மிரண்ட மாதவரம்.. வேணுகோபால் நகருக்கே போயாச்சு.. அசரடித்த "ஆனைமலை" சுரங்கப்பாதை.. சபாஷ் சென்னை மெட்ரோ
சென்னை: 2-வது கட்ட சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தில் மாதவரம் பால் பண்ணை முதல் வேணுகோபால் நகர் வரை சுரங்கம் தோண்டும் பணி நிறைவு பெற்றுள்ளது.
மெட்ரோ ரயில் திட்டத்துக்கான சுரங்கம் தோண்டும் பணியை முதல்வர் ஸ்டாலின் மாதவரத்தில் கடந்த அக்டோபரில் அக்டோபரில் முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்..
சென்னையில் 2ம் கட்ட மெட்ரோ ரயில் திட்டப் பணிகள் ரூ.63,246 கோடியில் 118.9 கி.மீ. தொலைவுக்கு நடைபெற்று வருகின்றன..

மாதவரம்: இந்த திட்டத்தில், மாதவரம் - சிறுசேரி சிப்காட் வரை (3-வது வழித்தடம்) 45.8 கி.மீ. தொலைவுக்கும், கலங்கரை விளக்கம் - பூந்தமல்லி வரை (4-வது வழித்தடம்) 26.1 கி.மீ. தொலைவுக்கும், மாதவரம் - சோழிங்கநல்லூர் வரை (5-வது வழித்தடம்) 47 கி.மீ. தொலைவுக்கும் 3 வழித்தடங்களில் மெட்ரோ ரயில் திட்டப் பணிகள் நடைபெறுகின்றன.
இதனிடையே, மயிலாப்பூரில் 3 நடைமேடைகளுடன் ஆழமான மெட்ரோ ரயில் நிலையமும் அமைக்க உள்ளார்கள்.. இந்த மயிலாப்பூர் நிலையமானது, 3-வது மற்றும் 4-வது வழித்தடத்துக்கான பரிமாற்ற நிலையமாக இருக்கும் என்றும், 4 நிலைகளுடன் தரைக்குக் கீழே 35 மீ (115 அடி) ஆழத்தில் அமைக்க உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.. அதனால், 4 சுரங்கப்பாதை துளையிடும் இயந்திரங்கள் வெவ்வேறு நிலைகளில் பயன்படுத்தப்பட உள்ளன.
ஆனைமலை: 2ம் கட்ட சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தில், சுரங்கம் தோண்டும் பணிகளுக்கு 23 சுரங்கம் தோண்டும் இயந்திரங்களும் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றன.. ஆனைமலை என்றும் இந்த சுரங்கத்துக்கு பெயரிடப்பட்டுள்ளது..
இந்த ஆனை மலை சுரங்கம் தோண்டும் இயந்திரம் மாதவரம் பால் பண்ணையில் இருந்து கடந்த பிப்ரவரி 16ம் தேதி சுரங்கம் தோண்டும் பணியை துவங்கியது. இந்த சுரங்கம் தோண்டும் இயந்திரமானது, மாதவரம் பால்பண்ணையில் இருந்து 415 மீட்டர் தொலைவுக்கு தன் பணியை முடித்துள்ளது.. அதன்படி, வேணுகோபால் நகரையும் வெற்றிகரமாக எட்டிவிட்டது.
பால்பண்ணை: அதுபோலவே, சேர்வராயன் சுரங்கம் தோண்டும் இயந்திரம் மாதவம் பால் பண்ணையில் கடந்த மே மாதம் சுரங்கம் தோண்டும் பணியை தொடங்கியது... 50 மீட்டர் சுரங்கப் பணியை முடித்து வரும் ஆகஸ்டு 25-ம் தேதி வேணுகோபால் நகரை வந்தடையும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இதுகுறித்து சென்னை மெட்ரே ரயில் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் சொல்லும்போது, இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்துக்கான சுரங்கம் தோண்டும் பணிகள் துரிதமாகி வருகின்றன. மொத்தம் 23 சுரங்கம் தோண்டும் இயந்திரங்களை சுரங்கம் தோண்டும் பணிக்கு பயன்படுத்த உள்ளோம். முதல் சுரங்க இயந்திரம் தன்னுடைய பணியை நிறைவு நிறைவு செய்துள்ள நிலையில், அடுத்ததாக, இந்த இயந்திரத்தை அயனாவரத்தில் பயன்படுத்த உள்ளோம்.
கனத்த நம்பிக்கை: இரண்டாம் மெட்ரோ திட்டத்தில், உயர்மட்ட ரயில் பாதைக்கான கட்டுமானபணிகள் 2024-ம் ஆண்டு முடிந்துவிடும். இதையடுத்து, எஞ்சியுள்ள பணிகளைமுடித்து 2025-ம் ஆண்டு இறுதி முதல் படிப்படியாக மெட்ரோ ரயில் சேவை தொடங்கி வைக்கப்படும். வரும் 2027-ல் தொடக்கத்தில் அனைத்து உயர்மட்ட மெட்ரோ பணிகளும் முடிக்கப்பட்டு, 2028-ல் சுரங்கப்பாதையில் மொத்த பணிகளும் நிறைவு செய்யப்படும்.
-
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுகிறேன்.. அறிவித்தார் செல்வபெருந்தகை! பின்னணி இதுதான் -
ஆளூர் ஷாநவாஸ் செய்த அயோக்கியத்தனம்.. விசிகவில் சீட் கொடுக்காதது ஏன்? கொந்தளித்த சங்க தமிழன் -
திண்டுக்கல் எஸ்ஐக்கு மனமகிழ் மன்றத்தில் இருந்து வந்த அழைப்பு.. கனவிலும் நினைக்காத சம்பவம் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை லெப்ட் ரைட் வாங்கிய மீனா.. அண்ணாமலை கொடுத்த ஐடியா! மாஸ் காட்டிய முத்து -
அடுத்தடுத்து அண்ணாமலையை சந்தித்த கோவை அதிமுக வேட்பாளர்கள்.. டெல்லிக்கு வேலுமணி க்ளியர் மெசேஜ் -
பாஜக சிட்டிங் எம்.எல்.ஏவுக்கு சீட் மறுப்பு.. தொகுதி மாறிய 2 MLAக்கள்! வேட்பாளர் பட்டியலில் ட்விஸ்ட்! -
வில்லிவாக்கத்தில் நானே வேட்பாளர் என நினைத்துக் கொள்ளுங்கள்.. நண்பனுக்காக களம் இறங்கிய சபரீசன் பேட்டி -
கிரவுண்ட் ஜீரோ ரிப்போர்ட்.. தரைதட்டிய களப்பணி.. கிரவுண்டில் திணறும் தவெக.. விஜய்க்கு சிம்ம சொப்பனம் -
பாஜக வேட்பாளர் பட்டியல் வந்ததுமே அண்ணாமலை கொடுத்த முதல் ரியாக்ஷன்!












Click it and Unblock the Notifications