கண்ணியத்துடன் பேசுங்க.. அதிமுக முன்னாள் அமைச்சர் சிவி சண்முகத்திற்கு உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்

Subscribe to Oneindia Tamil

சென்னை: டாஸ்மாக் தொடர்பாக முதலமைச்சர் ஸ்டாலினை அதிமுக முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் பேசியிருந்தார். இதனையடுத்து அவதூறு வழக்கு அவருக்கு எதிராக தொடரப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த வழக்கு விசாரணையின் போது ஆளுங்கட்சியை விமர்சிக்கும் போது கண்ணியத்துடனும் எச்சரிக்கையுடன் பேச வேண்டும் என அதிமுக முன்னாள் அமைச்சர் சிவி சண்முகத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

விழுப்புரம் மாவட்டம் கோலியனூரில் கடந்த 2023 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் நடைபெற்ற கண்டன பொதுக்கூட்டத்தில் பேசிய அதிமுக முன்னாள் அமைச்சரும், மாநிலங்களவை உறுப்பினருமான சிவி சண்முகம், உங்களுடைய பணம், உங்களுடைய தாலியை அறுத்து, உங்கள் வீட்டில் இருக்கிற சாமான்களை அடமானம் வைத்து, டாஸ்மாக்கிலே குடித்து அந்த வருமானத்தில் மட்டும் 50 ஆயிரம் கோடி ரூபாய் இந்த ஸ்டாலினுக்கு கிடைக்கிறது என குறிப்பிட்டிருந்தார்.

cv shanmugam high court chennai

சிவி சண்முகத்தின் இந்த பேச்சு, முதலமைச்சரின் பெயருக்கும் புகழுக்கும் களங்கம் ஏற்படுத்தும் வகையில் உள்ளதாக கூறி, சி.வி.சண்முகம் மீது விழுப்புரம் நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இந்த அவதூறு வழக்கை ரத்து செய்யக்கோரி, சி.வி.சண்முகம் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு நீதிபதி பி. வேல்முருகன் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, ஆளுங்கட்சியின் தவறுகளை சுட்டிக்காட்டுவது எதிர்க்கட்சியின் ஜனநாயக கடமை தான் என்று போதும், அதில் கண்ணியம் தேவை என்று சுட்டிக்காட்டினார்.

பேசும்போது எச்சரிக்கையுடன், கண்ணியத்துடன் பேச வேண்டும் என்றும் குறிப்பிட்ட அவர், தேர்தலின் போது வாக்குறுதிகளை கொடுப்பது உலக அளவில் உள்ள நடைமுறை தான் என்றும்,
வாக்குறுதிகளை நிறைவேற்றாதை சுட்டிக்காட்டலாம் என்றும் தெரிவித்தார். மனுதாரர் சி்.வி. சண்முகம் சாதாரண நபர் அல்ல, சட்டம் படித்தவர், முன்னாள் அமைச்சர். அவர் இவ்வாறு பேசக்கூடாது,
பொறுப்போடு பேச வேண்டும் என்று தெரிவித்த நீதிபதி, அந்த காலம் போல் இப்போது இல்லை, அடுத்த தலைமுறையினர் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள், தலைமுறை மாறிவிட்டது, நாம் பேசும் வார்த்தைகளில் கவனம் தேவை என குறிப்பிட்டார்.

இதையடுத்து அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், மனுதாரர் இதுபோல பேசுவது முதன்முறை அல்ல என்றும் மூன்று வழக்குகள் உள்ளதாகவும், அது சம்பந்தமான மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு உள்ளதாகவும் சுட்டிக்காட்டினார். இதையடுத்து அனைத்து வழக்குகளையும் சேர்த்து விசாரித்து உத்தரவு பிறப்பிப்பதாக குறிப்பிட்ட நீதிபதி, விசாரணையை நவம்பர் 22 ஆம் தேதி தள்ளி வைத்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+