திருப்பரங்குன்றம் விவகாரத்தில் மேலும் ஒரு வழக்கு.. எங்களுக்கு வேறு வேலை இல்லையா? டென்ஷன் ஆன நீதிபதிகள்
மதுரை: திருப்பரங்குன்றம் மலை மீது தீபம் ஏற்றக் கோரி கேகே ரமேஷ் என்பர் மதுரை உயர் நீதிமன்ற கிளையில் பொது நலன் மனு ஒன்றை தாக்கல் செய்தார். இந்த மனுவை தள்ளுபடி செய்த நீதிபதிகள், அரசியல் லாபம் அடைய, இதையே வேலையாக வைத்துள்ளீர்கள் என்றும், நீதிமன்றத்திற்கு வேறு வேலை இல்லையா?" என காட்டமாக கேள்வி எழுப்பியதோடு ரூ.5 லட்சம் அபராதம் விதித்து உத்தரவிட்டனர்.
இதையடுத்து மனுதாரர் கே கே ரமேஷ் "இனி இதுபோன்று மனுத்தாக்கல் செய்ய மாட்டேன்" என உறுதி அளித்தார். இதையடுத்து ரூ.50,000 அபாராதம் விதித்த நீதிபதிகள், இனி இதுபோன்ற மனுக்களை தாக்கல் செய்ய மாட்டேன் என உறுதிமொழிப் பத்திரம் தாக்கல் செய்யவும் உத்தரவு பிறப்பித்தனர்.

திருப்பரங்குன்றம் மலை
மதுரையை சேர்ந்தவர் கேகே ரமேஷ். இவர் பொதுநல மனுக்கள் பலவற்றை மதுரை உயர் நீதிமன்றக் கிளையில் மனுதாக்கல் செய்து இருக்கிறார். அந்த வகையில் இன்று திருப்பரங்குன்றம் மலை மீது தீபம் ஏற்ற அனுமதி கோரி மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவில் அவர் கூறியிருந்ததாவது, "மதுரையில் உள்ள திருப்பரங்குன்றம் மலை உச்சியில் இந்துக்கள் தீபம் ஏற்றி வழிபாடு நடத்த அனுமதிக்க வேண்டும் என நான் மனு அளித்து இருந்தேன்.
ஆனால் இதனை பரிசீலனை செய்யாத அதிகாரிகள், இஸ்லாமியர்கள் ரம்ஜான் அன்று தொழுகை நடத்த அனுமதி அளித்து இருந்தனர். எனவே இந்த மனுவை பரிசீலனை செய்து இந்துக்களையும் திருப்பரங்குன்றம் மலை மீது தீபம் ஏற்றி வழிபட அனுமதிக்க வேண்டும்" என்று மனுவில் கூறியிருந்தார். இந்த மனுவானது இன்று நீதிபதிகள் சதீஷ்குமார், ஜோதிராமன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
ரூ.10 லட்சம் அபராதம்
அப்போது வழக்கை விசாரணைக்கு எடுத்த உடனேயே நீதிபதிகள் கோபமடைந்தனர். நீதிமன்றத்திற்கு வேறு வேலை இல்லையா?. தொடர்ந்து திருப்பரங்குன்றம் மலை மீது தீபம் ஏற்றக் கோரி பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. நீதிமன்றங்களும் பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்து வருகிறது. திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள கோயிலில் வழிபாடு செய்ய நினைப்பவர்கள், விரும்பப்படுபவர்கள் கோவிலுக்காக வைப்புத் தொகையாக ரூ.10 லட்சம் செலுத்தலாமே என கேள்வி எழுப்பினர்.
