அதிமுக உட்கட்சி தேர்தல்.. கே.சி.பழனிசாமிக்கு வழக்கு தொடர தகுதியில்லை..தள்ளுபடி செய்த ஹைகோர்ட்
சென்னை: அதிமுக உட்கட்சி தேர்தலை எதிர்த்து முன்னாள் எம்.பி. கே சி பழனிசாமி தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அதிமுகவில் ஜெயலலிதா மறைவுக்குப்பின் சசிகலா பொதுச் செயலாளர் ஆக்கப்பட்டார். பொதுக்குழு கூடி அவரை ஓபிஎஸ்-இபிஎஸ் இருவரும் கூட்டாக தேர்வு செய்தனர். அவர் சிறைச் சென்றப்பின் அவரை கட்சியிலிருந்தும், பொதுச் செயலாளர் பதவியிலிருந்து நீக்கினர்.
கடந்த 2021ம் ஆண்டு டிசம்பர் 6ம் தேதி நடைபெற்ற அதிமுக உட்கட்சி தேர்தலில் ஒருங்கிணைப்பாளராக ஓ.பன்னீர் செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிச்சாமி ஒருமனதாக தேர்ந்ததெடுக்கபட்டனர்.

அதிமுக விதிகளில் திருத்தம்
பொதுக்குழு கட்சித்தலைமையை தேர்வு செய்யும் அதிகாரம் உள்ளது என விதி திருத்தப்பட்டது. இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகள் நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள நிலையில் டிசம்பர் 1 அன்று கூடிய செயற்குழுவில் கட்சி தலைமையை தொண்டர்களே நேர்டையாக தேர்வு செய்வர் என விதி மீண்டும் திருத்தப்பட்டது. ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர்களுக்கான அதிகாரம் அதிகரிக்கப்பட்டது. அவர்கள் தேர்வை பொதுக்குழு கேள்வி எழுப்ப முடியாது என விதிகளை திருத்தினர்.

கே.சி. பழனிச்சாமி மனு
அதிமுக உட்கட்சி தேர்தலுக்கு தடைவிதிக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் கடந்த ஆண்டு கே.சி. பழனிச்சாமி மனு தாக்கல் செய்திருந்தார். அவரது மனுவில், " 2021ஆம் ஆண்டு டிசம்பர்1 ஆம் தேதி நடந்த அதிமுகவின் செயற்குழு கூட்டத்தில் கட்சி விதிகளில் புதிய திருத்தம் கொண்டு வரப்பட்டு, ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் ஆகியோர் அடிப்படை உறுப்பினர்களால் இனி தேர்ந்து எடுக்கப்படுவார்கள் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

ஒற்றைத்தலைமை
இது ஒற்றைத் தலைமை வேண்டும் என்ற கட்சியின் நிறுவனர் மற்றும் உறுப்பினர்களின் நோக்கத்திற்கு விரோதமாக அறிவிக்கபட்டுள்ளது. உட்கட்சி தேர்தல் நடத்தும் முன்பாக 21 நாட்களுக்கு முன் நோட்டீஸ் கொடுக்க வேண்டுமென்ற விதிகள் காற்றில் பறக்கவிடப்பட்டுள்ளது. சங்கங்கள் பதிவுச் சட்டம், அதிமுக கட்சி விதிகள் ஆகியவற்றின் கீழ் தேர்தல் நடத்தும் விதிகளை பின்பற்றாமல் பொது செயலாளர் அதிகாரத்தை அபகரிக்கும் நோக்கில் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோர் செயல்படுகின்றனர். மேலும் கட்சியின் உறுப்பினர்கள் முறைபடுத்தப்படவில்லை, உறுப்பினர் அட்டை வழங்குவதில் முறைகேடு நடந்திருக்கிறது. கட்சியின் ஒன்றரை கோடி தொண்டர்களில் உட்கட்சி தேர்தலில் வாக்களிக்க தகுதியான உறுப்பினர்களின் பட்டியல் இதுவரை முறையாக தயாரிக்கப்படவில்லை.

முறையான அறிவிப்பு
எனவே அதிமுகவின் உட்கட்சி தேர்தல் அறிவிப்பை ரத்து செய்ய வேண்டும். உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி நியமித்து, தேர்தல் நடத்தும் 21 நாட்கள் முன் முறையான அறிவிப்பை வெளியிட்டு தேர்தல் நடத்த உத்தரவிட வேண்டும்" என மனுவில் கோரிக்கை விடுத்துள்ளார். அத்துடன் 2018 ஆம் ஆண்டு பிப்ரவரியில் தன்னை நீக்கிய பிறகு, ஏப்ரலில் தான் ஓ.பி.எஸ், இ.பி.எஸ். ஆகியோரை கட்சி நிர்வாகிகளாக தேர்தல் ஆணையம் அங்கீகரித்தது. எனவே தன்னை நீக்கியது செல்லாது என்ற அடிப்படையில் இந்த வழக்கை தாக்கல் செய்திருப்பதாகவும் மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

ஹைகோர்ட்டில் விசாரணை
கே.சி பழனிசாமி தொடர்ந்த வழக்கு நீதிபதி சிவி.கார்த்திகேயன் முன்பு விசாரணைக்கு வந்தபோது, ஆஜரான இ பி எஸ் தரப்பு வழக்கறிஞர், கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்ட ஒருவர் உட்கட்சி விவகாரம் குறித்து வழக்கு தொடர முடியாது என்பதால் கே சி பழனிசாமியின் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டுமென கேட்டுக்கொண்டார்.

