Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

லைக், கமாண்ட்டிற்காக பைக் ரேசில் ஈடுபடும் இளைஞர்கள்.. போலீசுக்கு ஐகோர்ட் அதிரடி உத்தரவு

Subscribe to Oneindia Tamil

சென்னை: பைக், கார் ரேசில் ஈடுபடுவோரில் பெரும்பாலும் 18 முதல் 25 வயதுக்கு உட்பட்டவர்கள்தான் என்று அரசு தரப்பு வழக்கறிஞர் கூறுகிறார். அந்த வயதில் அவர்கள் மனதளவில் போதிய பக்குவம் இல்லாமல் செயல்படுகிறார்கள்..எனவே பைக் ரேசில் ஈடுபடும் இளைஞர்களை கிரிமினல்களாக முத்திரை குத்தக்கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னையில் ஆர்.கே. சாலையில் இருசக்கர வாகன ரேஸில் ஈடுபட்டு பொதுமக்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தியதாக 2 இளைஞர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளார்கள். இந்நிலையில் தங்கள் மீது பதியப்பட்டுள்ள இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் இருவரும் மனு தாக்கல் செய்தனர்.

Madras High Court orders police not to brand youths who engage in bike race as criminals

இந்த மனு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, சென்னை மாநகர போக்குவரத்து இணை போலீஸ் கமிஷனர் என்.தேவராணி, துணை போலீஸ் கமிஷனர் பி.குமார் ஆகியோர் ஆஜராகி பைக் ரேஸ் வழக்குகள் தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்தனர்.

அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: சென்னையில் மெரினா கடற்கரையை ஒட்டிய காமராஜர் சாலை, கிழக்கு கடற்கரை சாலை, வடபழனி 100 அடி சாலை உள்ளிட்ட முக்கிய சாலைகளில் இளைஞர்கள் இருசக்கர வாகனத்தில் சென்று அடிக்கடி பந்தயத்தில் ஈடுபடுகின்றனர். இதை தடுப்பதற்கு போக்குவரத்து காவல்துறை சார்பில் சிறப்பு கவனம் எடுத்து செயல்பட்டு வருகிறோம்..

காமராஜர் சாலை, கிழக்கு கடற்கரை சாலை, வடபழனி 100 அடி சாலை உள்பட முக்கிய சாலைகளில் போக்குவரத்து போலீஸ் சார்பில் அடிக்கடி வாகனச் சோதனையில் ஈடுபடுகிறோம். மேலும் சனி, ஞாயிறு மற்றும் பண்டிகை விடுமுறை நாட்களில் சிறப்பு படை அமைத்து பைக் ரேஸ் நடைபெறாமல் தடுக்க முயற்சிக்கிறோம். மேலும் கண்காணிப்பு கேமராக்கள் மூலம் படம் எடுத்து நடவடிக்கை எடுக்கிறோம். வழக்கமான இந்த பைக் ரேஸ் குற்ற செயல்களில் ஈடுபடுவோர் குறித்து விவரங்கள் சேகரித்து வைத்துள்ளோம். அவர்கள் தீவிரமாக கண்காணிக்கப்படுகிறார்கள். இவர்களிடம் இருந்து, இனி இதுபோன்ற செயல்களை செய்யமாட்டோம் என்று 104 உத்தரவாதம் மனுக்கள் எழுதி வாங்கி வைத்திருக்கிறோம்..

பைக் ரேஸில் ஈடுபடுவோர் 18 வயதுக்கு குறைவானவர்கள் என்றால், அவர்களது பெற்றோரை அழைத்து தகவல் தெரிவிக்கின்றோம். மேலும் இளைஞர்களுக்கு உளவியல் கவுன்சிலிங் வழங்குகிறோம். இவர்களின் இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதள பக்கங்களையும் தீவிரமாக கண்காணிக்கிறோம். இவ்வாறு கண்காணித்து 21 வழக்குகள் பதிவு செய்திருக்கிறோம். பைக் ரேசில் ஈடுபட்டதாக 2022-ம் ஆண்டு முதல் இதுவரை 26 மோட்டார் சைக்கிள்களை பறிமுதல் செய்துள்ளோம். சென்னையில் பைக் ரேஸில் ஈடுபட்டதாக 2022ம் ஆண்டு முதல் இதுவரை 47 பேரை கைது செய்துள்ளோம் என அதிகாரிகள் அறிக்கையில் குறிப்பிட்டிருந்தனர்.

இந்த அறிக்கையை படித்து பார்த்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் உத்தரவில் குறிப்பிடுகையில், பைக் ரேஸ் , கார் ரேசில் ஈடுபடுவோரில் பெரும்பாலும் 18 முதல் 25 வயதுக்கு உட்பட்டவர்கள்தான் என்று மாநில தலைமை அரசு குற்றவியல் வழக்கறிஞர் அசன்முகமது ஜின்னா கூறினார். இந்த வயதில், ஹார்மோன்கள் பிடியில், மனதளவில் போதிய பக்குவம் இல்லாமல், அவர்கள் செயல்படுகிறார்கள்.

அதுமட்டுமல்ல அதிக திறன் கொண்ட மோட்டார் சைக்கிள்கள் சந்தையில் எளிதில் அவர்களுக்கு கிடைக்கிறது. அதுமட்டுமல்லாமல், சமூக வலைதளங்களின் தாக்கம், இதுபோன்ற சாகசங்களை செய்யத் தூண்டுகிறது. சமூக வலைதள பக்கங்களில் லைக், கமாண்ட்டிற்காக அந்த சாகசத்தை சமூக வளைதளங்களில் போட்டு, தன்னுடைய ஹீரோயிசத்தையும் காட்டுகிறார்கள்.

இவர்களை எல்லாம் கிரிமினல்களாக முத்திரை குத்தக்கூடாது. இந்த குற்றச்செயல்களை செய்வதில் இருந்து அவர்களை தடுக்க ஒரு திட்டத்தை உருவாக்க வேண்டும். பைக் ரேசில் ஈடுபடுவதால் ஏற்படும் பின்விளைவுகளை அவர்களுக்கு புரியும் படியாக எடுத்துக்கூறி விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

இதுபோன்ற சீர்திருத்த நடவடிக்கைகளை போலீசார் மேற்கொண்டால் பைக் ரேஸ் சம்பவங்களும் வெகுவாக குறைந்து விடும். பைக் ரேசில் ஈடுபடும் நபர்கள் மீதான வழக்குகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் எதிர்காலத்தில் இதுபோன்ற வழக்குகளை கையாள தேவையான நடைமுறைகளை உருவாக்க வேண்டும் என்றார். மேலும் அடுத்த கட்ட வழக்கு விசாரணையை ஏப்ரல் 24-ந்தேதிக்கு தள்ளிவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+