கொரோனா ஊரடங்கு.. மாற்றுத்திறனாளிகளுக்கு தமிழக அரசு செய்த உதவிகள் என்ன?அறிக்கை அளிக்க ஐகோர்ட் உத்தரவு
சென்னை: கொரோனா ஊரடங்கால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள மாற்றுத் திறனாளிகளுக்கு வழங்கப்பட்டுள்ள நிவாரண உதவிகள் குறித்த விவரங்கள் அடங்கிய சமீபத்திய அறிக்கையைத் தாக்கல் செய்யத் தமிழ்நாடு அரசுக்குச் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கொரோனா பரவலைத் தடுக்க கடந்த ஆண்டு அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு காரணமாக வாழ்வாதாரம் இழந்து பாதிக்கப்பட்டுள்ள மாற்றுத் திறனாளிகளுக்கு உரிய நிவாரண உதவிகளை வழங்கக்கோரி மூன்று அமைப்புகளின் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன.

இந்த வழக்குகள் தலைமை நீதிபதி சஞ்சிவ் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தன.
அப்போது மனுதாரர்கள் சார்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், கண் பார்வையில்லாத மாற்றுத் திறனாளிகள், ரயில்களில் பென்சில், புத்தகம் போன்றவற்றை விற்பனை செய்து வாழ்வு நடத்தி வருகின்றனர் எனவும், அவர்களுக்கு நிவாரண உதவி வழங்கக் கோரி அரசுக்கு விண்ணப்பித்தும் இதுவரை பரிசீலிக்கப்படவில்லை என்றனர்.
மேலும், 5 ஆயிரம் ரூபாய் நிவாரண உதவி கோரிய நிலையில் ஆயிரம் ரூபாய் மட்டுமே மாற்றுத் திறனாளிகளுக்கு வழங்கப்பட்டதாகவும், அதே சமயம் மூன்றாம் பாலினத்தவர்களுக்கு 2 ஆயிரம் ரூபாயும், சாதாரண மக்களுக்கு 4 ஆயிரம் ரூபாயும் வழங்கப்பட்டுள்ளதாகக் குற்றஞ்சாட்டினர்.
தமிழ்நாடு அரசுத்தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், மாநிலம் முழுவதும் ஒரு லட்சத்து 94 ஆயிரத்து 449 மாற்றுத் திறனாளிகளுக்காக 58 கோடியே 33 லட்சம் ரூபாய் நிவாரண உதவியாக அவர்களின் வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டுள்ளதாகவும், தற்போதைய நிலை குறித்து அறிக்கை அளிப்பதாகவும் தெரிவித்தார்.
இதைப் பதிவு செய்த நீதிபதிகள், மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த இந்த விவகாரத்தில் மாநில அரசு உரிய நடவடிக்கை எடுக்கும் என நம்புவதாகவும், மாற்றுத் திறனாளிகளுக்கு என்ன நிவாரண உதவிகள் வழங்கப்பட்டுள்ளன, எந்தெந்த வகையினருக்கு இந்த உதவிகள் வழங்கப்பட்டுள்ளன என்பது குறித்து விரிவான அறிக்கையைத் தாக்கல் செய்ய அரசுக்கு உத்தரவிட்டு, விசாரணையை அடுத்த வாரத்துக்குத் தள்ளி வைத்தனர்.
-
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ -
சொத்து வைத்திருப்போர் அலர்ட்! 5 நாளில் இதை செய்யாவிட்டால் நில பத்திரப்பதிவில் லட்சக்கணக்கில் நஷ்டம்? -
"கோடம்பாக்கம் ஏரியா.. ஓட்டு கேட்டு வரியா".. விஜய் பாடலுக்கு நடனமாடிய அரசு பள்ளி தலைமையாசிரியை.. இப்போ வேலை போச்சே












Click it and Unblock the Notifications