பொன்முடிக்கு நிம்மதி.. பெண்கள் குறித்து சர்ச்சை பேச்சு.. வழக்கை முடித்து வைத்த சென்னை ஹைகோர்ட்
சென்னை: முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு எதிரான வழக்கினை முடித்து வைப்பதாக சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. சைவ, வைணவ சமயங்கள் மற்றும் பெண்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய பொன்முடிக்கு எதிரான வழக்கு முடித்து வைப்பதாகவும், பொறுப்பான பதவியில் இருக்கும் பொன்முடி இதுபோன்ற பேச்சுக்களை தவிர்த்து இருக்க வேண்டும் என்றும் சென்னை உயர்நீதிமன்றம் கூறியுள்ளது. மேலும் பொன்முடிக்கு எதிராக தனிநபர் புகார் தெரிவிக்கலாம் என்றும் சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
சைவம், வைணவம் சமயங்கள் மற்றும் பெண்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்ததாக முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றம் தாமாக முன் வந்து வழக்கு விசாரணைக்கு எடுத்து இருந்தது. இந்த வழக்கை முதலில் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் விசாரித்து வந்தார்.

தொடர்ந்து இந்த வழக்கானது இன்று நீதிபதி சதீஷ்குமார் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர், பொன்முடிக்கு எதிராக பெறப்பட்ட 115 புகார்கள் முடித்து வைக்கப்பட்டதாகவும், இது தொடர்பாக புகார்தாரர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதாகவும் தெரிவித்தார். மேலும் புகார்தாரர்கள் அனைவரிடமும் இதற்கான ஒப்புகை பெறப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
நீதிபதி கூறுகையில் உயர் பதவியில் இருக்கும் பொன்முடி இதுபோன்ற கருத்துக்கள் பேசுவதை தவிர்த்து இருக்க வேண்டும் என்றும், இந்த வழக்கை முடித்து வைப்பதாகவும் கூறினார். மேலும், காவல்துறை இந்த வழக்கில் முறையாக விசாரணை நடத்தியிருக்க வேண்டும் என்று தெரிவித்தார். இதேபோல் பொன்முடிக்கு எதிராக தனிநபர் புகார் தெரிவிக்கலாம் என்றும் சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
-
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை












Click it and Unblock the Notifications