Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பாட்டில் தண்ணீர் குடிப்பவரா நீங்க? லேபிளில் 'அந்த' எச்சரிக்கை! சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு

Subscribe to Oneindia Tamil

சென்னை: குடிநீர் பாட்டில்களிலும், உப்பு, சர்க்கரை பாக்கெட்களிலும் மைக்ரோ பிளாஸ்டிக் கண்டறியப்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிக்கை தாக்கல் செய்துள்ள நிலையில் அது குறித்து எச்சரிக்கை வாசகங்களை லேபிளில் இடம் பெற செய்ய வேண்டும் என FSSAI-க்கு (உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம்) சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Madras Highcourt

கோயம்புத்தூரில் உள்ள PSG மருத்துவ அறிவியல் மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், நுண்ணிய பிளாஸ்டிக்குகளால் ஏற்படும் தீய விளைவுகள் குறித்து ஒரு இடைக்கால ஆய்வு அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்ப்பித்தது.

நுண்ணிய பிளாஸ்டிக்குகள் என்பவை சிறிய பிளாஸ்டிக் துண்டுகள் என்றும், அவை பிளாஸ்டிக் தயாரிப்பில் பயன்படுத்தப்படும் பிஸ்பெனால் ஏ (BPA) உட்பட பல ரசாயனப் பொருட்களைக் கொண்டுள்ளன என்றும் அந்த அறிக்கை குறிப்பிட்டது.

நஞ்சுக் கொடியில் மைக்ரோ பிளாஸ்டிக் எனும் பிளாஸ்டிக் நுண்துகள்கள் கண்டறியப்பட்டதாக வெளியான அறிக்கையின் அடிப்படையில் சென்னை உயர்நீதிமன்றம் சிறப்பு அமர்வு தாமாக முன் வந்து வழக்கை எடுத்தது.

இந்த வழக்கு நீதிபதிகள் என்.சதீஷ்குமார், பரதசக்கரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய அரசு சார்பில் இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர ஆணையம் ஒரு அறிக்கை தாக்கல் செய்தது.

அந்த அறிக்கையில், உணவு பொருட்களை பிளாஸ்டிக் பைகளில் அடைத்து விற்பனை செய்வது தொடர்பாக ஏற்கெனவே வழிகாட்டும் விதிகளை வகுத்துள்ளோம்.

பிளாஸ்டிக் நுண்துகள்களால் ஏற்படும் பாதிப்பு குறித்து லக்னோ, கொச்சி, பிலானி ஆகிய இடங்களில் ஆராய்ச்சி நிறுவனங்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இமாச்சல் பிரதேசம், ராஜஸ்தான், சண்டிகர், கர்நாடகா உள்பட 6 மாநிலங்களில் குடிநீர் பாட்டில்களின் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆய்வு செய்தோம்.

அப்போது அதில் மைக்ரோ பிளாஸ்டிக் இருப்பது தெரியவந்தது. அது போல் பிளாஸ்டிக் பாக்கெட்களில் அடைத்து விற்கப்படும் உப்பு, சர்க்கரையிலும் மைக்ரோ பிளாஸ்டிக் இருப்பது தெரியவந்ததாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டது.

இந்த அறிக்கையை ஆய்வு செய்த நீதிபதிகள், மைக்ரோ பிளாஸ்டிக் மனிதர்களுக்கு மட்டுமல்லாமல் விலங்குகளுக்கும் தீங்கை ஏற்படுத்தும். தினந்தோறும் பயன்படுத்தும் குடிநீர் பாட்டில்களில் மைக்ரோ பிளாஸ்டிக் துகள்கள் கண்டறியப்பட்டுள்ளதால் அவற்றில் எச்சரிக்கை வாசகங்கள் இடம் பெற செய்ய வேண்டும் என குடிநீர் பாட்டிலை உற்பத்தி செய்யும் நிறுவனங்களுக்கு அறிவுறுத்த வேண்டும்.

அப்போது ஆய்வுகள் ஆரம்ப கட்டத்தில் இருப்பதால் எச்சரிக்கை வாசகங்களை இடம் பெற செய்தால் அது மக்களிடையே குழப்பத்தை ஏற்படும் என FSSAI தெரிவித்தது. இதையடுத்து ஆய்வுகளை விரைந்து முடிக்குமாறும் அதுவரை எச்சரிக்கை வாசகங்கள் சிவப்பு நிறத்தில், 10 அளவு எழுத்துருவில் கட்டாயமாக இருக்க வேண்டும் என்றும் நீதிமன்றம், குடிநீர் பாட்டில் நிறுவனங்களுக்கு உத்தரவிட்டிருந்தது.

இந்த உத்தரவை ஏற்று, மத்திய அமைச்சகமும் FSSAI-யும் நான்கு வாரங்களுக்குள் இது தொடர்பான அறிவிப்பை வெளியிட வேண்டும். மேலும், பெட் பாட்டில்கள் மற்றும் பிளாஸ்டிக் கவர்களில் குடிநீர், உப்பு, சர்க்கரை விற்கும் அனைத்து நிறுவனங்களும் புதிய லேபிளிங் விதிகளை நிச்சயம் பின்பற்ற வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட வேண்டும். ஏப்ரல் 10, 2026-க்குள், FSSAI இது குறித்த ஒரு நிலை அறிக்கையை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யவும் நீதிபதிகள் உத்தரவிடப்பட்டனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+