அதிமுக பொதுக்குழு..எடப்பாடி பழனிச்சாமி, ஓ.பன்னீர் செல்வம் பதில்தர சென்னை நீதிமன்றம் உத்தரவு

Subscribe to Oneindia Tamil

சென்னை: அதிமுக பொதுக்குழு கூட்டத்துக்கு தடைவிதிக்கக் கோரிய வழக்கில் ஓ. பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி பதிலளிக்க உரிமையியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதிமுக பொதுக்குழு கூட்டத்துக்கு தடை கோரி சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் சூரியமூர்த்தி என்பவர் வழக்கு தொடர்ந்தார். கட்சி நிர்வாகிகள் தேர்தலை எதிர்த்த வழக்கு நிலுவையில் உள்ளதால் பொதுக்குழு கூட்டத்தை கூட்ட தடைவிதிக்க கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது.

பொதுக்குழுவுக்குத் தடை விதிக்க வேண்டும் என்று திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி அருகேயுள்ள ஆவிலிபட்டி பகுதியில் வசிக்கும் அதிமுகவைச் சேர்ந்த எஸ்.சூரிய மூர்த்தி சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

Madras Court Order Edappadi Palanisamy, O. Panneer Selvam Answered AIADMK General Committee

அந்த மனுவில் அதிமுக பொதுச் செயலாளராக இருந்த ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு 2017ஆம் ஆண்டு கட்சியின் விதிகளுக்கு முரணாகக் கட்சியின் ஒருங்கிணைப்பாளராக ஓ.பன்னீர்செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிச்சாமியும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இந்த பதவிகளை ஏற்று எந்தவொரு ஆவணத்தையோ, கடிதத்தையோ தேர்தல் ஆணையம் கட்சிக்குத் தரவில்லை.

அங்கீகரிக்கப்பட்ட கட்சியின் உட்கட்சி விவகாரத்தில் தலையிடத் தேர்தல் ஆணையத்திற்கு உரிமையில்லை. சிவில் நீதிமன்றத்திற்குத்தான் உரிமை உள்ளது என்று கட்சித் தொடர்பான வழக்கு ஒன்றில் 2020ல் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. அதுபோன்று, கட்சியின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் பதவியை எந்த உரிமையியல் நீதிமன்றமும் அங்கீகரிக்கவில்லை. அதிமுக பொதுச் செயலாளர் பதவியை நீக்கியது சரிதான் என்றும் எந்த நீதிமன்றமும் தெரிவிக்கவில்லை.

எனவே விதிமுறைகளுக்கு முரணாக ஜூன் 23ஆம் தேதி நடைபெறும் பொதுக்குழுவுக்குத் தடை விதிக்க வேண்டும்" என்று வலியுறுத்தியிருந்தார். இந்த மனுவை ஏற்கனவே விசாரித்த நீதிபதி எஸ்.பிரியா, அதிமுக அவைத்தலைவர் தமிழ் மகன் உசேன், ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை ஜூன் 16 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.

இந்நிலையில் மனுதாரர் சூர்யமூர்த்தி அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் இல்லாததால் உட்கட்சி விவகாரத்தில் தலையிட முடியாது. அவரது மனுவை நிராகரிக்க வேண்டும் என்று ஓ.பன்னீர் செல்வம், எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கு கடந்த 16ஆம் தேதியன்று விசாரணைக்கு வந்த போது, மனுதாரர் தரப்பில் பொதுக்குழுக் கூட்டம் வரும் 23ஆம் தேதி நடைபெற உள்ளதால் வழக்கை முன் கூட்டியே விசாரிக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது. இந்த கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம், வழக்கு குறித்து சூரிய மூர்த்தி பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஜூலை 22ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.

இதனிடையே அதிமுக பொதுக்குழு கூட்டத்துக்கு தடைவிதிக்கக் கோரிய வழக்கில் ஓ. பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஜூலை 4ஆம் தேதி பதிலளிக்க உரிமையியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கட்சி நிர்வாகிகள் தேர்தலை எதிர்த்த வழக்கு நிலுவையில் உள்ளதால் பொதுக்குழு கூட்டத்தை கூட்ட தடைவிதிக்க கோரி மனு அதிமுக பொதுக்குழு கூட்டத்துக்கு தடை கோரி சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் சூரியமூர்த்தி என்பவர் வழக்கு தொடர்ந்து உள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+