கொரோனா வைரஸ்: 10ஆம் வகுப்புத் தேர்வைத் தள்ளிவைக்க முடியாதா? உயர் நீதிமன்றம் சரமாரி கேள்வி
சென்னை: 10 வகுப்பு பொதுத் தேர்வை ஒத்தி வைப்பது குறித்து தமிழக அரசு விரிவான பதிலளிக்க உத்தரவிட்ட சென்னை உயர் நீதிமன்றம் வழக்கை 11ம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது.
Recommended Video
கொரோனா தொற்று பரவலை தடுக்க ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால், 10ம் வகுப்பு தேர்வு தள்ளிவைக்கப்பட்டது. தற்போது, இத்தேர்வுகள் ஜூன் 15ம் தேதி முதல் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பள்ளி, கல்லூரி போன்ற கல்வி நிறுவனங்களை திறப்பது குறித்து, பெற்றோர் உள்ளிட்ட சம்பந்தப்பட்டவர்களுடன் கலந்தாலோசித்து மாநில அரசுகள் முடிவெடுக்கலாம் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ள நிலையில், ஆசிரியர்களுடன் கலந்தாலோசிக்காமல் ஜூன் 15ம் தேதி முதல் பத்தாம் வகுப்பு தேர்வுகள் நடத்தப்படும் என அறிவித்துள்ளதால் பொதுதேர்வை இரண்டு மாதங்களுக்கு தள்ளிவைக்க கோரி, தமிழ்நாடு உயர் நிலை, மேல் நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர்கள் சங்கத்தின் சார்பில் அதன் தலைவர் பக்தவத்சலம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் வினீத் கோத்தாரி, சுரேஷ்குமார் அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது, மனுதாரர் தரப்பில் கொரொனோ கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளிலும் பாதிப்பு வேகமாக பரவி வருகிறது. தேர்வுக்கு முன்பாக மாணவர்களுக்கு பயிற்சி வகுப்புகளை நடத்த வேண்டியதும் அவசியம். பள்ளிகளை திறப்பது குறித்தே ஜூலையில் முடிவெடுக்க மத்திய அரசு அறிவுறுத்தியுள்ள நிலையில். 30% மாணவர்கள் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் உள்ளனர்.
எனவே ஜூலையில் தேர்வை ஒத்திவைக்க வேண்டும். அரசு தரப்பில், மாணவர்களின் நலன் மற்றும் பாதுகாப்புக்கு அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்படும் என கூறப்பட்டது. ஆனால் நீதிபதிகளோ, லட்சக்கணக்கான மாணவர்கள் தேர்வு எழுதும் போது தனி மனித இடைவெளி போன்ற பாதுகாப்பு தொடர்பான நடவடிக்கைகளில் சிக்கல் எழதா?
ஒரு மாதம் தள்ளிவைக்காமல் தேர்வை நடத்த ஏன் அரசு தரப்பில் அவசரம் காட்டப்படுகிறது. மாணவர்களின் தலைக்கும் மேல் கத்தி தொங்குவதை பார்த்து கொண்டிருக்க முடியாது. பொதுத் தேர்வுக்கான தேதியை அறிவித்த வேளையில் கொரொனோ தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை உயர்வதை கவனிக்கவில்லையா அரசு? 35 ஆயிரம் பாதிப்பில் 26 ஆயிரம் பேர் வட சென்னையில் மட்டுமே உள்ளனர். ஜூன் 30 வரை ஊரடங்கு உள்ள நிலையில் எந்த நடவடிக்கை மேற்கொள்ள கூடாத நிலையில், 9 லட்சம் மாணவர்கள், 3 லட்சம் ஆசிரியர்கள், காவல்துறை, வருவாய் துறை என அனைவரும் இக்காட்டான நிலைக்கு உள்ளாக வேண்டுமா?
ஊரடங்கு காலத்திலேயே 10ஆம் வகுப்பு தேர்வை நடத்த அவசியம் உள்ளது என நினைக்கிறீர்களா? பள்ளிகளை திறப்பதிலேயே ஜூலையில்தான் முடிவெடுக்க வேண்டுமென மத்திய அரசு கைட்லைன்ஸ் வெளியிட்டுள்ள நிலையில், அதை நீங்களே மீறுவீர்களா ? 9 லட்சம் இளம் மாணவர்களின் வாழ்க்கை தொடர்பான விசயம் இது என கருத்துக்களையும் கேள்விகளையும் அடுக்கடுக்காக எழுப்பினர்.
பின்னர் உத்தரவிட்ட நீதிபதிகள், 10 ம் வகுப்பு பொதுத்தேர்வை ஜூன் 15 ம் தேதி தேர்வு நடத்த அனுமதிக்க முடியாது என்றும் 9 லட்சம் மாணவர்களின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்த அனுமதிக்க முடியாது என்றும் கூறினர்.
கொரோனா தொற்று பரவல் குறைந்த பின் தேர்வு நடத்தலாம் அல்லது ஜூலை 2வது வாரத்தில் தேர்வு நடத்தலாமா ?என்பதை இன்று மதியம் 2:30 மணி அளவில் அரசு தரப்பு தெரிவிக்கும் படி உத்தரவிட்டு வழக்கை தள்ளி வைத்தனர்.
பின்னர் வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்த போது. , வரும் நாள்களில் கொரோனா தொற்று அதிகமாகும் வாய்ப்பு இருப்பதால் தேர்வு நடத்த இதுவே சரியான தருணம் என தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. நிபுணர்களின் கருத்துப்படி தமிழகத்தில் 2 லட்சம் மக்கள் பாதிக்கப்படுவார்கள் என உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு கூறியது. மற்ற மாநிலங்களில் 10ம் வகுப்பு தேர்வை நடத்தி முடித்து விட்டன.
மத்திய அரசு தேர்வை நடத்த அனுமதி அளித்துள்ளது என்றும் தமிழகத்தை தேர்வை நடத்த உயர்நீதிமன்றம் அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தது. அதற்கு பதில் அளித்த நீதிபதிகள் 9 லட்சம் மாணவர்கள், 2 லட்சம் ஆசிரியர்கள், அரசு அலுவலர்கள் குறித்து அரசுக்கு கவலை இல்லையா என கேள்வி எழுப்பியுள்ளனர். மாணவர் உயிரிழந்தால் இழப்பீடு வழங்குவதை தவிர வேறு என்ன உத்தரவாதம்?. 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வை உடனே நடத்துவதில் எந்த லாஜிக்கும் இல்லை என கேள்வி எழுப்பினர். அதன்பின்னர் பத்தாம் வகுப்பு தேர்வு தொடர்பான வழக்கு ஜூன் 11-ம் தேதிக்கு சென்னை உயர்நீதிமன்றம் ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.












Click it and Unblock the Notifications