முதல்வரின் தனி செயலர் உமாநாத் மீதான குற்றச்சாட்டுக்கு ஆதாரம் இல்லை! தேர்தல் ஆணையம் ஐகோர்ட்டில் தகவல்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தேர்தல் நடத்தை விதிகளை மீறி செயல்படுவதாக முதல்வரின் தனி செயலர் உமாநாத் ஐஏஎஸ்ஸுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் பதிலளிக்க தேர்தல் ஆணையத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் கால அவகாசம் வழங்கியுள்ளது.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் தனிச் செயலர் உமாநாத் ஐ.ஏ.எஸ்-ஐ இடமாற்றம் செய்ய வேண்டும் என இந்திய தலைமைத் தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் மோகன்தாஸ் என்பவர் மனு தாக்கல் செய்திருந்தார்.

Madras HC Grants Time to EC in Case Against CM s Secretary Umanath IAS

மோகன்​தாஸ் சென்னை உயர் நீதி​மன்​றத்​தில் தாக்​கல் செய்​த மனு​வில், "தமிழகத்​தில் தேர்​தல் நடத்தை விதி​கள் அமலில் உள்ள நிலை​யில் முதல்​வரின் தனிச் செயல​ராக பதவி வகி்த்து வரும் ஐஏஎஸ் அதி​காரி​யான உமா​நாத், தன்​னிச்​சை​யாக தனக்கு கீழ் பணிபுரி​யும் ஐஏஎஸ் மற்​றும் ஐபிஎஸ் அதி​காரி​களுக்கு உத்​தர​வு​களை பிறப்பித்து வருகிறார். இது தேர்​தல் நடத்தை விதி​களுக்கு எதி​ரானது. எனவே, அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க தேர்தல் ஆணை​யத்​துக்கு உத்​தர​விட வேண்​டும்" எனக் கோரி​யிருந்​தார்.

மேலும், "தேர்தலுக்காக பல ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் அதிகாரிகள் மாற்றப்பட்டுள்ள நிலையில் முதலமைச்சரின் தனிச் செயலராக உள்ள உமாநாத் ஐ.ஏ.எஸ்ஸை மட்டும் தொடர்ந்து செயல்பட அனுமதிக்கக்கூடாது. அனைத்து ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் அதிகாரிகளும் தேர்தல் பணியில் இருக்கும்போது முதலமைச்சரின் தனிச் செயலாளர் எந்த அடிப்படையில் செயல்படுகிறார் என்பதை தேர்தல் ஆணையம் ஆய்வு செய்ய வேண்டும்." என்றும் தனது மனுவில் கோரியிருந்தார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ்​.ஏ.தர்​மா​தி​காரி மற்​றும் நீதிபதி ஜி.அருள்​முரு​கன் ஆகியோர் அடங்​கிய அமர்​வில் விசா​ரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், 'தேர்தல் ஆணையம் தனது கோரிக்கையைப் பரிசீலிக்கவில்லை' என வாதிட்டார்.

அப்​போது மனு​தா​ரர் குற்​றம்​சாட்​டும் முதல்​வரின் தனிச் செயல​ரான ஐஏஎஸ் அதி​காரிக்​கும், தேர்​தல் பணி​களுக்​கும் எந்​த​வித​மான சம்​பந்​த​மும் இல்லை என தேர்​தல் ஆணை​யம் தரப்​பில் தெரிவிக்​கப்​பட்​டது. இதையடுத்து நீதிபதிகள், இது தொடர்​பாக வரும் ஏப்​ரல் 17 ஆம் தேதிக்​குள் தேர்​தல் ஆணை​யம் பதிலளிக்க வேண்​டும் என உத்​தர​விட்டு விசா​ரணையை தள்ளி வைத்திருந்தனர்.

அதன்படி இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது, தேர்தல் ஆணையத்தின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் நிரஞ்சன் ராஜகோபாலன், 'ஐஏஎஸ் அதிகாரிக்கு எதிரான தனது புகாரை நிரூபிக்க மனுதாரர் எந்த ஆதாரத்தையும் சமர்ப்பிக்கவில்லை. அரசு அதிகாரிகளின் இடமாற்றம் தொடர்பான விவகாரங்களில் பொதுநல மனுக்கள் தாக்கல் செய்ய முடியாது' என்று கூறி எழுத்துப்பூர்வமான பதிலை சமர்ப்பிக்க அவகாசம் வேண்டும் என்று வாதங்களை முன்வைத்தார். இதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் கூடுதல் கால அவகாசம் வழங்கி வழக்கு விசாரணையை ஏப்ரல் 21 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+