடம் இருந்து இசையை கற்ற ஜனனி ஒரு சிறந்த பாடகராக வலம் வருகிறார். இவர் சிறந்த தெலுங்கு மற்றும் மலையாளம் ஆகிய பல மொழிகளில்100க்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளார்.
சுந்தர் சி நடித்த வீராப்பு படத்தில் வரும் "போனா வருவீரா.." தனுஷ் நடித்த படிக்காதவன் படத்தில் வரும் "ரோசு ரோசு ரோசு.." விஜய் நடித்த சுறா படத்தில் வரும் "நான் நடந்தா அதிரடி.." போன்ற பல சூப்பர்ஹிட் பாடல்களை இவர் பாடியுள்ளார்.
தனது தந்தையின் மறைவு குறித்து இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட ஜனனி, "வெளியில் இருக்கும் மரங்கள் ஏன் சற்று வெறிச்சோடியது போல தோன்றுகின்றன? உலகமே ஏன் மங்கலான ஒன்றாக இருக்கிறது? நான் சுவாசிக்கும் காற்றே ஏன் வேறுபட்டதாக தெரிகிறது? இனி வாழ்க்கை யாரையோ இழந்தது போலவே உணர்கிறது? ஏனெனில், ஒரு தலைசிறந்த தந்தையை அது வழியனுப்பி வைக்கிறது!" எனக் குறிப்பிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications