ஜோதிடத்துக்கு யாரும் அடிமையாகக்கூடாது.. ஜோதிட புத்தக வெளியிட்டு விழாவில் நீதிபதி பரபரப்பு பேச்சு

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆர்எம்டி.டீக்காராமன் ஜோதிடம் தொடர்பான புத்தக வெளியீட்டு நிகழ்ச்சியில் பேசுகையில், ஜோதிடத்தை ஒரு பக்கம் நம்பினாலும், வெற்றி பெற நாமும் முயற்சி செய்ய வேண்டும். ஜோதிடத்துக்கு யாரும் அடிமையாகக்கூடாது. ஜோதிடம் என்பது ஒரு வழிகாட்டி. அது ஒரு 'டார்ச்லைட்' போன்றது என்றார்.

சென்னையில் நடந்த ஜோதிடம் தொடர்பான புத்தக வெளியீட்டு நிகழ்ச்சியில் உயர்நீதிமன்ற நீதிபதி ஆர்எம்டி.டீக்காராமன் கலந்து கொண்டு பேசினார். அப்போது நிகழ்ச்சியில் நீதிபதி ஆர்எம்டி.டீக்காராமன் பேசுகையில், " ஜோதிடம் என்பது எனக்கு கிட்டத்தட்ட 38 வருசமாக ஒரு பொழுதுபோக்காக உள்ளது. நான நீதிபதி பணி சுமையில் இருப்பதால் சில ஆண்டுகளாக இதை பின்பற்றவே முடியவில்லை. எனக்கு தெரிந்த வகையில், ஜோதிடம் என்பது பல்வேறு விதமாக பஞ்சாங்கங்களின் அடிப்படையில் இருக்கிறது. இதில், கோவிலுக்கு எந்த பஞ்சாங்கம், தனி மனிதனுக்கு என்ன பஞ்சாங்கம்? என்று குழப்பம் எழுந்தபோது, இதற்கு காஞ்சி பெரியவர்தான் தீர்வுகளை கண்டார்.

Madras High Court judge r.m.t.teekaraman speaking at a book launch event related to astrology said that even if one side believes in astrology, we should also try to win. He said that no one should be addicted to astrology.

சில ஆண்டுகளுக்கு முன்பு ஜோதிடத்தில் மூட நம்பிக்கை அதிகம் உள்ளது என்றும், அறிவியல்பூர்வமானதை மட்டுமே ஏற்றுக் கொள்ள வேண்டும் என்ற எண்ணம் சமுதாயத்தில் உருவாகியது. எனினும் ஏராளமான ஜோதிடங்கள் புதிதாக உருவாகின. அதில் ஒன்று பிரபஞ்ச ஜோதிடம். இந்த ஜோதிடத்தின் அடிப்படையில், சென்னை மாநகரம் பிரிக்கப்பட்டது. சென்னையில் விருச்சிக ராசி எங்கு உள்ளது? கும்பராசி எங்கு உள்ளது? விமானம் ஏன் அங்கு நிறுத்தப்படுகிறது? ரயில் பெட்டி தொழிற்சாலை ஏன் இங்கு உள்ளது? என்றெல்லாம் உடனே ஜோதிடத்தில் ஆராயப்பட்டது.

நெல்லைக்கு வசந்தன் என்ற ஜோதிடர் இலங்கை ஊடகத்துக்கு அளித்த பேட்டியில், இந்த சம்பவம் இந்த காலக்கட்டத்தில் நடக்கும் என்று ஜோதிடர் கூறியதை அப்படியே நம்பிக் கொண்டு சும்மா உட்காந்து இருந்தால், அவர்கள் எல்லாம் ஜோதிடத்துக்கு அடிமையானவர்கள் என்றார். எனவே அதுபோலத்தான் ஜோதிடத்தில் உள்ள மூடநம்பிக்கையை நான் ஒருபோதும் ஏற்றுக் கொள்ளக்கூடாது.

எந்த ஒரு விஷயமும் அறிவியல்பூர்வமாக ஏற்றுக் கொள்ளப்படுகிறதோ? நம்முடைய அறிவியல் அறிவுக்கு ஏற்றுக் கொள்ளக்கூடியதாக உள்ளதோ அதை மட்டும் நாம் ஏற்று கொள்ள வேண்டும். அதற்கு மேல் உள்ளதை மூட நம்பிக்கை என்று நாம் அதனை ஒதுக்கி தள்ளிட விட வேண்டும்.

நாம் ஜோதிடத்தை ஒரு பக்கம் நம்பினாலும், வெற்றி பெற நாமும் முயற்சி செய்ய வேண்டும். ஜோதிடத்துக்கு யாரும் அடிமையாகக்கூடாது. ஜோதிடம் என்பது ஒரு வழிகாட்டி. அது ஒரு 'டார்ச்லைட் போன்றது. இவையெல்லாம் என்னுடைய தனிப்பட்ட கருத்து" இவ்வாறு நீதிபதி பேசினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+