உச்சநீதிமன்றத்தில் வழக்கு நிலுவை
இதற்கு பதிலளித்த கே சி பழனிசாமி தரப்பு வழக்கறிஞர், தம்மை நீக்கப்பட்டது குறித்து தமக்கு முறைப்படி தகவல் தெரிவிக்கவில்லை என்பதால் தமது நீக்கம் செல்லாது என கூறினார். இந்த மனு எப்படி விசாரணைக்கு உகந்தது என கேள்வி எழுப்பிய நீதிபதி இந்த விவகாரம் தொடர்பாக வேறு நீதிமன்றத்தில் மனு நிலுவையில் உள்ளதா? என கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த கே சி பழனிசாமி தரப்பு வழக்கறிஞர், தமது நீக்கத்தை எதிர்த்து தொடர்ந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதாகவும் அதிமுக உட்கட்சி தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதாகவும் கூறினார்.

கே.சி. பழனிச்சாமிக்கு தகுதியில்லை
இதனையடுத்து உத்தரவு பிறப்பித்த நீதிபதி, உட்கட்சி தேர்தலை எதிர்த்து கே சி பழனிசாமி மனுத்தாக்கல் செய்ய அவருக்கு தகுதியில்லை என்பதால் அவரது மனுவை தள்ளுபடி செய்வதாக கூறினார். மேலும் இந்த விவகாரம் தொடர்பாக கீழமை நீதிமன்றங்களில் உள்ள வழக்குகளை அந்தந்த நீதிமன்றங்கள் விசாரித்து முடிவெடுக்கலாம் என நீதிபதி சி.வி. கார்த்திகேயன் தனது உத்தரவில் தெரிவித்துள்ளார்.
-
அடுத்து ராஜினாமாவுக்கு ரெடியாகும் 3 தலைகள்.. ’மறுமலர்ச்சி’யுடன் விஜய்! பனையூர் போட்ட பக்கா ஸ்கெட்ச்! -
அதிமுகவில் உடைந்த அடுத்த செங்கல்.. சனிக்கிழமை பனையூரில் மெயின் புள்ளி! இவரா? பரபர புதுக்கோட்டை! -
அதிமுக எம்எல்ஏக்கள் 4 பேர் ராஜினாமா.. குதிரை பேரமா? ஐகோர்ட் கேட்ட கேள்வி! தீர்ப்பு ஒத்திவைப்பு -
அந்த மூவரையும் சேர்க்காதீங்க.. தடுக்கும் நிர்மல்குமார்.. மதுரை தவெகவில் நடப்பது என்ன? -
தண்ணீர் பாட்டில் வீசுனாங்க.. ஆனால் இன்னைக்கு! ஓபிஎஸ் சொன்னதுமே ஸ்டாலின் கொடுத்த ரியாக்ஷன் -
4 சட்டமன்ற தொகுதிகளில் இடைத்தேர்தலுக்கு தடை விதிக்க முடியாது - சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி -
வயிறு எரியுது! விஜய்யிடம் சரணடைவதை விட உயிரை விடலாம்! விஜயபாஸ்கர் மீது ஆர்பி உதயகுமார் கடும் தாக்கு! -
போலீஸே உடலை அடக்கம் பண்ணிடும்! ஆகாஷ் வழக்கில் நீதிமன்றம் எச்சரிக்கை! விடாப்பிடியாய் பெற்றோர்! பரபர -
100 நாள் ஆச்சு.. இன்று மாலைக்குள் ஆகாஷ் உடலை வாங்குங்க.. பெற்றோருக்கு கெடு விதித்த ஐகோர்ட்! -
அதிமுக 4 எம்எல்ஏக்கள் ராஜினாமா செல்லுமா? எடப்பாடி பழனிசாமி வழக்கு! சென்னை ஹைகோர்ட்டில் நாளை விசாரணை -
எடப்பாடி பழனிசாமிக்கு ஷாக்.. விஜயபாஸ்கரை தொடர்ந்து அதிமுகவில் இருந்து விலகிய ஆர்.வி.உதயகுமார் -
"மதிக்காத இடத்தில் பயணம் சாத்தியமா" அதிமுகவில் இருந்து விலகுவதை சூசகமாக சொன்ன விஜயபாஸ்கர்?












Click it and Unblock the Notifications