Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பிளான் பண்ணி, டிரிக்கர் செய்து.. கெட்ட வார்த்தை யூஸ் செய்ய வைத்த "4 பேர்".. பப்ஜி மதன் மனைவி பரபர!

Subscribe to Oneindia Tamil

சென்னை: திட்டமிட்டு மதனை கெட்ட வார்த்தை பேச வைத்துள்ளதாக ஜாமீனில் வெளியே வந்த மதனின் மனைவி கிருத்திகா பேட்டி அளித்துள்ளார்.

Recommended Video

    எந்த சொத்தும் வாங்கல! PUBG Madan Wife Krithika அதிரடி பேட்டி | Oneindia Tamil

    ஆன்லைன் விளையாட்டில் ஆபாசமாக பேசியதாக மதன் மீது புகார்கள் எழுந்தது. இதையடுத்து தலைமறைவாக இருந்த அவர் தருமபுரியில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

    யூடியூப் சேனலின் இயக்குநராக இருந்ததாக அவரது மனைவி கிருத்திகாவையும் போலீஸார் கைது செய்திருந்தனர். இந்த நிலையில் அவர் ஜாமீனில் வெளியே வந்துள்ளனர்.

    காவல் ஆணையர்

    காவல் ஆணையர்

    சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவாலை சந்தித்து தங்கள் மீது பொய்யாக குற்றச்சாட்டுகள் புனையப்படுவதாக புகார் அளிக்க வந்தார் பப்ஜி மதனின் மனைவி கிருத்திகா. இதையடுத்து மதன் மீது குண்டர் சட்டமும் பாய்ந்துள்ளதை அறிந்த கிருத்திகா செய்தியாளர்களை சந்தித்தார்.

    கொரியா விளையாட்டு

    கொரியா விளையாட்டு

    அப்போது அவர் கூறுகையில் பப்ஜி விளையாட்டு இந்தியாவில் தடை செய்யப்பட்டுள்ளதாக கூறுகிறார்கள். இந்தியாவில் தடை செய்யப்பட்டது சீன நாட்டு வெர்ஷன் ஆகும். ஆனால் மதன் விளையாடியது கொரியன் வெர்ஷன்தான். இதற்கு இந்தியாவில் தடை இல்லை.

    3 ஆண்டு உழைப்பு

    3 ஆண்டு உழைப்பு

    மதன் கடந்த 3 ஆண்டுகளாக தினந்தோறும் 20 மணி நேரம் யூடியூப் சேனலில் உழைத்தார். இதுவரை எங்களுக்கு சொந்த வீடு கூட இல்லை. நாங்கள் வாடகை வீட்டில்தான் தங்கியுள்ளோம். ஏதோ சொகுசு கார் வாங்கியதாக சொல்கிறார்கள்.

    ஆடி கார்தான்

    ஆடி கார்தான்

    எங்களிடம் இருப்பது ஆடி கார் மட்டும்தான். வேறு எந்த காரும் இல்லை. மதன் மீது போடப்பட்ட குண்டர் சட்டத்தை எதிர்கொள்வேன். என் கணவர் மீது 200 -க்கும் மேற்பட்டோர் புகார் அளித்ததாக போலீஸார் கூறியிருந்தனர். ஆனால் இது தவறு.

    4 பேரே மீண்டும் மீண்டும் புகார்

    4 பேரே மீண்டும் மீண்டும் புகார்

    என் கணவர் மீது 4 பேர் மட்டுமே புகார் அளித்திருந்தனர். இந்த 4 பேரே மீண்டும் மீண்டும் புகார்களை கொடுத்ததால் 200 புகார்கள் வரை சென்றது. எங்கள் பாஸ்புக், ஏடிஎம் கார்டு, வீட்டுச் சாவி ஆகியவற்றை போலீஸார் வைத்துள்ளனர். பண மோசடி செய்ததாக என் கணவர் மீது புகார் எழுந்தது. இது தவறு. ஆதாரமில்லாத குற்றச்சாட்டு ஆகும்.

    யூடியூப் சேனல் முடக்கம்

    யூடியூப் சேனல் முடக்கம்

    யூடியூப் சேனலை போலீஸார் முடக்கியதால் எங்கள் வாழ்வாதாரமே கேள்விக்குறியாகிவிட்டது. எங்களுக்கு முழு வருமானம் இதிலிருந்துதான் கிடைக்கிறது. தற்போது அதை முடக்கிவிட்டனர். எனக்கும் மதனின் யூடியூப் சேனல் நிர்வாகத்திற்கு தொடர்பே இல்லை. அவரது நிர்வாகத்தில் நான் ஈடுபட்டதில்லை. என் வங்கிக் கணக்கை மட்டுமே மதன் பயன்படுத்தி வருகிறார்.

    ஒரே வீடியோ

    ஒரே வீடியோ

    ஆபாசமாக பேசினார் என புகார் சொல்கிறீர்கள். திருப்பி திருப்பி ஒரே வீடியோவை போட்டு காண்பிக்கிறார்கள். அந்த வீடியோவுக்கு சென்று பாருங்கள் தெரியும். அதில் புகார் கொடுத்த 4 பேர் என் கணவரை ஆபாசமாக பேச தூண்டிவிட்டது. இவை அனைத்தும் அந்த 4 பேரால் திட்டமிட்டு செய்யப்பட்ட சதி. இதனால்தான் என் கணவர் ஆபாசமாக பேசினார் என கிருத்திகா தெரிவித்தார்.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+