Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சென்னை பெண் வக்கீலின் வீடியோ.. கலங்கிய நீதிபதி.. மத்திய அரசுக்கு 2வதாக போட்ட அதிரடி உத்தரவு

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை பெண் வக்கீலின் வீடியோ 70-க்கும் மேற்பட்ட இணையதளங்களில் சிலரால் பகிரப்பட்டுள்ளது. இது தொடர்பாக வழக்கை வழக்கை விசாரித்த ஐகோர்ட் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் கண் கலங்கினார். . 48 மணி நேரத்தில் அந்த வீடியோவை இணையதளங்களில் இருந்து நீக்க மத்திய அரசுக்கு உத்தரவு பிறப்பித்தார். ஆனால் அந்த வீடியோக்களை நீக்க இயலாது என தெரிவிக்கப்பட்ட நிலையில், பெண் வக்கீலின் அந்தரங்க வீடியோ இடம் பெற்றுள்ள இணையதளங்களை மத்திய அரசு முடக்க வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

சென்னையைச் சேர்ந்த பெண் வக்கீலான ஒருவர், கல்லூரியில் படித்தபோது திருமணம் செய்து கொள்வதாக உறுதி அளித்த காதலனுடன் நெருக்கமாக இருந்திருக்கிறார். இந்த வீடியோ 70-க்கும் மேற்பட்ட இணையதளங்களில் மர்ம நபர்களால் பகிரப்பட்டுள்ளது. இதுகுறித்து அறிந்த பெண் வக்கீலின் நண்பர்கள் அவரிடம் கூறியுள்ளார்கள். இந்த வீடியோக்களை முடக்கி நீக்கவும், எதிர்காலத்தில் இணையதளங்களில் பகிரப்படாமல் தடுக்கவும் நடவடிக்கை எடுக்கக்கோரி மத்திய அரசிடம் பெண் வக்கீல் புகார் அளித்துள்ளார். ஆனால், மத்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது.

Madras High Court orders blocking of websites that shared video of Chennai woman lawyer

பெண் வக்கீல் கோரிக்கை

இதைத்தொடர்ந்து, அந்த வீடியோவை இணையதளத்தில் இருந்து நீக்க மத்திய அரசுக்கு உத்தரவிடக்கோரி பெண் வக்கீல் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்னிலையில் கடந்த 9ம் தேதி விசாரணைக்கு வந்தது.
பெண் வக்கீல் சார்பில் ஆஜரான மூத்த வக்கீல் அபுடுகுமார் ராஜரத்தினம் வாதிடுகையில், "சம்பந்தப்பட்ட வீடியோவை நீக்கக்கோரி மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்தோம். ஆனால் வீடியோ நீக்கப்படாததால் பெண் வக்கீல் மிகுந்த மன உளைச்சலுக்கு உள்ளாகி உள்ளார்.
இதுபோன்ற விஷயங்களில் விரைந்து நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். அந்த அடிப்படையில் உடனடியாக வீடியோவை இணையதளத்தில் இருந்து நீக்க மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும்" என்றார்.

நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ்

வழக்கை விசாரித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், '70-க்கும் மேற்பட்ட இணையதளங்களில் பகிரப்பட்டுள்ள அந்த வீடியோவை 48 மணி நேரத்தில் நீக்க வேண்டும்' என மத்திய அரசுக்கு உத்தரவிட்டார். இதுபோன்ற விவகாரங்களில் விரைந்து நடவடிக்கை மேற்கொள்ளும் வகையில் தமிழக காவல்துறையினருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த தமிழக டி.ஜி.பி. உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார்.

மத்திய அரசுக்கு உத்தரவு

இந்த உத்தரவை அமல்படுத்தியது குறித்த அறிக்கையை மத்திய அரசு தரப்பில் வருகிற 14-ந் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும் எனக்கூறி விசாரணையை அன்றைய தினக்கு நீதிபதி தள்ளிவைத்திருந்தார். விசாரணையின்போது நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் கூறும் போது, அதிர்ஷ்டவசமாக மனுதாரர் வக்கீலாக இருப்பதால் அவரால் தனக்கு நேர்ந்த கொடுமையை எதிர்த்து போராட முடிந்தது. இதனால் அவருக்கு நம்மால் உதவ முடிந்தது. இவ்வாறு போராட முடியாதவர்களின் நிலை எப்படி இருக்கும்? என்பதை யோசிக்க முடியவில்லை. ஒவ்வொரு தனிநபரின் அடிப்படை உரிமையான கண்ணியத்தை உறுதி செய்வது அரசு மற்றும் நீதிமன்றங்களின் கடமை என்று தெரிவித்தார்.

கலங்கிய நீதிபதி

மேலும், சம்பந்தப்பட்ட பெண் வக்கீலை நேரில் சந்தித்து அவருக்கு தைரியம் அளிக்க விரும்புவதாக கூறிய நீதிபதி, கண்கலங்கி உணர்ச்சிவசப்பட்டார். இந்தநிலையில் மாலையில் அந்த பெண் வக்கீல், நீதிபதி ஆனந்த் வெங்கடேசை அவரது அறையில் நேரில் சந்தித்தார். அப்போது பெண் வக்கீல் தனக்கு நடந்த சம்பவத்தை நீதிபதியிடம் எடுத்துக்கூறினார். இதைத்தொடர்ந்து பெண் வக்கீலுக்கு நீதிபதி தைரியமூட்டி அனுப்பி வைத்திருந்தார்.

இணையதளங்களை முடக்க உத்தரவு

இந்த நிலையில், இந்த வழக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய அரசு தரப்பில் ஆஜரான வக்கீல், "பெண் வக்கீல் தொடர்பான வீடியோக்களை இணையதளங்களில் இருந்து நீக்க இயலாது. அந்த வீடியோ காட்சிகளை நீக்க சம்பந்தப்பட்ட இணையதளங்களுக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது" என்று தெரிவித்தார். இதை பதிவு செய்து கொண்ட நீதிபதி, "பெண் வக்கீல் தொடர்பாக வீடியோ, புகைப்படங்கள் 70 இணையதளங்களில் இடம் பெற்றுள்ளன. இந்த வீடியோ, புகைப்படங்கள் இடம் பெற்றுள்ள அனைத்து இணையதளங்களையும் மத்திய அரசு முடக்க வேண்டும்" என்று அதிரடியாக உத்தரவிட்டார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+