அவ்வாறு ரூ.10 லட்சம் செலுத்தினால் இந்த வழக்கை விசாரணைக்கு எடுக்கிறோம் என்று நீதிபதிகள் தெரிவித்தனர். அப்போது மத்திய அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர், இந்த மனுதாரருக்கு இதே வேலையாகத் தான் இருக்கிறது. நீதிமன்ற நேரத்தை வீணடிக்கும் இது போன்ற மனுக்களால், மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு தினந்தோறும் பல லட்சம் ரூபாய் வழக்கறிஞர் செலவுக்காக செலவிடப்படுகிறது. இதனால் இவரது மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும். மேலும் அதிகபட்சமாக அபராதம் விதிக்க வேண்டும் என்று கூறினர்.
நீதிமன்றத்திற்கு வேறு வேலை இல்லையா?"
அப்போது நீதிபதிகள், மனுதாரருக்கு ரூ.5 லட்சம் அபராதம் விதித்து நீதிபதியை தள்ளுபடி செய்வதாக உத்தரவிட்டனர். உடனே மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், அவ்வளவு அபராதம் எல்லாம் கட்ட முடியாது எனவே நீதிமன்றம் கருணை காட்ட வேண்டும். மனுவை வேண்டுமானாலும் திரும்பப் பெற்றுக் கொள்கிறோம் என்று தெரிவித்தார்.
இதையடுத்து நீதிபதிகள், அரசியல் லாபம் அடைய, இதையே வேலையாக வைத்துள்ளீர்கள் என்றும், நீதிமன்றத்திற்கு வேறு வேலை இல்லையா?" என காட்டமாக கேள்வி எழுப்பினர். ஊடகங்கள், பத்திரிகைகளில் பெயர் வரவேண்டும் என்பதற்காகவே இதுபோன்ற பொதுநல மனுக்களை தாக்கல் செய்து அரசியல் லாபம் பெறுகிறார்கள் என்று கூறி இந்த மனுவை ரூ.50 ஆயிரம் அபராதத்தோடு தள்ளுபடி செய்வதாக உத்தரவிட்டார்.
உறுதிமொழி பத்திரம் செய்ய உத்தரவு
உடனே மனுதாரர் தரப்பில் இவ்வளவு தொகை செலுத்த முடியாது, இனி இது போன்று மனுக்கள் தாக்கல் செய்ய மாட்டோம் என கூறினார். உடனே நீதிபதிகள், "மனுதாரர் இதுபோன்று நீதிமன்ற நேரத்தை வீணடிக்க மாட்டோம், இதுபோன்ற பொது நலன் மனுக்களை தாக்கல் செய்ய மாட்டோம் என உறுதிமொழி பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும் என்றும், அதற்கு பிறகு அபராதத் தொகை தள்ளுபடி செய்வது குறித்து பரிசீலிக்கப்படும்" என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
-
கடவுள் முன் அனைவரும் சமம் எனும்போது விஐபி தரிசனம் ஏன்? தமிழ்நாடு அரசுக்கு சென்னை ஐகோர்ட் கேள்வி! -
அமைச்சர்களுக்காக கடவுள் காத்திருக்க வேண்டியதில்லை.. நிர்மல்குமார் வழக்கில் ஹைகோர்ட் அதிரடி! -
நீதிபதிகள் புனித பசுக்கள் இல்லை.. நீதித்துறையில் ஊழல் இல்லைனு சொல்ல முடியாது – சென்னை ஹைகோர்ட் -
4 ஆயிரம் உதவி பேராசிரியர் பணியிடங்கள்! 6 மாதத்திற்குள் தேர்வு நடத்த வேண்டும்.. சென்னை ஐகோர்ட் அதிரடி -
தெரிந்தே இப்படி செய்யலாமா? அருண் ஐபிஎஸ்ஸை கண்டித்த ஹைகோர்ட்! தொழிலதிபர் மீதான குண்டர் சட்டம் ரத்து -
நாளை பக்ரீத்.. தமிழகத்தில் பொது இடங்களில் மாடுகளை வெட்ட தடை.. ஐகோர்ட் போட்ட முக்கிய உத்தரவு! -
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார்












Click it and Unblock the Notifications