சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்ஜிப் டிரான்ஸ்ஃபருக்கு எதிர்ப்பு..பார் அசோஸியேஷன் அவசர கூட்டம்!

Google Oneindia Tamil News

சென்னை: சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜியை மேகாலயா உயர்நீதிமன்றத்திற்கு இடமாற்றம் செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து வழக்கறிஞர்களுக்கான சென்னை பார் அசோஸியேஷன் கூட்டம் இன்று சென்னையில் நடக்கிறது.

சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக உள்ள சஞ்ஜிப் பானர்ஜியை திடீரென மேகாலயா உயர்நீதிமன்றத்திற்கு மாற்றி உச்ச நீதிமன்றம் கொலிஜியம் பரிந்துரை செய்துள்ளது. இந்த திடீர் இடமாற்றம் கடும் எதிர்ப்புகளை சந்தித்துள்ளது.

அலகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதி முனீஸ்வர் நாத் பண்டாரி சென்னை உயர் நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக நியமிக்கப்படுவார் என்று உச்ச நீதிமன்றம் கொலிஜியம் பரிந்துரை செய்துள்ளது. அதேபோல் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி டிஎஸ் சிவஞானம் கொல்கத்தா உயர் நீதிமன்றத்திற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

பஸ்ல இடிக்கிறதும் ஆசிரியரின் பாலியல் சீண்டலும் ஒன்றா?.. பள்ளிக்கு வந்துட்டா அவ உங்க பொண்ணும்மா! பஸ்ல இடிக்கிறதும் ஆசிரியரின் பாலியல் சீண்டலும் ஒன்றா?.. பள்ளிக்கு வந்துட்டா அவ உங்க பொண்ணும்மா!

இடமாற்றம்

இடமாற்றம்

இந்த திடீர் இடமாற்றம் கடும் எதிர்ப்புகளை சந்தித்துள்ளது. சென்னையைச் சேர்ந்த 237 வழக்கறிஞர்கள் இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து உச்ச நீதிமன்றம் கொலிஜியத்திற்கு கடிதம் எழுதி இருந்தனர். 10 மாதம் மட்டுமே ஆன நிலையில் தலைமை நீதிபதியை மாற்ற வேண்டிய அவசியம் என்ன? அந்த நீதிபதி மீது குற்றப்புகார், முறைகேடு புகார் எதுவும் உள்ளதா? எதனால் இந்த திடீர் மாற்றம்?

எதிர்ப்பு

எதிர்ப்பு

சென்னை உயர் நீதிமன்றம் பெரியது. இங்கு 75 நீதிபதிகள் உள்ளனர். மேகாலயா நீதி மன்றம் தொடங்கப்பட்டதே 2013ல்தான். இங்கு 2 நீதிபதிகள் மட்டுமே உள்ளனர். அப்படி இருக்கும் போது பெரிய நீதிமன்றத்தில் இருக்கும் தலைமை நீதிபதியை இடமாற்றம் செய்வது ஏன்? இதற்கு வெளிப்புற அழுத்தம் ஏதாவது காரணமா?

பணியிட மாற்றம்

பணியிட மாற்றம்

இந்த பணியிட மாற்றம் சந்தேகத்திற்கு உரியதாக இருக்கிறது. இதை உடனே திரும்ப பெற வேண்டும் என்று கோரிக்கை வைத்து சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள், தலைமை நீதிபதி என்.வி ரமணா, மற்றும் நீதிபதிகள் ஏ.எம்.கன்வில்கர், டி.ஒய்.சந்திரசூட் ஆகியோர் கோடா கொலிஜியத்திற்கு கடிதம் எழுதி இருந்தனர். இதனால் சென்னை உயர் நீதிமன்றத்தில் பதற்றமான சூழ்நிலை நிலவி வந்தது.

கூட்டம்

கூட்டம்

இந்த நிலையில் சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜியை மேகாலயா உயர்நீதிமன்றத்திற்கு இடமாற்றம் செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து வழக்கறிஞர்களுக்கான சென்னை பார் அசோஸியேஷன் கூட்டம் சென்னையில் இன்று நடக்கிறது. பார் அசோஸியேஷனின் பொது கவுன்சில் மீட்டிங் இன்று நடக்கிறது. 200க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள், சில நீதிபதிகள் இதில் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

English summary
Emergency General Body meet called by Madras Bar Association to discuss the sudden transfer of Madras HC CJ Sanjeeb Banerjee.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X