பொய் புகாரில் போக்சோ வழக்கு.. 10 ஆண்டு சிறை தண்டனையை ரத்து செய்தது சென்னை ஐகோர்ட்!
சென்னை: பொய்யான புகாரில், கோவையை சேர்ந்த நபருக்கு போக்சோ நீதிமன்றம் விதித்த 10 வருட சிறைத் தண்டனையை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தன் மகளை காதலிப்பதாக கூறி வீட்டிற்குள் நுழைந்து பாலியல் பலாத்காரம் செய்ததாகவும், அது தொடர்பான சில புகைப்படங்களை காட்டி மீண்டும் மீண்டும் தன் மகளுக்கு பாலியல் தொல்லை அளித்து வந்ததாகவும் கோவை போத்தனூர் காவல் நிலையத்தில் கடந்த 2018 ஆம் ஆண்டு அளித்த புகாரில் குமார் என்பவர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.

இது தொடர்பான வழக்கை விசாரித்த கோவை போக்சோ நீதிமன்றம், குமாருக்கு 10 வருட சிறைத் தண்டனையும், 10 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பு அளித்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து குமார் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தார்.
இந்த மேல்முறையீட்டு மனு நீதிபதி சுந்தர் மோகன் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் இளையபெருமாள் ஆஜராகி, பாலியல் தொல்லை அளித்ததாக கூறப்படுபவரின் மூத்த சகோதரியை, குமார் காதலித்து வந்ததாகவும், பின்னர் வேறு ஒருவருக்கு அவரை திருமணம் செய்து வைக்க பேசப்பட்டது.
இந்த திருமணத்திற்கு குமார் இடையூறாக இருப்பார் என கருதி தங்கையை வைத்து பொய்யாக பாலியல் புகார் அளித்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது. அரசு தரப்பில், மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து தண்டனையை உறுதி செய்ய வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டது.
இருதரப்பு வாதங்களையும் பதிவு செய்த நீதிபதி, விசாரணையில் சாட்சிகளின் வாக்குமூலங்கள் முன்னுக்குப் பின் முரணாக இருப்பதும், பாதிக்கப்பட்டதாக கூறப்படும் பெண்ணுக்கு பாலியல் தொல்லை அளிக்கப்பட்டதற்காக ஆதாரங்கள் இல்லை என மருத்துவ பரிசோதனை அறிக்கையில் தெரிவித்திருப்பதை சுட்டிக்காட்டி, போக்சோ சட்டத்தின் கீழ் குமார் என்பவருக்கு விதிக்கப்பட்ட 10 வருட சிறைத்தண்டனையை ரத்து செய்து உத்தரவிட்டார்.
அதோடு, அவருக்கு விதிக்கப்பட்ட அபராத தொகையை அவர் செலுத்தி இருந்தால் அந்த தொகைகளை மீண்டும் திரும்ப அவருக்கு வழங்க உத்தரவிட்டு வழக்கினை முடித்து வைத்தார்.
-
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர்












Click it and Unblock the Notifications