Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பெரியார் டிஸ்யூம் சண்டை போடுபவர் அல்ல.. அவர்தான் ரியல் ஸ்டண்ட் மாஸ்டர்.. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்

Subscribe to Oneindia Tamil

சென்னை: பெரியார்தான் ரியல் ஸ்டண்ட் மாஸ்டர் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினருமான மதுக்கூர் ராமலிங்கம் தெரிவித்துள்ளார்.

இந்து முன்னணி அமைப்பின் இந்துக்களின் உரிமை மீட்புப் பிரசார பயணம் நிறைவு விழாவை ஒட்டி சென்னை மதுரவாயலில் ஆகஸ்ட் 1ம் தேதி பொதுக்கூட்டம் நடைபெற்றது. அதில் பங்கேற்ற இந்து முன்னணி மாநில கலை பண்பாட்டு பிரிவின் செயலரும், சினிமா ஸ்டண்ட் மாஸ்டருமான கனல் கண்ணன், ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் எதிரே உள்ள பெரியார் சிலையை உடைக்க வேண்டுமென மூன்று முறை கடும் ஆக்ரோசமாக பேசியிருந்தார்.

இதுதொடர்பாக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் மாவட்ட செயலர் குமரன் சென்னை மாநகர காவல் ஆணையரகத்தில் அளித்த புகாரில், இரு பிரிவினரிடையே கலவரத்தை ஏற்படுத்தும் வகையில் பேசிய கனல்கண்ணன் மீதும், நிகழ்ச்சி ஏற்பட்டாளர்கள் மீதும் வழக்குபதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்திருந்தார்.

கனல் கண்ணன்

கனல் கண்ணன்

இந்த புகார் தொடர்பாக கனல் கண்ணன் மீது கலகம் செய்ய தூண்டிவிடுதல், அமைதியை சீர்குலைக்கும் வகையில் செயல்படுதல் ஆகிய பிரிவுகளின் கீழ் சென்னை சைபர் க்ரைம் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கில் அவரது முன் ஜாமின் மனுவை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம், ஆகஸ்ட் 11ஆம் தேதி தள்ளுபடி செய்த நிலையில், புதுச்சேரியில் பதுங்கியிருந்த கனல் கண்ணனை ஆகஸ்ட் 15ஆம் தேதியன்று கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

நீதிமன்றக் காவல்

நீதிமன்றக் காவல்

ஆகஸ்ட் 26ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்ட கனல் கண்ணன் ஜாமீன் கோரிய மனுக்கள் சென்னை எழும்பூர் நீதிமன்றத்தாலும், முதன்மை அமர்வு நீதிமன்றத்தாலும் தள்ளுபடி செய்யப்பட்டன. இதையடுத்து ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். அவரது மனுவில், தான் பேசியது இந்த நாட்டின் சட்டத்திற்கு புறம்பானது ஏதும் இல்லை என்றும், சிலையில் இருந்த வாசகங்கள் தான் இந்திய தண்டனை சட்டத்தின் கீழ் தண்டிக்கப்பட வேண்டிய குற்றம் என மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

சிலை வைத்தவர்கள்

சிலை வைத்தவர்கள்

கோவிலின் முன் அந்த சிலையை வைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்காத காவல்துறை, துரதிஷ்டவசமாக தன் மீது வழக்குப்பதிவு செய்துள்ளதாக கனல் கண்ணன் தன் மனுவில் குறிப்பிட்டுள்ளார். இந்த மனு நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன்பு விசாரணைக்கு வந்தபோது காவல்துறை பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு செப்டம்பர் 1 (நாளை) தள்ளிவைத்துள்ளார்.

கைதாகியும் கனல் விமர்சனம்

கைதாகியும் கனல் விமர்சனம்

கைதாகியும் கனல் கண்ணன் நீதிமன்றத்தில் பெரியாரை விமர்சித்துள்ளது குறித்து மதுக்கூர ராமலிங்கம் கூறுகையில் ஸ்ரீரங்கத்தில் ராஜகோபுரம் தெரியும். அதன் எதிரே ரொம்ப அடக்கமாக பெரியார் அமர்ந்திருக்கிறார். ஆனால் எதிராளிகளின் கண்களுக்கு ராஜகோபுரம் தெரியவில்லை. எதுவுமே செய்யாமல் இருக்கிற பெரியார்தான் அவர்களுக்கு உறுத்துகிறார்.

ரியல் ஸ்டண்ட் மாஸ்டர்

ரியல் ஸ்டண்ட் மாஸ்டர்

பெருமாள் படுத்து கொண்டிருப்பதைப் பார்த்து கொண்டிருக்கிறார் பெரியார். ஆனால் அதை கூட அவர்களால் சகித்துக் கொள்ள முடியவில்லை. அதிலும் ஒரு ஸ்டண்ட் மாஸ்டர் அளவுக்கு அதிகமாக பொங்கி இருக்கிறார். அவர் சினிமா ஸ்டண்ட் மாஸ்டர்தான். ஆனால் எதிரில் அமர்ந்திருப்பவர் ரியல் ஸ்டண்ட் மாஸ்டர் என்றார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+