சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கோவையில் சாதி மறுப்பு திருமணம் செய்த தம்பதியை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த ஹைகோர்ட் உத்தரவு

By Sivam
Google Oneindia Tamil News

சென்னை: கோவையில் சாதி மறுப்பு திருமணம் செய்ததால் கடத்தப்பட்ட பெண்ணை மீட்டுத்தரக்கோரி அவரது கணவர் தொடர்ந்த ஆட்கொணர்வு மனுவில் காவல்துறை பாதுகாப்புடன் இருவரையும் கோவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

கோவையில் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்த கார்த்திகேயன் என்பவருக்கும் உடன் வேலை பார்த்த சக்தி தமிழினி என்பருக்கும் கடந்த 5 ஆம் தேதி சாதி மறுப்பு திருமணம் நடைபெற்றது.

Madras High Court has ordered women to appear before the court , who got love married

இவர்களின் காதல் திருமணத்திற்கு சக்தியின் பெற்றோர் கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், கடந்த 19 ஆம் தேதி வீட்டில் இருந்த கார்த்திகேயன் மற்றும் அவருடைய தாயை தாக்கி சக்தி கடத்தப்பட்டார்.

சக்தியை மீட்டுத்தரக்கோரி துடியலூர் காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்ட நிலையில் தற்போது சென்னை உயர் நீதிமன்றத்தில் கார்த்திகேயன் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்துள்ளார்.

அதில், சக்தியின் தந்தை அடியாட்களை கொண்டு தன்னையும் தன் தாயையும் தாக்கி சக்தியை கடத்தி சென்றதாகவும் , தற்போது சக்திக்கு வேறு திருமணம் நடத்த அவர்களுடைய பெற்றோர்கள் முயற்சித்து வருவதாக தெரிவித்துள்ளார்.

சாத்தான்குளம் மரணம்: போலீஸ் ஸ்டேசனில் இருந்த அனைவரும் கூண்டோடு ட்ரான்ஸ்பர் - 30 பேர் நியமனம்சாத்தான்குளம் மரணம்: போலீஸ் ஸ்டேசனில் இருந்த அனைவரும் கூண்டோடு ட்ரான்ஸ்பர் - 30 பேர் நியமனம்

மேலும், தனி அறையில் அடைக்கப்படுள்ள தன் மனைவியின் உயிருக்கு ஆபத்து இருப்பதால் அவரை உடனே மீட்டு தர காவல்துறைக்கு உத்தரவிட வேண்டும் எனவும் அவர் கோரிக்கை வைத்துள்ளார்.

இந்த மனு நீதிபதி எம் எம் சுந்தரேஷ் மற்றும் நீதிபதி கிருஷ்ணகுமார் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. ஒரு வாரத்திற்குள் கோவை மாவட்ட நடுவர் நீதிமன்றத்தில் இருவரும் ஆஜராக உத்தரவிட்ட நீதிபதிகள் இருவருக்கும் இ-பாஸ் வழங்க வேண்டும்; தகுந்த காவல்துறை பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் இருவரிடம் தனியாக விசாரணை நடத்தி கோவை நடுவர் நீதிமன்ற நீதிபதி உத்தரவு பிறப்பிக்க வேண்டும்.

English summary
The Madras High Court has ordered wife to appear before the court in a petition filed by the husband who got love married
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X