சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

திமுக பேரணிக்கு தடை.. தமிழக அரசு.. மீறி நடந்தால் வீடியோவில் பதிவு செய்ய ஹைகோர்ட் உத்தரவு

Google Oneindia Tamil News

Recommended Video

    H Raja slams Congress, Dmk and supports Rajini

    சென்னை: குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக திமுக நாளை பேரணி நடத்த முடிவு செய்துள்ள அதற்கு காவல்துறை அனுமதி அளிக்கவில்லை. இதுதொடர்பாக தொடரப்பட்ட வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், தடையை மீறி பேரணி நடந்தால் அதை வீடியோவாக பதிவு செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.

    இந்த பேரணியால் பொதுச்சொத்துக்கு பங்கம், வன்முறை ஏற்படும் அபாயம் உள்ளதாக கூறி திமுக பேரணிக்கு எதிராக இந்திய மக்கள் மன்றம் என்ற அமைப்பின் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை அவசர வழக்காக இன்று இரவே விசாரிக்க சென்னை உயர்நீதிமன்றம் ஒப்புக்கொண்டது

    இதன்படி சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் எஸ் வைத்தியநாதன், மற்றும் பிடி ஆஷா ஆகியோர் அமர்வு திமுகவின் பேரணிக்கு எதிரான வழக்கை விசாரித்தனர்.

    ஜனாதிபதி கைகளால் பட்டத்தை வாங்க மாட்டோம்.. புதுவை பல்கலைக்கழக மாணவர்கள் முடிவால் பரபரப்புஜனாதிபதி கைகளால் பட்டத்தை வாங்க மாட்டோம்.. புதுவை பல்கலைக்கழக மாணவர்கள் முடிவால் பரபரப்பு

    18ம் தேதி கோரியது

    18ம் தேதி கோரியது

    இந்த வழக்கில் அரசு தரப்பில் வி.ஜெயபிரகாஷ் நாராயணன் ஆஜரானார்.ல் திமுக தரப்பில் யாரும் ஆஜராகவில்லை. அரசு தரப்பு வழக்கறிஞர் வாதிடுகையில். திமுக கடந்த டிச. 18ம் தேதி தான் 23ம் தேதி நடைபெற உள்ள பேரணிக்கு அனுமதி கோரியது.

     பொறுப்பேற்கவில்லை

    பொறுப்பேற்கவில்லை

    டிசம்பர் 19ம் தேதி சென்னை போலீசார், ஏதேனும் அசம்பாவிதங்கள் அல்லது வன்முறை ஏதேனும் நடந்தால் பொறுப்பேற்க தயாரா என கேட்டனர். ஆனால் வன்முறை சம்பவங்கள் ஏதேனும் நடந்தால் பொறுப்பேற்க திமுக தயாராக இல்லை. எனவே எனவே திமுகவின் பேரணிக்கு அனுமதி அளிக்க போலீஸ் மறுத்துவிட்டது என்றார்.

     வீடியோ எடுக்க உத்தரவு

    வீடியோ எடுக்க உத்தரவு

    இதைத்தொடர்ந்த நீதிபதிகள் இந்த வழக்கில் இடைக்கால உத்தரவு பிறப்பித்தனர். அப்போது நீதிபதிகள் கூறுகையில், ஜனநாயக நாட்டில் போராட்டங்களையோ, ஆர்ப்பாட்டங்களையோ தடை விதிக்க முடியாது. அதேநேரத்தில் வன்முறையை அனுமதிக்க முடியாது என்றனர். காவல்துறையின் அனுமதியை மீறி நாளை பேரணி நடந்தால் அதை முழுவதையும் ஏன் வீடியோவாக பதிவு செய்ய கூடாது என்று கேள்வி எழுப்பிய நீதிபதிகள். நாளை அனுமதி இன்றி நடக்கும் பேரணியில் காவல்துறை வீடியோ எடுத்தால், ஏதேனும் விதிமுறைகளை மீறி இருந்தால் சாட்சியாக இருக்கும் என்றும் எனவே பேரணியின் போது ட்ரான்களை பயன்படுத்தி வீடியோ எடுக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

     நிபந்தனைகள்

    நிபந்தனைகள்

    இதுதவிர பேரணியின்போது பொதுச் சொத்துக்களுக்கு சேதம் ஏற்பட்டால் அதை இரண்டு மடங்காக வசூல் செய்ய வேண்டும். போராட்டங்கள் தொடர்பான உச்சநீதிமன்ற வழிகாட்டு விதிமுறைகள் முறையாக கடைப்பிடிக்கப்பட வேண்டும் என்றும் உயர்நீதிமன்றத்தின் இடைக்கால உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

     அனுமதி அளிக்கவில்லை

    அனுமதி அளிக்கவில்லை

    பேரணியின் போது சட்டம் ஒழுங்கை காவல்துறை உறுதி செய்ய வேண்டும் என்றும் பொதுமக்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என்பதை காவல்துறை உறுதி செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டனர். அத்துடன் வாராகி தொடர்ந்த இந்த வழக்கில் டிஜிபி, தலைமைச்செயலாளர், சென்னை காவல் ஆணையர் ஆகியோர் 8 வாரங்களில் பதில் அளிக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

    English summary
    Justices S. Vaidyanathan & PT Asha of Madras HC to hold a special sitting at 8 pm today to hear a plea to restrain DMK & it's allies from holding a rally in Chennai tomorrow against Citizenship Amendment Act since there was violence in similar protests in Assam & UP
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X