மாஃபியா கட்டுப்பாட்டில் சென்னை மெரினா கடற்கரை கடைகள்.. தூண்டிவிடுகிறார்களா? நீதிபதிகள் சந்தேகம்
சென்னை: நீதிமன்றம் தலையிடும் முன்பாக, மெரினா கடற்கரை முழுமையாக கடைகளால் ஆக்கிரமிக்கப்பட்டு சுத்தமில்லாமல் இருந்தது. அந்த கடைகள் மாஃபியா கும்பல்களின் கட்டுப்பாட்டில் இருந்து வந்தது. கடை உரிமையாளர்களை மிரட்டி மாமூல் வசூலித்து வந்த அந்த கும்பல் நீதிமன்ற தலையீடு காரணமாக பின்புலத்தில் இருந்து கொண்டு சிலரைத் தூண்டிவிட்டிருப்பதாக நினைக்கிறோம். அதன் காரணமாகவே இந்த மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளனவா என்ற சந்தேகம் எங்களுக்கு உள்ளது என நீதிபதிகள் கூறினார்கள்.
சென்னை மெரினா கடற்கரை உலகின் இரண்டாவது மிக நீளமான கடற்கரையாகும். உலக புகழ் பெற்ற இந்த கடற்கரையில், முறையற்ற வகையில் வைக்கப்பட்டிருந்த ஆயிரக்கணக்கான கடைகள், பிளாஸ்டிக் கழிவுகள் மற்றும் சுகாதாரமின்மை காரணமாக கடற்கரையின் பொலிவு பாதிக்கப்படுவதாக நீதிமன்றம் கருதியது. இதையடுத்து சென்னை மெரினா கடற்கரையில் உள்ள கடைகளை முறைப்படுத்துவது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம் தானாக முன் வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்தது.

உயர்நீதிமன்றம் உத்தரவு
அப்போது விசாரணையில் மெரினா கடற்கரையில் உள்ள கடைகளின் எண்ணிக்கையை முறைப்படுத்த வேண்டும் என்றும், தள்ளுவண்டிக் கடைகளுக்குச் சீரான அடையாள அட்டைகள் வழங்க வேண்டும் என்றும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும் பாரம்பரிய கடைகளுக்குப் பதிலாக, மாநகராட்சி மூலம் வடிவமைக்கப்பட்ட நவீன 'ஸ்மார்ட் தள்ளுவண்டிகளை' மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்று அறிவுறுத்தியது. மேலும் லூப் சாலையில் உள்ள ஆக்கிரமிப்பு மீன் கடைகளை அகற்றிவிட்டு, அவர்களை ஒழுங்கமைக்கப்பட்ட மீன் சந்தை வளாகத்திற்கு மாற்ற வேண்டும் என்று உத்தரவிட்டது. அதன்படி தான் மீன் மார்க்கெட் அடியோடு மாற்றப்பட்து.
ஓய்வு பெற்ற தலைமை நீதிபதி
இதனிடையே வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் ஆர்.சுரேஷ்குமார், ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா ஆகியோர் அடங்கிய அமர்வு, மெரினாவில் உணவுப் பொருட்கள், பொம்மை மற்றும் பேன்சி கடைகள் என மொத்தம் 300 கடைகளுக்கு மட்டுமே அனுமதி வழங்க வேண்டுமென்றும், இதற்கான பயனாளிகளை தேர்வு செய்ய ஜம்மு-காஷ்மீர் உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற தலைமை நீதிபதியான என்.பால்வசந்த குமாரை நியமித்தும் உத்தரவிட்டிருந்தார்கள்.
300 கடைகள்
அதன்படி 300 பேருக்கு மெரினாவில் கடைகள் ஒதுக்கப்பட்டிருக்கிறது. இப்போது கடை வைத்திருப்பவர்கள் இனி வைக்க முடியாது.. மொத்தமே 300 தான் கடை வைக்க முடியும் என்று மாறப்போகிறது. இந்நிலையில் இந்த வழக்கு நீதிபதிகள் ஆர்.சுரேஷ்குமார், ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது மெரினாவில் ஏற்கனவே கடைகளை வைத்திருந்த 600-க்கும் மேற்பட்டோர் இந்த வழக்கில் தங்களையும் இணைக்கக்கோரி இடையீட்டு மனுக்களை தாக்கல் செய்தார்கள்.
சுத்தமாக பராமரிக்க முடியாது
அந்த மனுக்களை விசாரித்த நீதிபதிகள், "கடற்கரைக்கு அருகில் உள்ள வியாபார மண்டலங்களில் மட்டுமே கடைகள் ஒதுக்கப்பட வேண்டும். மெரினாவை வியாபாரத் தலமாக மாற்ற ஒருபோதும் அனுமதிக்க முடியாது. கேரளாவின் கோவளம், ஒடிசாவின் பூரி, மும்பை மெரைன் டிரைவ் போன்ற கடற்கரைகளைப்போல மெரினாவையும் அழகுபடுத்தி சுத்தமாக பராமரித்தால் மட்டுமே இந்திய சுற்றுலா பயணிகள் மட்டுமின்றி வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளும் அதிகளவில் வருகை தருவார்கள்.
நீதிமன்ற தலையீடு
நீதிமன்றம் தலையிடும் முன்பாக, மெரினா கடற்கரை முழுமையாக கடைகளால் ஆக்கிரமிக்கப்பட்டு சுத்தமில்லாமல் இருந்தது. அந்த கடைகள் மாஃபியா கும்பல்களின் கட்டுப்பாட்டில் இருந்து வந்தது. கடை உரிமையாளர்களை மிரட்டி மாமூல் வசூலித்து வந்த அந்த கும்பல் நீதிமன்ற தலையீடு காரணமாக பின்புலத்தில் இருந்து கொண்டு சிலரைத் தூண்டிவிட்டிருப்பதாக நினைக்கிறோம். அதன் காரணமாகவே இந்த மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளனவா என்ற சந்தேகம் எங்களுக்கு உள்ளது. தற்போது கடைகள் பெற்றுள்ள 300 பேரும், யாருக்கும், எதற்காகவும் பணம் கொடுக்காமல் நேர்மையான முறையில் கடைகளைப் பெற்றிருக்கிறார்கள்.
மெரினா கடற்கரை வியாபாரத் தலம் இல்லை
கடைகளை முறைப்படுத்தும் நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்தால் அழகான மெரினாவை எதிர்காலச் சந்ததியினருக்கு விட்டுச்செல்ல முடியாது. மெரினா கடற்கரை ஒன்றும் வியாபாரத் தலம் அல்ல. அங்கு கடைகள் அமைப்பதை யாரும் உரிமையாக கோர முடியாது. அதிகாரிகளுடன் இணைந்து நாங்கள் நேரடி கள ஆய்வு செய்ததன் அடிப்படையில் நீலக்கொடி மண்டலங்களுடன் சர்வதேச அந்தஸ்துக்கு தரம் உயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதற்கு ஒருபோதும் இடையூறு செய்யக் கூடாது. இந்த இடையீட்டு மனுக்கள் மீது பின்னர் உத்தரவு பிறப்பிக்கப்படும்" இவ்வாறு கூறிய நீதிபதிகள், விசாரணையை தள்ளி வைத்துள்ளனர்.
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications