சவுக்கு சங்கர் ஜாமீனை ரத்து செய்யக் கோரிய வழக்கு.. கிடுக்கிப்பிடி உத்தரவு போட்ட சென்னை ஐகோர்ட்
சென்னை: யூடியூபர் சவுக்கு சங்கருக்கு வழங்கப்பட்ட இடைக்கால ஜாமீனை ரத்து செய்யக்கோரி காவல்துறை தாக்கல் செய்த வழக்கில் தீர்ப்பளித்த நீதிமன்றம், தற்போதைய நிலையில் ஜாமீனை ரத்து செய்ய முடியாது எனக்கூறியதோடு, சவுக்கு சங்கருக்கு கூடுதல் நிபந்தனைகளை விதித்தனர். நிபந்தனைகளை மீறினால் ஜாமீன் ரத்தாகும் என்றும் எச்சரித்துள்ளது.
பிரபல யூடியூபர் சவுக்கு சங்கரை கடந்த டிசம்பர் 13 ஆம் தேதி மோசடி வழக்குகளில் போலீசார் கைது செய்தனர். சென்னை ஆதம்பாக்கம் மற்றும் சைதாப்பேட்டை காவல் நிலையங்களில் பதிவு செய்யப்பட்ட மோசடி வழக்குகளில் சவுக்கு சங்கர் கைதானார். வீட்டின் பூட்டை உடைத்து சவுக்கு சங்கரை போலீசார் கைது செய்தனர்.

இதையடுத்து சிறையில் அடைக்கப்பட்ட சவுக்கு சங்கருக்கு மருத்துவக் காரணங்களுக்காக ஜாமீன் வழங்க வேண்டும் என அவரது தாயார் கமலா சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், சவுக்கு சங்கருக்கு வரும் மார்ச் 25 வரை இடைக்கால ஜாமீன் வழங்கியது.
ஜாமினில் வெளிவந்த சவுக்கு சங்கர் தனது யூடியூப் சேனலில் வழக்கம் போல பேசி வந்தார். இதையடுத்து மருத்துவ காரணங்களுக்காக ஜாமீன் பெற்ற சவுக்கு சங்கர் தொடர்ந்து யூடியூப்பில் வீடியோக்களை வெளியிட்டு வருவதாகவும், சாட்சிகளை மிரட்டுவதாகவும் கூறிய போலீசார் அவரது இடைக்கால ஜாமீனை ரத்து செய்ய வேண்டும் என்று உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.
இந்த மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது. இதில், சவுக்கு சங்கர் ஜாமீனை ரத்து செய்ய மறுத்த நீதிபதிகள், அவருக்கு கூடுதல் நிபந்தனைகளை விதித்தனர். அதாவது, தனக்கு எதிராக உள்ள வழக்குகள் குறித்து நேரடியாகவோ, மறைமுகமாகவோ, சமூக ஊடகங்களில் எந்த வித கருத்தையும் தெரிவிக்க கூடாது.
குற்றம் சாட்டப்பட்டவர்கள், சாட்சிகளை தொடர்பு கொள்ளக் கூடாது. நிபந்தனை மீறினால் ஜாமீன் ரத்து ஆகும்" என்று உத்தரவிட்டனர். மேலும் சவுக்கு சங்கரின் உடல் நிலையை ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்கவும் உத்தரவிட்டனர்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications