Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஆகமத்தில் யார் தேர்ச்சி பெற்றாலும் அர்ச்சகர்- சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஆகமம், பூஜைகளில் யார் தேர்ச்சி பெற்றிருந்தாலும் கோவில்களில் அர்ச்சகராகலாம் என சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

2018-ம் ஆண்டு சேலம் சுகவனேஸ்வரர் கோவிலுக்கான புதிய அர்ச்சகர்களை நியமிப்பது குறித்து அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டிருந்தது. இந்து சமய அறநிலையத்துறை வெளியிட்ட இந்த அறிவிப்பில், அர்ச்சகர் ஆவதற்கு ஆகம விதிகள் படித்து இருந்தால் போதும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

Madras high court again upholds all caste archakas in Temples

இந்து சமய அறநிலையத்துறையின் இந்த அறிவிப்புக்கு எதிராக சுப்பிரமணிய குருக்கள் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இது தொடர்பான வழக்கில், கோவில்களுக்கான ஆகம விதிகள் தெரிந்திருந்தாலே போதும். கோவில்களில் அர்ச்சகராக முடியும் என தமிழக அரசு சார்பில் வாதங்கள் முன்வைக்கப்பட்டன.

இதனை ஏற்றுக் கொண்ட சென்னை உயர்நீதிமன்றம், ஆகமம் மற்றும் பூஜைகளில் தேர்ச்சி பெற்றிருந்தால் அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராக முடியும் என அதிரடியாக உத்தரவிட்டது. சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் இந்த அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளார்.

சென்னை உயர்நீதிமன்றத்தின் இத்தீர்ப்பை வரவேற்றுள்ள விசிக எம்பி ரவிக்குமார் கூறியிருப்பதாவது: அர்ச்சகர் நியமனம் குறித்து சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி திரு ஆனந்த் வெங்கடேஷ் அவர்கள் வழங்கியுள்ள தீர்ப்பை வரவேற்கிறேன்.
N.Adithayan Vs. Travancore Devaswom Board என்ற வழக்கில் 2002 ஆம் ஆண்டு உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் "as long any one well versed and properly trained and qualified to perform the puja in a manner conducive and appropriate to the worship of the particular deity, is appointed as Santhikaran dehors his pedigree based on caste, no valid or legally justifiable grievance can be made in a Court of Law" எனத் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. அதை மேற்கோள் காட்டியிருக்கும் நீதிபதி
அர்ச்சகர் நியமனம் சாதியின் அடிப்படையில் செய்யப்படுவதல்ல என்பதை உறுதிப்படுத்தியிருக்கிறார். தமிழ்நாடு அரசு இந்தத் தீர்ப்பின் அடிப்படையில் அர்ச்சகர் நியமனங்களைச் செய்யவேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு ரவிக்குமார் எம்பி கூறியுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+