அரசு நிலத்தை ஆக்கிரமித்து வீடு கட்டினால்.. 10 மடங்கு மின் கட்டணம்.. சென்னை ஐகோர்ட் அதிரடி
அரசு நிலங்கள் ஆக்கிரமிக்கப்படுவதைத் தடுக்க சென்னை உயர்நீதிமன்றம் புதிய யோசனை கொடுத்துள்ளது.
சென்னை: அரசு நிலத்தை ஆக்கிரமித்து வீடுகள் கட்டியுள்ளவர்களிடம் 10 மடங்கு மின் கட்டணம் வசூலிக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாடு முழுக்க பல்வேறு இடங்களில் அரசு நிலங்களை ஆக்கிரமித்து பலரும் வீடு கட்டியுள்ளதாகப் புகார்கள் உள்ளன. பொதுவாக இதுபோன்ற சம்பவங்களில் சம்பந்தப்பட்டவர்களை காலி செய்ய வைப்பது எளிதான காரியம் இல்லை.
இந்த விவகாரத்தில் தமிழ்நாடு அரசு கடுமையான நடவடிக்கை எடுக்கும் போதிலும், அரசின் இடங்களை ஆக்கிரமித்து வீடுகளைக் கட்டுவது தொடர்ந்து கொண்டே தான் இருக்கிறது.

வழக்கு
இதனிடையே ஆக்கிரமித்துக் கட்டப்படும் வீடுகள் தொடர்பான வழக்கில் நீதிமன்றம் அதிரடி உத்தரவு ஒன்றைப் பிறப்பித்து உள்ளது. திருவள்ளூர் மாவட்டம், திருமுல்லைவாயிலில் நிலத்தை ஆக்கிரமித்துக் கட்டியுள்ள வீட்டை காலி செய்யும்படி, ஆவடி தாசில்தாரர் அனுப்பிய நோட்டீசை எதிர்த்து கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்ட மூன்று பேர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

10 மடங்கு கட்டணம்
இந்த வழக்கு நீதிபதிகள் வைத்தியநாதன் மற்றும் சத்தியநாராயண பிரசாத் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு நிலம் ஆக்கிரமிக்கப்படுவதைத் தடுக்க, ஆக்கிரமிப்பாளர்களுக்கு 10 மடங்கு மின் கட்டணம் வசூலிக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்தனர். மேலும் இது சம்பந்தமாகச் சட்டத்திருத்தம் கொண்டு வர வேண்டும் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

நீதிபதி அதிருப்தி
பின்னர், 10 மடங்கு மின் கட்டணம் செலுத்தத் தயாராக இருந்தால், வீட்டை காலி செய்ய பிறப்பித்த நோட்டீசுக்கு இடைக்கால தடை விதிப்பதாக தெரிவித்த நீதிபதிகள், அதுகுறித்து மனுத்தாக்கல் செய்ய மனுதாரர் தரப்புக்கு உத்தரவிட்டனர். அதன்படி, 10 மடங்கு மின் கட்டணம் செலுத்த தயாராக இருப்பதாக மனுதாரர்கள் தரப்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்ட நிலையில், குறிப்பிட்ட அந்த நிலம் பட்டா நிலம் எனத் தெரிவிக்கப்பட்டது.

சென்னை ஐகோர்ட்
இதையடுத்து, குறிப்பிட்ட அந்த நிலத்தை அளந்து ஆக்கிரமிப்புகள் உள்ளதா என அறிக்கை தாக்கல் செய்ய ஆவடி தாசில்தாரருக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையைத் தள்ளிவைத்தனர். அரசு நிலங்கள் ஆக்கிரமிக்கப்படுவது அதிகரித்து வருவதாகச் சொல்லப்படும் நிலையில், நிலம் ஆக்கிரமிக்கப்படுவதைத் தடுக்க, ஆக்கிரமிப்பாளர்களுக்கு 10 மடங்கு மின் கட்டணம் வசூலிக்க வேண்டும் என்று சென்னை ஐகோர்ட் சொல்லியுள்ளது முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.
-
இனி யாரும் தப்ப முடியாது.. 16 நாட்களில் 16 ஆயிரம் வழக்குகள்.. ரூ.3.13 கோடி வசூல்! -
தமிழகத்தில் ஒவ்வொருவரின் மீது ரூ.1.28 லட்சம் கடன் இருக்கு.. அரசு சொன்னதுமே காசோலையில் செலுத்திய வழக்கறிஞர் -
உதயமாகும் "தமிழ்நாடு கரப்பான் பூச்சி ஜனதா கட்சி.." தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்ய விண்ணப்பம்! -
ஆண்டுக்கு ரூ.67,000 கோடி வட்டி கட்டும் தமிழ்நாடு.. வெள்ளை அறிக்கையில் தகவல் -
நடுக்கடலில் உயிரிழந்த தமிழக மாலுமி.. 3 நாட்களுக்கு பிறகு ஒரு வழியாக மீட்கப்பட்ட உடல்! என்ன நடந்தது? -
அதிமுக எம்எல்ஏக்கள் 4 பேர் ராஜினாமா.. குதிரை பேரமா? ஐகோர்ட் கேட்ட கேள்வி! தீர்ப்பு ஒத்திவைப்பு -
"தமிழ்நாட்டின் வருவாயில் 3-ல் 1 ரூபாய் வட்டிக்கு மட்டுமே செல்கிறது.." வெள்ளை அறிக்கை ரிப்போர்ட் -
4874 EV சார்ஜிங் நிலையங்கள் ரூ.2000 கோடியில்! தமிழகத்தில் எங்கே தெரியுமா? மத்திய அரசின் மாஸ் பிளான் -
தமிழக நிதிநிலை கவலைக்கிடம்?.. கடன் வளர்ச்சி 14.3%.. வெள்ளை அறிக்கை தகவல் -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?"












Click it and Unblock the Notifications