சென்னையில் பரவும் மெட்ராஸ் ஐ.. பள்ளி மாணவர்களுக்கு கண் பரிசோதனை.. மா.சுப்ரமணியன் உத்தரவு
சென்னை: சென்னையில் மெட்ராஸ் ஐ பரவி வருவதால் வருகிற 16ஆம் தேதி முதல் 26ஆம் தேதி வரை ஆகிய 10 நாட்களுக்கு பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட அனைத்து வகையான பள்ளி மாணவர்களுக்கும் கண் பரிசோதனை செய்யப்படும் என்று அமைச்சர் மா.சுப்ரமணியன் கூறியுள்ளார்.
கண் வெண்படல அழற்சி என்ற மெட்ராஜ் ஐ தொற்று சென்னையில் கடந்த சில நாட்களாக அதிகரித்து வருகிறது. கண்கள் சிவந்து எரிச்சலை ஏற்படுத்தும். கண் விழியையும், இமையையும் இணைக்கும் ஜவ்வு படலத்தில் ஏற்படும் வைரஸ் தொற்று தான் மெட்ராஸ் ஐ எனப்படும் கண்நோய் ஆகும்.

விழியையும், இமையையும் இணைக்கும் ஜவ்வு படலத்தில் ஏற்படும் வைரஸ் தொற்று தான் மெட்ராஸ் ஐ கண்நோய் ஆகும். இந்த மெட்ராஸ் பாதிப்பால் கண் எரிச்சல், விழிப்பகுதி சிவந்து காணப்படுதல், நீர் சுரந்து கொண்டே இருத்தல், கண்ணில் இருந்து அழுக்கு வெளியேறி இமைப்பகுதி ஒட்டிக் கொள்ளுதல், வெளிச்சத்தை பார்க்கும் போது கண் கூசுதல் உள்ளிட்டவை மெட்ராஸ் ஐ யின் அறிகுறிகள் ஆகும்.
இந்நோய் பாதிக்கப்பட்டவர்கள் பயன்படுத்தும் பொருட்களை பயன்படுத்தினால் பிறருக்கும் மெட்ராஸ் ஐ பரவக்கூடும். சென்னையில் "மெட்ராஸ் ஐ" எனப்படும் கண் நோய் மிகவும் தீவிரமாக பரவி வருகிறது. சென்னையில் உள்ள கண் மருத்துவமனைகளில் தினமும் 50க்கும் மேற்பட்டோர் இந்நோய்க்கு சிகிச்சைப் பெறுகின்றனர்.
பள்ளி மாணவர்கள் பலரும் மெட்ராஸ் ஐ பாதிப்பிற்கு ஆளாகி வருகின்றனர். இந்த நிலையில் மாணவர்களுக்கு 10 நாட்களுக்கு கண் பரிசோதனை செய்யப்படும் என்று அமைச்சர் மா.சுப்ரமணியன் கூறியுள்ளார். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், வடகிழக்கு பருவமழை தொடங்குவதால் மெட்ராஸ் ஐ பாதிப்பு வேகமாக பரவி வருகிறது. குறிப்பாக சென்னையில் மெட்ராஸ் ஐ பரவல் அதிகரிக்க தொடங்கியுள்ளது .
குடும்பத்தில் ஒருவருக்கு மெட்ராஸ் ஐ பாதித்தாலே குடும்பம் முழுவதும் பரவ வாய்ப்புள்ளது. மெட்ராஸ் ஐ பாதித்தவர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட சொட்டு மருந்துகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என கூறினார்.

மேலும், வருகிற 16ஆம் தேதி முதல் 26ஆம் தேதி வரை ஆகிய 10 நாட்களுக்கு பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட அனைத்து வகையான பள்ளி மாணவர்களுக்கும் கண் பரிசோதித்து பாதுகாக்கின்ற மகத்தான திட்டத்தை அரசு முன்னெடுத்து இருக்கிறது என்று தெரிவத்த அமைச்சர் மா. சுப்ரமணியன், வருகிற செப்டம்பர் 16ஆம் தேதி காலை 9 மணிக்கு ஏதாவது ஒரு பள்ளியில் இந்த திட்டம் தொடங்கி வைக்கப்படும் என்றார்.
தொடர்ந்து பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், இதுவரை தமிழ்நாடு முழுவதிலும் 3,702 பேர் கண் தானம் செய்துள்ளனர் அவர்களுக்கு தமிழக அரசு சார்பில் வாழ்த்துக்களும் நன்றிகளையும் தெரிவித்துக்கொள்கிறேன் என்றும் அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்தார்.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications